NAT 10.5

குயில்காள்! அவர் என்னைக் கூடுவாரா?

601 பாடும்குயில்காள்! ஈதென்னபாடல்? * நல்வேங்கட
நாடர்நமக்கொருவாழ்வுதந்தால் வந்துபாடுமின் *
ஆடும்கருளக்கொடியுடையார் வந்தருள்செய்து *
கூடுவராயிடில் கூவிநும்பாட்டுகள்கேட்டுமே.
601 pāṭum kuyilkāl̤ * ītu ĕṉṉa pāṭal? * nal veṅkaṭa
nāṭar namakku ŏru vāzhvu tantāl * vantu pāṭumiṉ **
āṭum karul̤ak kŏṭi uṭaiyār * vantu arul̤cĕytu *
kūṭuvār āyiṭil * kūvi num pāṭṭukkal̤ keṭṭume (5)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 10-10

Divya Desam

Simple Translation

601. O cuckoo birds, you sing beautifully! What song do you sing? Come here and sing only if the lord of the beautiful Venkata hills gives me His love and allows me to survive. If the god with the eagle flag comes, gives his grace and embraces me, He can also listen to your songs.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாடும் குயில்காள்! பாடுகின்ற குயில்களே!; ஈது என்ன பாடல்? இது என்னவிதமான பாட்டு; நல் வேங்கட திருவேங்கடத்திலிருக்கும்; நாடர் பெருமான்; நமக்கு ஒரு எனக்கு ஒரு; வாழ்வு தந்தால் வாழ்வு தந்தால்; வந்து நீங்கள் இங்கே வந்து; பாடுமின் பாடுங்கள்; ஆடும் ஆடுகின்ற; கருளக்கொடி கருடக்கொடியை; உடையார் உடைய பிரான்; அருள்செய்து அருள்பண்ணி; வந்து இங்கே வந்து; கூடுவராயிடில் சேர்வனாகில்; கூவி அப்போது உங்களைக் கூவி அழைத்து; நும் பாட்டுகள் உங்களது பாட்டுக்களை; கேட்டுமே கேட்போம்

Detailed WBW explanation

Oh cuckoos that sing amidst the groves, what nature of melody doth this tumult embody? Should Emperumān, who resides majestically upon the lofty Tiruvēṅkadam hills, grant me prosperity, you may then approach and serenade us with your songs. If Emperumān, whose banner soars with the dancing Garuda, arrives here and joins with me in divine communion, we shall summon you to delight in your harmonious tunes.