Chapter 10

Result of love sickness - (கார்க்கோடற் பூக்காள்)

காதல்-நோய் செய்த பரிசு
Result of love sickness - (கார்க்கோடற் பூக்காள்)
"O Kanthal flowers! Where is Krishna, who has a blue hue like yours? O vine bearing fruits like Krishna’s ruby lips! Everyone calls him Sathyavadi (truthful), but has he changed in my matter? O Mullai vine that reminds me of Krishna’s smile! Do not appear before me and cause me sorrow! O cuckoos! What is this noise? Can you not sing so that Lord Venkatesa + Read more
காந்தள் மலர்களே! உங்களைப் போன்ற நீலவண்ணன் கண்ணன் எங்கே? கண்ணனின் பவள வாயைப் போன்ற பழங்களைக் கொண்ட கொடியே! அவனை சத்யவாதி என்று எல்லோரும் கூறுகின்றனர். என் விஷயத்தில் மாறிவிட்டானோ? கண்ணனின் புன்முறுவலை நினைவூட்டும் முல்லைக் கொடியே! என் எதிரில் தோன்றி என்னை வருத்தாதே! குயில்களே! ஈதென்ன + Read more
Verses: 597 to 606
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Will be able to see the Lord
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

NAT 10.1

597 கார்க்கோடல் பூக்காள்! கார்க்கடல்வண்ணனென்மேல் * உம்மைப்
போர்க்கோலம்செய்து போரவிடுத்தவனெங்குற்றான் *
ஆர்க்கோஇனிநாம் பூசலிடுவது? * அணிதுழாய்த்
தார்க்கோடும்நெஞ்சந்தன்னைப் படைக்கவல்லேனந்தோ. (2)
597 ## கார்க்கோடல் பூக்காள் * கார்க்கடல் வண்ணன் என்மேல் * உம்மைப்
போர்க் கோலம் செய்து * போர விடுத்தவன் எங்கு உற்றான்? **
ஆர்க்கோ இனி நாம் * பூசல் இடுவது? * அணி துழாய்த்
தார்க்கு ஓடும் நெஞ்சந் தன்னைப் * படைக்க வல்லேன் அந்தோ (1)
597 ## kārkkoṭal pūkkāl̤ * kārkkaṭal vaṇṇaṉ ĕṉmel * ummaip
pork kolam cĕytu * pora viṭuttavaṉ ĕṅku uṟṟāṉ? **
ārkko iṉi nām * pūcal iṭuvatu? * aṇi tuzhāyt
tārkku oṭum nĕñcan taṉṉaip * paṭaikka valleṉ anto (1)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

597. O flowers that bloom in the monsoon, did the dark ocean-colored god send you as warriors to fight with me? Where did he go? To whom can I complain? I cannot fight my heart longs for His beautiful thulasi garland.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கார்க்கோடல் கறுத்த காந்தள்; பூக்காள்! பூக்களே!; உம்மை உங்களை; போர் யுத்தத்திற்கு ஏற்றபடி; கோலம் செய்து அலங்கரித்து; என் மேல் என் மேலே; போர பாயும்படி; விடுத்தவன் அனுப்பிய; கார்க்கடல் கறுத்த கடல் நிற; வண்ணன் வண்ணன்; எங்கு உற்றான்? எங்கே இருக்கின்றான்?; இனி நாம் இனி நான்; ஆர்க்கோ யாரிடத்தில் போய்; பூசல் முறையிட்டு; இடுவது கொள்வேன்; அணி துழாய் அழகிய துளசி; தார்க்கு மாலைக்கு; தன்னை ஆசைப்பட்டு; ஓடும் நெஞ்சம் ஓடும் மனத்தை; படைக்க வல்லேன் கொண்டிருக்கிறேனே
kārkkoṭal oh black jasmine; pūkkāl̤! flowers!; vaṇṇaṉ the Lord; kārkkaṭal with dark ocean colored hue; kolam cĕytu has decorated; ummai you; por to be suitable for war; viṭuttavaṉ and sent; pora to leap; ĕṉ mel on me; ĕṅku uṟṟāṉ? where is He?; iṉi nām now; ārkko to whom shall I go; pūcal to plead; iṭuvatu with; paṭaikka valleṉ I have; oṭum nĕñcam the heart that; taṉṉai longs for; aṇi tuḻāy the beautiful tulsi; tārkku garland

