Chapter 6

Kannan and the cowherd girls - (ஏர் மலர்)

கன்னியர் ஊடிக் கண்ணனை எள்குதல்
Kannan and the cowherd girls - (ஏர் மலர்)

The Gopis were enchanted by Krishna's words. However, Krishna did not come as He had promised. Therefore, each of the Gopis, in their own way, expresses their frustration and disappointment with Krishna.


Pravēśam (Introduction)

Having previously immersed himself in the divine glories of the sacred realms (divyadhēśams) of Śrīraṅgam, Thirumalai,

+ Read more

கோபியர் கண்ணனின் வார்த்தையில் மயங்கினர். சொல்லியபடி கண்ணன் வரவில்லை. எனவே கண்ணனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வெறுத்துக் கூறுகிறார்கள்.

Verses: 698 to 707
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will have no troubles in life
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PMT 6.1

698 ஏர்மலர்ப்பூங்குழலாயர்மாதர்
எனைப்பலருள்ளவிவ்வூரில் * உன்தன்
மார்வுதழுவுதற்காசையின்மைஅறிந்தறிந்தே
உன்தன் பொய்யைக்கேட்டு *
கூர்மழைபோல்பனிக்கூதலெய்திக்
கூசிநடுங்கியமுனையாற்றில் *
வார்மணற்குன்றில்புலரநின்றேன்
வாசுதேவா! உன்வரவுபார்த்தே. (2)
698 ## ஏர் மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர் * எனைப் பலர் உள்ள இவ் ஊரில் * உன்தன்
மார்வு தழுவுதற்கு * ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யைக் கேட்டு **
கூர் மழை போல் பனிக் கூதல் எய்திக் * கூசி நடுங்கி யமுனை ஆற்றில் *
வார் மணல் குன்றில் புலர நின்றேன் * வாசுதேவா உன் வரவு பார்த்தே (1)
698 ## er malarp pūṅkuzhal āyar mātar * ĕṉaip palar ul̤l̤a iv ūril * uṉtaṉ
mārvu tazhuvutaṟku * ācaiyiṉmai aṟintaṟinte uṉtaṉ pŏyyaik keṭṭu **
kūr mazhai pol paṉik kūtal ĕytik * kūci naṭuṅki yamuṉai āṟṟil *
vār maṇal kuṉṟil pulara niṉṟeṉ * vācutevā uṉ varavu pārtte (1)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

698.“ O Vāsudevā, many of the cowherd women here whose hair is decorated with fragrant flowers don’t want to embrace your chest because you lied to them. Listening to your lies, I was standing on a sand dune on the banks of the Yamuna river, till dawn shaking in the cold that comes after a strong rain".

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
வாசுதேவா! கண்ணபிரானே!; ஏர் அழகிய மணம் மிக்க; மலர் மலரணிந்த; பூங்குழல் கூந்தலையுடைய; ஆயர் மாதர் ஆயர்ப் பெண்கள்; எனப் பலர் என்று பல; உள்ள பேர்களிருக்க; இவ் ஊரில் இந்தத் திருவாய்ப்பாடியில்; உன் தன் உனது; மார்வு மார்பை; தழுவுதற்கு அணைவதற்கு; ஆசையின்மை ஆசையில்லாமையை; அறிந்தறிந்தே நன்றாக அறிந்தும்; உன் தன் உனது; பொய்யைக் பொய்; கேட்டு பேச்சைக்கேட்டு; கூர் மழை பெரிய மழை; போல் போல் பெய்கிற; பனிக் கூதல் பனியாலுண்டான குளிரிலே; எய்தி அகப்பட்டு; கூசி நடுங்கி கூசி நடுங்கியபடி; யமுனை ஆற்றில் யமுனை நதியில்; வார் பெரியதொரு; மணற் குன்றில் மணற் குன்றிலே; உன் வரவு உன் வரவை; பார்த்தே எதிர்பார்த்துக் கொண்டு; புலர பொழுது விடியும் வரை; நின்றேன் காத்து நின்றேன்
vācutevā! o Lord Kanna!; ul̤l̤a there are; ĕṉap palar several; āyar mātar cowherd women; pūṅkuḻal with braided hair; malar adorned with flowers; er that are fragrant; iv ūril in Aiyarpadi; ācaiyiṉmai who lacked the desire; taḻuvutaṟku to embrace; uṉ taṉ Your; mārvu chest; aṟintaṟinte knowing that; pārtte looking forward to; uṉ varavu Your arrival; niṉṟeṉ I stood standing; pulara until dawn; vār at a big; maṇaṟ kuṉṟil sand dune; yamuṉai āṟṟil on the banks of Yamuna river; kūci naṭuṅki shivering; ĕyti caught; paṉik kūtal in the cold due to dew; pol that poured; kūr maḻai like heavy rain; keṭṭu listening; uṉ taṉ to Your; pŏyyaik lies

