Chapter 9
The love of a girl for Kannan - (சிந்துரச் செம்பொடி)
திருமாலிருஞ்சோலைப் பிரானை வழிபடல்
"Andal is captivated by the beauty of Thirumaliruncholai and the divine form of Azhagar. The dark clouds spread across the sky and poured rain generously. Flowers, which bloom during the rainy season, adorned the hills of Thirumaliruncholai. These sights intensified Andal's pangs of separation. Her heart longed for the Lord of Thirumaliruncholai.
(In + Read more
ஆண்டாள் திருமாலிருஞ்சோலையின் அழகிலும், அழகரின் திருமேனி சவுந்தர்யத்திலும் ஈடுபடுகிறாள். வானில் படர்ந்து விளங்கிய கார்முகில் மழையை நன்றாகப் பொழிந்தது. மழை காலத்திற்கு உரிய பூக்கள் திருமாலிருஞ்சோலை மலையில் பூத்துப் பரவி இருந்தன. இவை ஆண்டாள் பிரிவுத் துன்பத்தை அதிகமாக்கின. திருமாலிருஞ்சோலை + Read more
Verses: 587 to 596
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Will join the feet of Thirumāl
- NAT 9.1
587 ## சிந்துரச் செம்பொடிப் போல் * திருமாலிருஞ்சோலை எங்கும் *
இந்திர கோபங்களே * எழுந்தும் பரந்திட்டனவால் **
மந்தரம் நாட்டி அன்று * மதுரக் கொழுஞ்சாறு கொண்ட *
சுந்தரத் தோளுடையான் * சுழலையில் நின்று உய்துங்கொலோ? (1) - NAT 9.2
588 போர்க்களிறு பொரும் * மாலிருஞ்சோலை அம் பூம்புறவில் *
தார்க்கொடி முல்லைகளும் * தவள நகை காட்டுகின்ற **
கார்க்கொள் பிடாக்கள் நின்று * கழறிச் சிரிக்கத் தரியேன் *
ஆர்க்கு இடுகோ? தோழீ * அவன் தார் செய்த பூசலையே (2) - NAT 9.3
589 கருவிளை ஒண்மலர்காள் * காயா மலர்காள் * திருமால்
உரு ஒளி காட்டுகின்றீர் * எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர் **
திரு விளையாடு திண் தோள் * திருமாலிருஞ்சோலை நம்பி *
வரிவளை இல் புகுந்து * வந்திபற்றும் வழக்கு உளதே? (3) - NAT 9.4
590 பைம்பொழில் வாழ் குயில்காள் மயில்காள் * ஒண் கருவிளைகாள் *
வம்பக் களங்கனிகாள் * வண்ணப் பூவை நறுமலர்காள் **
ஐம் பெரும் பாதகர்காள் * அணி மாலிருஞ்சோலை நின்ற *
எம்பெருமானுடைய நிறம் * உங்களுக்கு என் செய்வதே? (4) - NAT 9.5
591 துங்க மலர்ப் பொழில் சூழ் * திருமாலிருஞ்சோலை நின்ற *
செங்கண் கருமுகிலின் * திருவுருப் போல் ** மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள் * தொகு பூஞ்சுனைகாள் * சுனையில்
தங்கு செந்தாமரைகாள் * எனக்கு ஓர் சரண் சாற்றுமினே (5) - NAT 9.6
592 ## நாறு நறும் பொழில் * மாலிருஞ்சோலை நம்பிக்கு * நான்
நூறு தடாவில் வெண்ணெய் * வாய்நேர்ந்து பராவி வைத்தேன் **
நூறு தடா நிறைந்த * அக்கார அடிசில் சொன்னேன் *
ஏறு திருவுடையான் * இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ? (6) - NAT 9.7
593 இன்று வந்து இத்தனையும் * அமுது செய்திடப் பெறில் * நான்
ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் * பின்னும் ஆளும் செய்வன் **
தென்றல் மணம் கமழும் * திருமாலிருஞ்சோலை தன்னுள்
நின்றபிரான் * அடியேன் மனத்தே வந்து நேர்படிலே (7) - NAT 9.8
594 காலை எழுந்திருந்து * கரிய குருவிக் கணங்கள் *
மாலின் வரவு சொல்லி * மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ? **
சோலைமலைப் பெருமான் * துவாராபதி எம்பெருமான் *
ஆலின் இலைப் பெருமான் * அவன் வார்த்தை உரைக்கின்றதே (8) - NAT 9.9
595 கோங்கு அலரும் பொழில் * மாலிருஞ்சோலையில் கொன்றைகள்மேல் *
தூங்கு பொன் மாலைகளோடு * உடனாய் நின்று தூங்குகின்றேன் **
பூங்கொள் திருமுகத்து * மடுத்து ஊதிய சங்கு ஒலியும் *
சார்ங்க வில் நாண் ஒலியும் * தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ? (9) - NAT 9.10
596 ## சந்தொடு காரகிலும் சுமந்து * தடங்கள் பொருது *
வந்திழியும் சிலம்பாறு உடை * மாலிருஞ்சோலை நின்ற **
சுந்தரனைச் சுரும்பு ஆர் குழல் * கோதை தொகுத்து உரைத்த *
செந்தமிழ் பத்தும் வல்லார் * திருமாலடி சேர்வர்களே (10)