NAT 10.2

598 மேற்றோன்றிப்பூக்காள் மேலுலகங்களின்மீதுபோய் *
மேற்றோன்றும்சோதி வேதமுதல்வர்வலங்கையில் *
மேற்றோன்றுமாழியின் வெஞ்சுடர்போலச் சுடாது * எம்மை
மாற்றோலைப்பட்டவர்கூட்டத்து வைத்துக்கொள்கிற்றிரே.
598 மேல் தோன்றிப் பூக்காள் * மேல் உலகங்களின் மீது போய் *
மேல் தோன்றும் சோதி * வேத முதல்வர் வலங்கையில் **
மேல் தோன்றும் ஆழியின் * வெஞ்சுடர் போலச் சுடாது * எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து * வைத்துக்கொள்கிற்றிரே? (2)
598 mel toṉṟip pūkkāl̤ * mel ulakaṅkal̤iṉ mītu poy *
mel toṉṟum coti * veta mutalvar valaṅkaiyil **
mel toṉṟum āzhiyiṉ * vĕñcuṭar polac cuṭātu * ĕmmai
māṟṟolaip paṭṭavar kūṭṭattu * vaittukkŏl̤kiṟṟire? (2)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

598. O thondri (Malabar glory lily) flowers blooming high, do not grow to the sky and burn me like the brightness of the discus (chakra) that is in His hands, the ancient god praised by the Vedās and who resides in Sri Vaikuntam. Instead, will you take me to the gathering of kaivalya nishtars? The implied meaning is that instead of suffering like this, being separated from emperumAn, it will be better to experience oneself in kaivalya Mokshām.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
மேல் தோன்றி உயரப் பூத்துள்ள காந்தள்; பூக்காள்! மலர்களே!; மேல் உலகங்களின் மேலுள்ள உலகங்களை; மீது போய் கடந்து; மேல் பரமபதத்தில்; தோன்றும் சோதி இருக்கும் சோதியான; வேத முதல்வர் வேதபுருஷனின்; வலங்கையில் வலது கரத்தில்; மேல் தோன்றும் இருக்கும்; ஆழியின் சக்கரத்தின்; வெஞ்சுடர் போல ஒளிபோல்; சுடாது சுடாமல்; எம்மை என்னை; மாற்றோலை மேலுலகம்; பட்டவர் சென்றவர்; கூட்டத்து வைத்து கூட்டத்தில்; கொள்கிற்றிரே? சேர்த்துதிடுவீர்களோ?
mel toṉṟi oh full bloom jasmine; pūkkāl̤! flowers; cuṭātu please do not burn me; toṉṟum coti likes the light; mel in the supreme abode; mītu poy that goes beyond; mel ulakaṅkal̤iṉ the worlds above; vĕñcuṭar pola like the light the shines; āḻiyiṉ from the discus; mel toṉṟum that is on; valaṅkaiyil the right hand; veta mutalvar of the Lord described in the vedas; kŏl̤kiṟṟire? are you sending; ĕmmai me; kūṭṭattu vaittu to the gathering; māṟṟolai of Kaivalya; paṭṭavar nishtars