PMT 6.2

699 கெண்டையொண் கண்மடவாளொருத்தி
கீழையகத்துத்தயிர்கடையக்
கண்டு * ஒல்லைநானும்கடைவனென்று
கள்ளவிழிவிழித்துப்புக்கு *
வண்டமர்பூங்குழல்தாழ்ந்துலாவ
வாண்முகம்வேர்ப்பச்செவ்வாய்த்துடிப்ப *
தண்டயிர்நீகடைந்திட்டவண்ணம்
தாமோதரா! மெய்யறிவன்நானே.
699 கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி * கீழை அகத்துத் தயிர் கடையக்
கண்டு * ஒல்லை நானும் கடைவன் என்று * கள்ள விழியை விழித்துப் புக்கு **
வண்டு அமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ * வாள்முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப *
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் * தாமோதரா மெய் அறிவன் நானே (2)
699 kĕṇṭai ŏṇ kaṇ maṭavāl̤ ŏrutti * kīzhai akattut tayir kaṭaiyak
kaṇṭu * ŏllai nāṉum kaṭaivaṉ ĕṉṟu * kal̤l̤a-vizhiyai vizhittup pukku **
vaṇṭu amar pūṅkuzhal tāzhntu ulāva * vāl̤mukam verppa cĕvvāy tuṭippa *
taṇ tayir nī kaṭaintiṭṭa vaṇṇam * tāmotarā mĕy aṟivaṉ nāṉe (2)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

699. “You saw a lovely girl with beautiful fish-like eyes churning yogurt in her home, close by and you entered her house stealthily and said, ‘I will also churn yogurt fast with you. ’ I truly know how you churned the yogurt, casting a secret glance, with your dangling hair decorated with flowers that swarm with bees, let loose, your bright face sweating and your red mouth quivering!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தாமோதரா! தாமோதரனே!; கீழை அகத்து கீழண்டை வீட்டில்; கெண்டை கயல் மீன் போல்; ஒண் கண் அழகிய கண்களையுடைய; மடவாள் ஒருத்தி ஒரு பெண்; தயிர் கடைய தயிர் கடைவதை; கண்டு பார்த்து; ஒல்லை சீக்கிரமாக; நானும் நானும் உன்னோடு சேர்ந்து; கடைவன் கடைகிறேன்; என்று என்று சொல்லி; கள்ளவிழியை திருட்டுப்பார்வை; விழித்து பார்த்தபடி; புக்கு புகுந்து; வண்டு அமர் வண்டுகளிருக்கும்; பூங்குழல் மலரணிந்த கூந்தல்; தாழ்ந்து அவிழ்ந்து; உலாவ அசையும் படியாக; வாள்முகம் ஒளி பொருந்திய; வேர்ப்ப முகம் வியர்த்திட; செவ்வாய் சிவந்த வாய்; துடிப்ப துடிக்க; தண் தயிர் குளிர்ந்த தயிரை; நீ கடைந்திட்ட நீ கடைந்த; வண்ணம் விதத்தை; நானே மெய் நான் உண்மையாகவே; அறிவன் அறிவேன்
tāmotarā! O Damodara!; kaṇṭu seeing; maṭavāl̤ ŏrutti a girl; ŏṇ kaṇ with beautiful eyes; kĕṇṭai like a slender fish; kīḻai akattu at a house down the street; tayir kaṭaiya churning curd; pukku you entered; viḻittu looking at her slyly; ŏllai quickly; kal̤l̤aviḻiyai with a mischievous glance; ĕṉṟu claiming; kaṭaivaṉ that You too; nāṉum would help churn with her; nī kaṭaintiṭṭa You churned; taṇ tayir the cool curd; vaṇṭu amar as Your bees swarmed; pūṅkuḻal flower-adorned braid; tāḻntu came undone; ulāva and began to sway; vāl̤mukam and Your radiant; verppa shining face started sweating; cĕvvāy and red lips; tuṭippa quivered; nāṉe mĕy I truly; aṟivaṉ know; vaṇṇam the way You churned

