NAT 10.8

அழகர்பிரானை நான் தழுவத்தான் வேண்டும்

604 மழையே! மழையே! மண்புறம்பூசி உள்ளாய்நின்று *
மெழுகூற்றினாற்போல் ஊற்றுநல்வேங்கடத் துள்நின்ற *
அழகப்பிரானார் தம்மை என்நெஞ்சத்தகப்படத்
தழுவநின்று * என்னைத் ததைத்துக்கொண்டு ஊற்றவும்வல்லையே. (2)
604 ## mazhaiye! mazhaiye! * maṇ puṟam pūci ul̤l̤āy niṉṟu *
mĕzhuku ūṟṟiṉāl pol * ūṟṟu nal veṅkaṭattu ul̤ niṉṟa **
azhakappirāṉār tammai * ĕṉ nĕñcattu akappaṭat
tazhuva niṉṟu * ĕṉṉait tataittukkŏṇṭu * ūṟṟavum vallaiye? (8)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

604. O rain, O rain! The thought that he has not entered my heart makes me suffer. Like wax that melts and pours down from its sandy coating, my love for him pours out. Won’t you make the beautiful god of Venkata hills enter into my heart and embrace me?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மழையே! மழையே! ஓ மேகமே!; மண் புறம் பூசி மண்ணைப் பூசிவிட்டு; உள்ளாய் உள்ளே; நின்று மெழுகு இருக்கும் மெழுகை; ஊற்றினால் உருக்கி வெளியில்; போல் தள்ளுமாப்போலே; ஊற்றும் என்னை உருக்குவது போல; நல் வேங்கடத்து வேங்கடமலையில்; உள்நின்ற இருக்கும்; அழகப் பிரானார் தம்மை அழகிய பிரானை; என் நெஞ்சத்து என் நெஞ்சிலே; அகப்பட அகப்பட வைத்து; தழுவ நின்று அணைக்கும்படிப் பண்ணி; என்னை என்னை; ததைத்து நெருக்கிவைத்துப் பிறகு; கொண்டு ஊற்றவும் பொழிய; வல்லையே? வல்லையோ?

Detailed WBW explanation

Oh cloud! Just as one applies paste externally and melts wax internally, Emperumān, who resides eternally upon the lofty Thiruvēṅkadam hills, embraces me outwardly while melting and dissolving my very essence within. Will you, upon my union with my Emperumān, bestow your rains so that I may embrace Him in the very form He manifests within me?