NAT 10.3

599 கோவைமணாட்டி! நீயுன்கொழுங்கனிகொண்டு * எம்மை
ஆவிதொலைவியேல் வாயழகர்தம்மையஞ்சுதும் *
பாவியேன்தோன்றிப் பாம்பணையார்க்கும்தம்பாம்புபோல் *
நாவுமிரண்டுள வாய்த்து நாணிலியேனுக்கே.
599 கோவை மணாட்டி * நீ உன் கொழுங்கனி கொண்டு * எம்மை
ஆவி தொலைவியேல் * வாயழகர் தம்மை அஞ்சுதும் **
பாவியேன் தோன்றிப் * பாம்பு அணையார்க்கும் தம் பாம்புபோல் *
நாவும் இரண்டு உள ஆய்த்து * நாணிலியேனுக்கே (3)
599 kovai maṇāṭṭi * nī uṉ kŏzhuṅkaṉi kŏṇṭu * ĕmmai
āvi tŏlaiviyel * vāyazhakar tammai añcutum **
pāviyeṉ toṉṟip * pāmpu aṇaiyārkkum tam pāmpupol *
nāvum iraṇṭu ul̤a āyttu * nāṇiliyeṉukke (3)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

599. O kovai vine, you are like my mother! with your sweet round fruits that remind me of his dark color. you trouble me and take my life out of me. I am afraid of your lovely red color. Pitiful, I say two things that are opposite. I say I will not live without Him, yet I am alive without Him now and say that I want to be with Him. like two-tongued Adishesha on whom the lord rests, I shamelessly speak.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கோவை அம்மா! கோவை; மணாட்டி! கொடியே!; நீ உன் நீ உன் அழகிய; கொழுங்கனி கொண்டு பழங்களாலே; எம்மை ஆவி என்னுடைய உயிரை; தொலைவியேல் போக்கலாகாது; வாயழகர் அழகிய வாய்படைத்த பெருமான்; தம்மை விஷயத்திலே; அஞ்சுதும் பயந்தேன்; பாவியேன் பாவியான நான்; தோன்றி பிறந்தபின்பு; நாண் லஜ்ஜை; இலியேனுக்கு அற்றவளான எனக்கு; பாம்பு சேஷசாயியான; அணையார்க்கும் தம் பெருமானுக்கும் தமது; பாம்புபோல் படுக்கையான பாம்புபோல்; நாவும் இரண்டு இரண்டு நாக்குகள்; உள ஆய்த்து உண்டாயின
maṇāṭṭi! oh vine!; kovai will you accept (join) me?; nī uṉ you, with your beautiful; kŏḻuṅkaṉi kŏṇṭu fruits; tŏlaiviyel cannot take away; ĕmmai āvi my life; añcutum i am afraid of; tammai matters regarding; vāyaḻakar the Lord with a beautiful mouth; pāviyeṉ I, the sinner; toṉṟi after being born; iliyeṉukku became; nāṇ shameless; pāmpupol like the serpent that became the bed; aṇaiyārkkum tam for the Lord; pāmpu who lies on it; ul̤a āyttu i developed; nāvum iraṇṭu two tongues

NAT 10.4

600 முல்லைப்பிராட்டி! நீயுன்முறுவல்கள் கொண்டு * எம்மை
அல்லல்விளைவியேல் ஆழிநங்காய்! உன்னடைக்கலம் *
கொல்லையரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்
சொல்லும்பொய்யானால் * நானும்பிறந்தமைபொய்யன்றே.
600 முல்லைப் பிராட்டி * நீ உன் முறுவல்கள் கொண்டு * எம்மை
அல்லல் விளைவியேல் * ஆழி நங்காய் உன் அடைக்கலம் **
கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட * குமரனார்
சொல்லும் பொய்யானால் * நானும் பிறந்தமை பொய் அன்றே? (4)
600 mullaip pirāṭṭi * nī uṉ muṟuvalkal̤ kŏṇṭu * ĕmmai
allal vil̤aiviyel * āzhi naṅkāy uṉ aṭaikkalam **
kŏllai arakkiyai mūkku arintiṭṭa * kumaraṉār
cŏllum pŏyyāṉāl * nāṉum piṟantamai pŏy aṉṟe? (4)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