PMT 6.3

700 கருமலர்க்கூந்தலொருத்திதன்னைக்
கடைக்கணித்து * ஆங்கேயொருத்திதன்பால்
மருவிமனம்வைத்துமற்றொருத்திக்குரைத்து
ஒருபேதைக்குப்பொய்குறித்து *
புரிகுழல்மங்கையொருத்திதன்னைப்
புணர்தி அவளுக்கும்மெய்யனல்லை *
மருதிறுத்தாய்! உன்வளர்த்தியூடே
வளர்கின்றதாலுன்றன்மாயைதானே.
700 கருமலர்க் கூந்தல் ஒருத்திதன்னைக் * கடைக்கணித்து * ஆங்கே ஒருத்திதன்பால்
மருவி மனம் வைத்து * மற்றொருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்குப் பொய் குறித்து **
புரிகுழல் மங்கை ஒருத்திதன்னைப் புணர்தி * அவளுக்கும் மெய்யன் அல்லை *
மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே * வளர்கின்றதால் உன்தன் மாயை தானே. (3)
700 karumalark kūntal ŏruttitaṉṉaik * kaṭaikkaṇittu * āṅke ŏruttitaṉpāl
maruvi maṉam vaittu * maṟṟŏruttikku uraittu ŏru petaikkup pŏy kuṟittu **
purikuzhal maṅkai ŏruttitaṉṉaip puṇarti * aval̤ukkum mĕyyaṉ allai *
marutu iṟuttāy uṉ val̤arttiyūṭe * val̤arkiṉṟatāl uṉtaṉ māyai tāṉe. (3)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

700. “You cast glances at a girl with dark hair adorned with flowers, and gave your heart to another in the same place. you went to another and spoke about her. While you deceived another innocent girl with your enchanting words, you stood with another curly-haired young girl in embrace. But you are not true to any of them. O you who destroyed the asurās who came as maruda trees, as you grow, your mischief grows with you. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கருமலர் கறுத்த முடியில் மலர் சூடிய; கூந்தல் கூந்தலை உடையவளான; ஒருத்தி தன்னை ஒரு பெண்ணை; கடை கடைக்கண்ணால்; கணித்து பார்த்துவிட்டு; ஆங்கே அங்கேயே; ஒருத்தி வேறொரு; தன்பால் பெண்ணிடத்தில்; மருவி மனம் மனதை; வைத்து பொருந்த விட்டு; மற்றொருத்திக்கு மற்றும் ஒருத்தியிடம்; உரைத்து கூறிவிட்டு; ஒரு ஒரு பேதை; பேதைக்கு பெண்ணிடத்தில்; பொய் குறித்து பொய் சொல்லி; புரிகுழல் அழகிய கூந்தலையுடைய; மங்கை வேறு ஒரு; ஒருத்திதன்னை மங்கையுடன்; புணர்தி சேர்ந்து நின்றாய்; அவளுக்கும் அவளிடத்திலும்; மெய்யன் உண்மையாக; அல்லை இல்லாது நின்றாய்; மருது மருதமரங்களை; இறுத்தாய்! முறித்தவனே!; உன் உன்னுடைய; வளர்த்தியூடே வயது வளர்த்தியூடே; உன்தன் உன்னுடைய; மாயை தானே கள்ளத்தனமும்; வளர்கின்றதால் வளர்ந்து வருகின்றதே
kaṇittu You looked at; ŏrutti taṉṉai a girl; kūntal with a lovely braid; karumalar with dark hair adorned with flowers; kaṭai with a sidelong glance; āṅke at that very place; vaittu You gave; maruvi maṉam Your heart; ŏrutti to another; taṉpāl girl; uraittu You spoke sweet words; maṟṟŏruttikku to another girl; pŏy kuṟittu and lie; ŏru to that naive; petaikku girl; puṇarti You stood along; maṅkai with another; ŏruttitaṉṉai girl; purikuḻal with beautiful hair; allai You did not remain; mĕyyaṉ truthful; aval̤ukkum even with that girl; iṟuttāy! the One!; marutu who destroyed the maruda trees; uṉ as Your; val̤arttiyūṭe age grows; uṉtaṉ Your; māyai tāṉe deceitfulness; val̤arkiṉṟatāl also grows

PMT 6.4

701 தாய்முலைப்பாலிலமுதிருக்கத்
தவழ்ந்துதளர்நடையிட்டுச்சென்று *
பேய்முலைவாய்வைத்துநஞ்சையுண்டு
பித்தனென்றேபிறரேசநின்றாய் *
ஆய்மிகுகாதலோடுயானிருப்ப
யான்விடவந்த என்தூதியோடே *
நீமிகுபோகத்தைநன்குகந்தாய்
அதுவுமுன்கோரம்புக்கேற்குமன்றே.
701 தாய் முலைப் பாலில் அமுதிருக்கத் * தவழ்ந்து தளர்நடையிட்டுச் சென்று *
பேய் முலை வாய்வைத்து நஞ்சை உண்டு * பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய் **
ஆய்மிகு காதலோடு யான் இருப்ப * யான் விட வந்த என் தூதியோடே *
நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய் * அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே. (4)
701 tāy-mulaip pālil amutirukkat * tavazhntu tal̤arnaṭaiyiṭṭuc cĕṉṟu *
pey-mulai vāyvaittu nañcai uṇṭu * pittaṉ ĕṉṟe piṟar eca niṉṟāy **
āymiku kātaloṭu yāṉ iruppa * yāṉ viṭa vanta ĕṉ tūtiyoṭe *
nī miku pokattai naṉku ukantāy * atuvum uṉ korampukku eṟkum aṉṟe. (4)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

704 Though Yashodā was ready to feed you with sweet mother's milk you crawled and toddled towards devil Putanā and sucked the poison from her breasts, making people call you weird and crazy. When I waited with immense love for you here, you spent a lovely time with the maid I had sent. Is that also one of your naughty deeds?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தாய் தாயாகிய யசோதையின்; முலைப் பாலில் தாய்ப் பாலில்; அமுதிருக்க இனிப்பு இருந்தபோதும்; தவழ்ந்து தவழ்ந்து; தளர் நடையிட்டு தட்டுத் தடுமாறி நடந்து; சென்று சென்று; பேய் முலை பூதனையின் மார்பகத்தில்; வாய்வைத்து வாய் வைத்து; நஞ்சை உண்டு விஷத்தை உண்டு; பித்தன் என்றே பித்தன் என்று; பிறர் ஏச ஊரார் ஏசும்படி; நின்றாய் நின்றவனே; ஆய்மிகு மிகவும் அதிகமான; காதலோடு காதலோடு; யான் இருப்ப நான் இருக்க; யான் விட வந்த நான் அனுப்பிவிட வந்த; என் தூதியோடே என் வேலைக்காரியோடே; நீ மிகு போகத்தை நீ மிகுந்த உல்லாசத்தை; நன்கு உகந்தாய் நன்றாக அனுபவித்தாய்; அதுவும் அந்தச் செய்கையும்; உன் உன்; கோரம்புக்கு குறும்புத்தனத்துக்கு; ஏற்கும் அன்றே ஏற்றபடி உள்ளதே
amutirukka inspite of the sweetness in; mulaip pālil the mother's milk of; tāy Yashoda; tavaḻntu You crawled; tal̤ar naṭaiyiṭṭu stumbled and walked; cĕṉṟu towards; pey mulai the chest of Putana; vāyvaittu and with Your mouth; nañcai uṇṭu drank the poisonous milk; piṟar eca and people called; niṉṟāy You; pittaṉ ĕṉṟe weird; yāṉ iruppa i remain; āymiku with immense; kātaloṭu love; naṉku ukantāy you fullly experienced; nī miku pokattai and enjoyed Your time with; ĕṉ tūtiyoṭe the maid; yāṉ viṭa vanta that I sent; atuvum that act of; uṉ Yours; eṟkum aṉṟe is in line with Your; korampukku mischievousness