600. O mullai vine, like a young girl! Don’t hurt me with your smile as you shine like the discus (chakra)of the lord. I seek your refuge—please show me your love. The young lord who cut off Surpanakha’s nose promised He would never be apart from me. If his promise is false, it would be better if I had not been born.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
முல்லை அம்மா!; பிராட்டி! முல்லைக் கொடியே!; ஆழி கம்பீரமான; நங்காய்! இயல்பு உடையவளே!; முறுவல்கள் பெருமானின்; கொண்டு முறுவல் போன்ற; நீ உன் உன்னுடைய மலர்த்தியாலே; எம்மை அல்லல் எனக்கு மனவருத்தத்தை; விளைவியேல் விளைவிக்காதே!; உன் அடைக்கலம் உன்னைச் சரணமடைகிறேன்; கொல்லை தீயவளான; அரக்கியை சூர்ப்பணகையின்; மூக்கு அரிந்திட்ட மூக்கறுத்த; குமரனார் பிரானாகிய இராமனின்; சொல்லும் வார்த்தை; பொய்யானால் பொய்யென ஆகிவிட்டால்; நானும் பிறந்தமை நான் பிறந்ததும்; பொய் அன்றே பொய் தானோ!
mullai o mother!; pirāṭṭi! jasmine creeper!; naṅkāy! the one with nature that is; āḻi majestic; nī uṉ your blossoming grace; kŏṇṭu is like the smile of; muṟuvalkal̤ the Lord; ĕmmai allal please do not; vil̤aiviyel cause pain; uṉ aṭaikkalam i surrender to you; cŏllum if the words; kumaraṉār of Rama; mūkku arintiṭṭa who cut off the nose; arakkiyai of soorpanaka; kŏllai the wicked one; pŏyyāṉāl become false; nāṉum piṟantamai then even my birth; pŏy aṉṟe must be a lie!

NAT 10.5

601 பாடும்குயில்காள்! ஈதென்னபாடல்? * நல்வேங்கட
நாடர்நமக்கொருவாழ்வுதந்தால் வந்துபாடுமின் *
ஆடும்கருளக்கொடியுடையார் வந்தருள்செய்து *
கூடுவராயிடில் கூவிநும்பாட்டுகள்கேட்டுமே.
601 பாடும் குயில்காள் * ஈது என்ன பாடல்? * நல் வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் * வந்து பாடுமின் **
ஆடும் கருளக் கொடி உடையார் * வந்து அருள்செய்து *
கூடுவார் ஆயிடில் * கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே (5)
601 pāṭum kuyilkāl̤ * ītu ĕṉṉa pāṭal? * nal veṅkaṭa
nāṭar namakku ŏru vāzhvu tantāl * vantu pāṭumiṉ **
āṭum karul̤ak kŏṭi uṭaiyār * vantu arul̤cĕytu *
kūṭuvār āyiṭil * kūvi num pāṭṭukkal̤ keṭṭume (5)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 10-10

Divya Desam

Simple Translation

601. O cuckoo birds, you sing beautifully! What song do you sing? Come here and sing only if the lord of the beautiful Venkata hills gives me His love and allows me to survive. If the god with the eagle flag comes, gives his grace and embraces me, He can also listen to your songs.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
பாடும் குயில்காள்! பாடுகின்ற குயில்களே!; ஈது என்ன பாடல்? இது என்னவிதமான பாட்டு; நல் வேங்கட திருவேங்கடத்திலிருக்கும்; நாடர் பெருமான்; நமக்கு ஒரு எனக்கு ஒரு; வாழ்வு தந்தால் வாழ்வு தந்தால்; வந்து நீங்கள் இங்கே வந்து; பாடுமின் பாடுங்கள்; ஆடும் ஆடுகின்ற; கருளக்கொடி கருடக்கொடியை; உடையார் உடைய பிரான்; அருள்செய்து அருள்பண்ணி; வந்து இங்கே வந்து; கூடுவராயிடில் சேர்வனாகில்; கூவி அப்போது உங்களைக் கூவி அழைத்து; நும் பாட்டுகள் உங்களது பாட்டுக்களை; கேட்டுமே கேட்போம்
pāṭum kuyilkāl̤! oh singing cuckoos!; ītu ĕṉṉa pāṭal? what kind of song is this?; nāṭar the Lord; nal veṅkaṭa who resides in Thiruvenkatam; namakku ŏru if He gives me; vāḻvu tantāl a life; vantu you came come here; pāṭumiṉ and sing; uṭaiyār the Lord who has; āṭum the moving; karul̤akkŏṭi garuda flag; arul̤cĕytu if He blesses; vantu by coming; kūṭuvarāyiṭil here; kūvi then I will call you; keṭṭume and listen to; num pāṭṭukal̤ your songs