PMT 6.5

702 மின்னொத்தநுண்ணிடையாளைக்கொண்டு
வீங்கிருள்வாயென்றன்வீதியூடே *
பொன்னொத்தவாடைகுக்கூடலிட்டுப்
போகின்றபோதுநான்கண்டுநின்றேன் *
கண்ணுற்றவளைநீகண்ணாலிட்டுக்
கைவிளிக் கின்றதும்கண்டேநின்றேன் *
என்னுக்கவளைவிட்டிங்குவந்தாய் ?
இன்னமங்கேநடநம்பி! நீயே.
702 மின்னொத்த நுண்ணிடையாளைக் கொண்டு * வீங்கு இருள்வாய் என்தன் வீதியூடே *
பொன்னொத்த ஆடை குக்கூடலிட்டுப் * போகின்ற போது நான் கண்டு நின்றேன் **
கண்ணுற்றவளை நீ கண்ணாலிட்டுக் * கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன் *
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய்? * இன்னம் அங்கே நட நம்பி நீயே. (5)
702 miṉṉŏtta nuṇṇiṭaiyāl̤aik kŏṇṭu * vīṅku irul̤vāy ĕṉtaṉ vītiyūṭe *
pŏṉṉŏtta āṭai kukkūṭaliṭṭup * pokiṉṟa potu nāṉ kaṇṭu niṉṟeṉ **
kaṇṇuṟṟaval̤ai nī kaṇṇāliṭṭuk * kai vil̤ikkiṉṟatum kaṇṭe niṉṟeṉ *
ĕṉṉukku aval̤ai viṭṭu iṅku vantāy? * iṉṉam aṅke naṭa nampi nīye. (5)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

702. I saw you one dark night, on my street, holding a girl with a lightning -like thin waist and veiling your faces with golden silk clothes. I also watched you looking at another girl and gesturing towards her. Why have you come to me now, leaving that girl? Dear Nambi, you better go back to her.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
மின்னொத்த மின்னல் போன்று; நுண் நுட்பமான; இடையாளை இடையுள்ளவளை; கொண்டு அழைத்துக் கொண்டு; வீங்கு இருள் வாய் மிக்க இருளிலே; என்தன் வீதியூடே என் வீதி வழியே; பொன்னொத்த ஆடை பீதாம்பரத்தாலே; குக்கூடலிட்டு முட்டாக்கிட்டுக் கொண்டு; போகின்ற போது போகும் போது; நான் நான்; கண்டு பார்த்து; நின்றேன் கொண்டிருந்தேன்; கண்ணுற்று கண்ணில் பட்ட; அவளை ஒரு பெண்ணை; நீ நீ; கண்ணாலிட்டு கண்ஜாடை காட்டி; கை விளிக்கின்றதும் அழைத்தையும்; கண்டே பார்த்துக் கொண்டு; நின்றேன் இருந்தேன்; அவளை அந்தப் பெண்ணை; விட்டு விட்டு; இங்கு என்னிடத்திற்கு; என்னுக்கு எதற்காக; வந்தாய்? வந்தாய்?; நம்பி! நீயே நம்பியே! நீ; இன்னம் இனி; அங்கே நட அங்கேயே போவாயாக
nāṉ I; kaṇṭu saw; niṉṟeṉ You; pokiṉṟa potu going; ĕṉtaṉ vītiyūṭe in my street; kukkūṭaliṭṭu covering Your head; pŏṉṉŏtta āṭai with Your orange garment; vīṅku irul̤ vāy in deep darkness; kŏṇṭu along with; iṭaiyāl̤ai a girl with waist that was; nuṇ thin; miṉṉŏtta like lightening; niṉṟeṉ I also kept; kaṇṭe observing; You; kaṇṇāliṭṭu gesturing towards; kai vil̤ikkiṉṟatum and calling; aval̤ai another girl; kaṇṇuṟṟu who caught Your eye; ĕṉṉukku why have You; viṭṭu left; aval̤ai that girl; vantāy? to come; iṅku to me; nampi! nīye O dear one!; iṉṉam from now on; aṅke naṭa go back to them

PMT 6.6

703 மற்பொருதோளுடைவாசுதேவா!
வல்வினையேன்துயில்கொண்டவாறே *
இற்றையிரவிடையேமத்தென்னை
இன்னணைமேலிட்டகன்றுநீபோய் *
அற்றையிரவுமோர்பிற்றைநாளும்
அரிவையரோடும் அணைந்துவந்தாய் *
எற்றுக்குநீயென்மருங்கில்வந்தாய் ?
எம்பெருமான்! நீயெழுந்தருளே.
703 மற்பொரு தோள் உடை வாசுதேவா * வல்வினையேன் துயில் கொண்டவாறே *
இற்றை இரவிடை ஏமத்து என்னை * இன்னணைமேல் இட்டு அகன்று நீ போய் **
அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும் * அரிவையரோடும் அணைந்து வந்தாய் *
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய்? * எம்பெருமான் நீ எழுந்தருளே (6)
703 maṟpŏru tol̤ uṭai vācutevā * valviṉaiyeṉ tuyil kŏṇṭavāṟe *
iṟṟai iraviṭai emattu ĕṉṉai * iṉṉaṇaimel iṭṭu akaṉṟu nī poy **
aṟṟai iravum or piṟṟai nāl̤um * arivaiyaroṭum aṇaintu vantāy *
ĕṟṟukku nī ĕṉ maruṅkil vantāy? * ĕmpĕrumāṉ nī ĕzhuntarul̤e (6)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

703. O Kannā with broad shoulders that fought with the wrestlers! Sinner as I am, you left me alone in the middle of the night, the moment I slept on my bed went away and spent a happy time the next day and the day after, with other girls. Why have you come to me now, leaving them? O dear one! go back to them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
மற்பொரு மல்லரோடு போர் செய்த; தோள் உடை தோளுடைய; வாசுதேவா! கண்ணபிரானே!; வல்வினையேன் மகாபாவியான நான்; துயில் தூங்குவதற்கு; கொண்டவாறே தொடங்கிய உடனே; இற்றை அன்றிரவு; இரவிடை ஏமத்து நடுச்சாமத்திலே; இன்னணை மேல் இனிய படுக்கையிலே; என்னை இட்டு என்னைப் படுக்கவிட்டு; நீ அகன்று போய் நீ விலகிப் போய்; அற்றை இரவும் அன்று இரவும்; ஓர் பிற்றை நாளும் அதற்கு மறுநாளும்; அரிவையரோடும் வேறு பெண்களோடும்; அணைந்து வந்தாய் கலந்து வந்தாய்; நீ எற்றுக்கு நீ எதற்கு; என் மருங்கில் என்னருகில்; வந்தாய்? வந்தாய்?; எம்பெருமான்! என் நாயகனே!; நீ எழுந்தருளே நீ அவர்களிடமே போய்விடு
vācutevā! oh Kannan!; tol̤ uṭai with shoulders; maṟpŏru that fought the wrestlers; valviṉaiyeṉ I, a great sinner; kŏṇṭavāṟe as soon as; tuyil I slept; iṟṟai on that very night; iraviṭai emattu in the middle of the night; ĕṉṉai iṭṭu when I; iṉṉaṇai mel was in the bed; nī akaṉṟu poy You left; aṇaintu vantāy to spend time; arivaiyaroṭum with girls; aṟṟai iravum on that night; or piṟṟai nāl̤um and the following day; nī ĕṟṟukku why have You come; ĕṉ maruṅkil close to; vantāy? me; ĕmpĕrumāṉ! my Lord!; nī ĕḻuntarul̤e You better go to them