NAT 10.6

602 கணமாமயில்காள்! கண்ணபிரான்திருக்கோலம்போன்று *
அணிமாநடம்பயின் றாடுகின்றீர்க்கு அடிவீழ்கின்றேன் *
பணமாடரவணைப் பற்பலகாலமும்பள்ளிகொள்
மணவாளர் * நம்மைவைத்த பரிசிதுகாண்மினே.
602 கண மா மயில்காள் * கண்ணபிரான் திருக்கோலம் போன்று *
அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு * அடி வீழ்கின்றேன் **
பணம் ஆடு அரவணைப் * பற்பல காலமும் பள்ளிகொள் *
மணவாளர் நம்மை வைத்த * பரிசு இது காண்மினே (6)
602 kaṇa mā mayilkāl̤ * kaṇṇapirāṉ tirukkolam poṉṟu *
aṇi mā naṭam payiṉṟu āṭukiṉṟīrkku * aṭi vīzhkiṉṟeṉ **
paṇam āṭu aravaṇaip * paṟpala kālamum pal̤l̤ikŏl̤ *
maṇavāl̤ar nammai vaitta * paricu itu kāṇmiṉe (6)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

602. O flock of peacocks, who look beautiful like the dear lord Kannan and move gracefully as if you had studied long to dance ! I bow to your feet. Oh! Is this the gift the dear god resting eternally on Adishesha on the ocean has given me?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கண கூட்டமாயிருக்கும்; மாமயில்காள்! சிறந்த மயில்களே!; கண்ணபிரான் கண்ணபிரானுடைய; திருக்கோலம் அழகிய வடிவு; போன்று போன்று; அணி மா அழகுமிக்க; நடம் நாட்டியத்திலே; பயின்று பயின்று; ஆடுகின்றீர்க்கு ஆடுகின்ற உங்களுடைய; அடி திருவடிகளிலே; வீழ்கின்றேன் வணங்குகின்றேன்; பணம் ஆடு படமெடுத்து ஆடும்; அரவணை பாம்பின் படுக்கையிலே; பற்பல காலமும் எல்லா காலத்திலும்; பள்ளிகொள் பள்ளி கொண்டிருக்கும்; மணவாளர் மணவாளன்; நம்மை எனக்கு; வைத்த உண்டாக்கித் தந்த; பரிசு பெருமை; இது இப்படி உங்கள் காலிலே; காண்மினே விழுவதாயிற்றே
māmayilkāl̤! o finest of peacocks!; kaṇa that gather in flocks; poṉṟu resembling; tirukkolam the beautiful form of; kaṇṇapirāṉ Lord Kannan; naṭam and dance; aṇi mā beautifully; payiṉṟu you are trained; āṭukiṉṟīrkku to dance; vīḻkiṉṟeṉ i bow down; aṭi at your feet; maṇavāl̤ar the Lord; pal̤l̤ikŏl̤ who rests; paṟpala kālamum at all times; aravaṇai on the bed of serpent; paṇam āṭu that dances; vaitta has bestowed; nammai upon me; paricu this honor; kāṇmiṉe to fall; itu at your feet

NAT 10.7

603 நடமாடித் தோகைவிரிக்கின்ற மாமயில்காள்! * உம்மை
நடமாட்டங்காணப் பாவியேன்நானோர்முதலிலேன் *
குடமாடுகூத்தன் கோவிந்தன்கோமிறைசெய்து * எம்மை
உடைமாடுகொண்டால் உங்களுக்கினியொன்றுபோதுமே.
603 நடம் ஆடித் தோகை விரிக்கின்ற * மா மயில்காள் * உம்மை
நடம் ஆட்டம் காணப் * பாவியேன் நான் ஓர் முதல் இலேன் **
குடம் ஆடு கூத்தன் * கோவிந்தன் கோமிறை செய்து * எம்மை
உடை மாடு கொண்டான் * உங்களுக்கு இனி ஒன்று போதுமே? (7)
603 naṭam āṭit tokai virikkiṉṟa * mā mayilkāl̤ * ummai
naṭam āṭṭam kāṇap * pāviyeṉ nāṉ or mutal ileṉ **
kuṭam āṭu kūttaṉ * kovintaṉ komiṟai cĕytu * ĕmmai
uṭai māṭu kŏṇṭāṉ * uṅkal̤ukku iṉi ŏṉṟu potume? (7)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

603. O lovely peacocks, you dance beautifully spreading your feathers. My condition is pitiful and I have no interest in seeing you dance. Govindan, who dances the kudavai kuthu on a pot, has taken all my feelings with him. It is cruel of you to dance happily, reminding me of him and giving me pain.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
நடம் ஆடி கூத்தாடிக்கொண்டு; தோகை தோகைகளை; விரிக்கின்ற விரிக்கிற; மா மயில்காள் சிறந்த மயில்களே!; உம்மை நடமாட்டம் உங்கள் நடனத்தை; காண பார்ப்பதற்கு; பாவியேன் நான் பாவியான நான்; ஓர் முதல் இலேன் கண்ணில்லாதவளாகிவிட்டேன்; குடம் ஆடு கூத்தன் குடக் கூத்தாடிய; கோவிந்தன் கோவிந்தன்; கோமிறை பிகு; செய்து எம்மை செய்து எம்மை; உடை மாடு முழுவதுமாக; கொண்டான் கொள்ளைகொண்டான்; இனி உங்களுக்கு இப்படியிருக்க உங்களுக்கு; ஒன்று போதுமே இந்தக் காரியம் தகுமோ?
mā mayilkāl̤ o finest of peacocks!; virikkiṉṟa that spread out; tokai the feathers; naṭam āṭi and dance; pāviyeṉ nāṉ as a sinner I; or mutal ileṉ became blind and unworthy; kāṇa to see; ummai naṭamāṭṭam your dance; kuṭam āṭu kūttaṉ who danced on the pot; kovintaṉ Govindan; komiṟai by His trick; uṭai māṭu has totally; cĕytu ĕmmai deceived me; kŏṇṭāṉ and captured my heart; iṉi uṅkal̤ukku given all this; ŏṉṟu potume is this act of yours fair?

NAT 10.8

604 மழையே! மழையே! மண்புறம்பூசி உள்ளாய்நின்று *
மெழுகூற்றினாற்போல் ஊற்றுநல்வேங்கடத் துள்நின்ற *
அழகப்பிரானார் தம்மை என்நெஞ்சத்தகப்படத்
தழுவநின்று * என்னைத் ததைத்துக்கொண்டு ஊற்றவும்வல்லையே. (2)
604 ## மழையே! மழையே! * மண் புறம் பூசி உள்ளாய் நின்று *
மெழுகு ஊற்றினால் போல் * ஊற்று நல் வேங்கடத்து உள் நின்ற **
அழகப்பிரானார் தம்மை * என் நெஞ்சத்து அகப்படத்
தழுவ நின்று * என்னைத் ததைத்துக்கொண்டு * ஊற்றவும் வல்லையே? (8)
604 ## mazhaiye! mazhaiye! * maṇ puṟam pūci ul̤l̤āy niṉṟu *
mĕzhuku ūṟṟiṉāl pol * ūṟṟu nal veṅkaṭattu ul̤ niṉṟa **
azhakappirāṉār tammai * ĕṉ nĕñcattu akappaṭat
tazhuva niṉṟu * ĕṉṉait tataittukkŏṇṭu * ūṟṟavum vallaiye? (8)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

604. O rain, O rain! The thought that he has not entered my heart makes me suffer. Like wax that melts and pours down from its sandy coating, my love for him pours out. Won’t you make the beautiful god of Venkata hills enter into my heart and embrace me?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
மழையே! மழையே! ஓ மேகமே!; மண் புறம் பூசி மண்ணைப் பூசிவிட்டு; உள்ளாய் உள்ளே; நின்று மெழுகு இருக்கும் மெழுகை; ஊற்றினால் உருக்கி வெளியில்; போல் தள்ளுமாப்போலே; ஊற்றும் என்னை உருக்குவது போல; நல் வேங்கடத்து வேங்கடமலையில்; உள்நின்ற இருக்கும்; அழகப் பிரானார் தம்மை அழகிய பிரானை; என் நெஞ்சத்து என் நெஞ்சிலே; அகப்பட அகப்பட வைத்து; தழுவ நின்று அணைக்கும்படிப் பண்ணி; என்னை என்னை; ததைத்து நெருக்கிவைத்துப் பிறகு; கொண்டு ஊற்றவும் பொழிய; வல்லையே? வல்லையோ?
maḻaiye! maḻaiye! o cloud!; maṇ puṟam pūci after smearing the earth; pol like pushing; ūṟṟiṉāl out the molten; niṉṟu mĕḻuku wax that lies; ul̤l̤āy inside; ūṟṟum i am being melted; akappaṭa you placed; ĕṉ nĕñcattu in my heart; aḻakap pirāṉār tammai the beautiful Lord; ul̤niṉṟa who resides in; nal veṅkaṭattu Thiruvenkatam; ĕṉṉai and made me long to; taḻuva niṉṟu embrace Him; tataittu after tormenting me; vallaiye? can you not?; kŏṇṭu ūṟṟavum fall

NAT 10.9

605 கடலே! கடலே! உன்னைக்கடைந்துகலக்குறுத்து *
உடலுள்புகுந்து நின்றூறலறுத்தவற்கு * என்னையும்
உடலுள் புகுந்துநின்றூறலறுக்கின்றமாயற்கு * என்
நடலைகளெல்லாம் நாகணைக்கேசென்றுரைத்தியே.
605 கடலே! கடலே! உன்னைக் கடைந்து * கலக்கு உறுத்து *
உடலுள் புகுந்துநின்று * ஊறல் அறுத்தவற்கு ** என்னையும்
உடலுள் புகுந்துநின்று * ஊறல் அறுக்கின்ற மாயற்கு * என்
நடலைகள் எல்லாம் * நாகணைக்கே சென்று உரைத்தியே? (9)
605 kaṭale! kaṭale! uṉṉaik kaṭaintu * kalakku uṟuttu *
uṭalul̤ pukuntuniṉṟu * ūṟal aṟuttavaṟku ** ĕṉṉaiyum
uṭalul̤ pukuntuniṉṟu * ūṟal aṟukkiṉṟa māyaṟku * ĕṉ
naṭalaikal̤ ĕllām * nākaṇaikke cĕṉṟu uraittiye? (9)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

605. O milky ocean, O milky ocean! Māyavan churned you and took the nectar from you. He entered my heart, made me suffer and took my life away. Will you go to him who rests on the snake bed and tell him how I suffer for his love?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கடலே! கடலே! கடலே கடலே!; உன்னைக் உன்னை; கடைந்து கடைந்து; கலக்கு உறுத்து கலக்கி; உடலுள் உனது சரீரத்திலே; புகுந்து நின்று புகுந்து நின்று; ஊறல் ஸாரமான அமுதத்தை; அறுத்தவற்கு எடுத்தவர் அது; என்னையும் என்; உடலுள் உடலிலும்; புகுந்து நின்று புகுந்திருந்து; ஊறல் என் உயிரை; அறுக்கின்ற அறுக்குமவரான; மாயற்கு எம்பிரானுக்குச் சொல்லும்படி; என் என்; நடலைகள் எல்லாம் துயரையெல்லாம்; நாகணைக்கே திருவனந்தாழ்வானிடம்; சென்று உரைத்தியே? போய்ச் சொல்லுவாயோ?
kaṭale! kaṭale! o sea o sea!; uṉṉaik you were; kaṭaintu churned and; kalakku uṟuttu stirred; aṟuttavaṟku by the One who; ūṟal drew the essence of the nectar; pukuntu niṉṟu by entering; uṭalul̤ into your very body; māyaṟku you tell the same Lord who; pukuntu niṉṟu also entered; ĕṉṉaiyum my; uṭalul̤ body; aṟukkiṉṟa and severed; ūṟal my life; cĕṉṟu uraittiye? go and tell; ĕṉ my; naṭalaikal̤ ĕllām sorrows; nākaṇaikke to Thiruvananthazhvān

NAT 10.10

606 நல்லஎன்தோழி! நாகணைமிசைநம்பரர் *
செல்வர்பெரியர் சிறுமானிடவர்நாம்செய்வதென்? *
வில்லிபுதுவைவிட்டுசித்தர் தங்கள்தேவரை *
வல்லபரிசுவருவிப்பரேல் அதுகாண்டுமே. (2)
606 ## நல்ல என் தோழி * நாகணைமிசை நம்பரர் *
செல்வர் பெரியர் * சிறு மானிடவர் நாம் செய்வதென்? **
வில்லி புதுவை * விட்டுசித்தர் தங்கள் தேவரை *
வல்ல பரிசு வருவிப்பரேல் * அது காண்டுமே (10)
606 ## nalla ĕṉ tozhi * nākaṇaimicai namparar *
cĕlvar pĕriyar * ciṟu māṉiṭavar nām cĕyvatĕṉ? **
villi putuvai * viṭṭucittar taṅkal̤ tevarai *
valla paricu varuvipparel * atu kāṇṭume (10)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

606. O dear friend, our Lord who rests on Adishesha, is divine and supreme but we are small. What can we do? Yet if Vishnuchithan, the chief of Villiputhur, implores his generous god to come, by composing beautiful pāsurams, we may be able to see Him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
நல்ல என் தோழி! எனது உயிர்த்தோழியே!; நாகணை நமது பாம்புப் படுக்கையில்; மிசை துயில் கொண்டிருக்கும்; நம்பரர் நம் எம்பிரான்; செல்வர் செல்வந்தர்; பெரியர் மேம்பட்டவர்; சிறு மானிடவர் சிறியவரான; நாம் நாம் என்ன; செய்வதென்? செய்ய முடியும்?; வில்லி புதுவை வில்லிபுத்தூர்; விட்டுசித்தர் விஷ்ணுசித்தர்; தங்கள் உகந்த; தேவரை தேவரான பெருமானை; வல்ல தம்மால்; பரிசு கூடினவகைகளாலே; வருவிப்பரேல் அழைப்பராகில்; அப்போது அப்போது அவனை; அது காண்டுமே வணங்கப் பெறுவோம்!
nalla ĕṉ toḻi! o my dear friend!; namparar our Supreme Lord; micai who rests on; nākaṇai the serpent bed; cĕlvar is a wealthy; pĕriyar and exalted One; ciṟu māṉiṭavar as a lowly one; nām what indeed; cĕyvatĕṉ? can I possibly do?; tevarai if our Lord; taṅkal̤ the auspicious One; varuvipparel is invoked; viṭṭucittar by Vishnuchitar of; villi putuvai Sri Villiputhur; paricu in all the ways; valla he can muster; appotu then at that moment; atu kāṇṭume we too may get the chance to worship Him!