PMT 6.7

704 பையரவின்னணைப்பள்ளியினாய்!
பண்டையோமல்லோம்நாம் * நீயுகக்கும்
மையரியொண்கண்ணினாருமல்லோம்
வைகியெம்சேரிவரவொழிநீ *
செய்யவுடையும்திருமுகமும்
செங்கனிவாயும்குழலும்கண்டு *
பொய்யொருநாள்பட்டதேயமையும்
புள்ளுவம்பேசாதேபோகுநம்பீ!
704 பையரவின் அணைப் பள்ளியினாய் பண்டையோம் அல்லோம் நாம் * நீ உகக்கும்
மையரி ஒண் கண்ணினாரும் அல்லோம் * வைகி எம் சேரி வரவு ஒழி நீ **
செய்ய உடையும் திருமுகமும் * செங்கனிவாயும் குழலும் கண்டு *
பொய் ஒரு நாள் பட்டதே அமையும் * புள்ளுவம் பேசாதே போகு நம்பீ (7) *
704 paiyaraviṉ aṇaip pal̤l̤iyiṉāy paṇṭaiyom allom nām * nī ukakkum
maiyari ŏṇ kaṇṇiṉārum allom * vaiki ĕm ceri varavu ŏzhi nī **
cĕyya uṭaiyum tirumukamum * cĕṅkaṉivāyum kuzhalum kaṇṭu *
pŏy ŏru nāl̤ paṭṭate amaiyum * pul̤l̤uvam pecāte poku nampī (7) *

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

704. "O, You who rest on the snake-bed of hooded Adishesha! O You the perfect One! We are not our usual selves as before, nor like those with beautiful eyes darkened with kohl, whom you loved. Please stop your untimely visits to our abodes. We were bewitched by your beautiful clothes, divine face, fruit-like red lips and the music of your flute and the troubles we had for a day is enough. Stop uttering your deceptive words and please go away.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
பையரவின் படங்களையுடைய ஆதிசேஷனின்; அணை படுக்கையில்; பள்ளியினாய்! சயனிப்பவனே!; நம்பீ பூர்ணனானவனே!; நாம் நாங்கள்; பண்டையோம் பழைய மாதிரி; அல்லோம் இல்லை; நீ உகக்கும் நீ விரும்பும்; மை அரிஒண் மையணிந்து கருவண்டு போல்; கண்ணினாரும் கண் படைத்தவர்களும்; அல்லோம் அல்ல; வைகி எம் அகாலத்தில் எங்கள்; சேரி இருப்பிடத்திற்கு; வரவு ஒழி நீ வருவதை இனி நீ விட்டுவிடு; செய்ய உடையும் அழகிய ஆடையையும்; திருமுகமும் திருமுகத்தையும்; செங்கனி சிவந்த கனி போன்ற; வாயும் அதரத்தையும்; குழலும் கண்டு கூந்தலையும் பார்த்து; பொய் உன் பொய் வார்த்தையில்; ஒரு நாள் ஒரு நாள்; பட்டதே அமையும் பட்டபாடு போதுமே; புள்ளுவம் வஞ்சகமான வார்த்தைகளை; பேசாதே பேசாமல்; போகு போய் விடுவாய்
nampī oh complete One!; pal̤l̤iyiṉāy! the One who rests on; aṇai the bed of; paiyaraviṉ a hooded serpent; nām we; allom are not; paṇṭaiyom like before; allom we are not; kaṇṇiṉārum the ones with eyes; mai ariŏṇ with kohl that looks like bees; nī ukakkum which You like; varavu ŏḻi nī You stop coming; ceri to our dwelling; vaiki ĕm at untimely hours; paṭṭate amaiyum it is enough we suffered on; ŏru nāl̤ once; kuḻalum kaṇṭu seeing Your hair; cĕyya uṭaiyum the beautiful clothes; tirumukamum the divine face; cĕṅkaṉi and the red fruit-like; vāyum lips; pŏy and listen to Your lies; poku just leave; pecāte without speaking; pul̤l̤uvam deceitful words

PMT 6.8

705 என்னைவருகவெனக்குறித்திட்டு
இனமலர்முல்லையின்பந்தர்நீழல் *
மன்னியவளைப்புணரப்புக்கு
மற்றென்னைக்கண்டுழறாநெகிழ்ந்தாய் *
பொன்னிறவாடையைக்கையில்தாங்கிப்
பொய்யச்சங்காட்டிநீபோதியேலும் *
இன்னமென்கையகத்தீங்கொருநாள்வருதியேல்
என்சினம்தீர்வன்நானே.
705 என்னை வருக எனக் குறித்திட்டு * இனமலர் முல்லையின் பந்தர் நீழல் *
மன்னி அவளைப் புணரப் புக்கு * மற்று என்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய் **
பொன்னிற ஆடையைக் கையில் தாங்கிப் * பொய் அச்சம் காட்டி நீ போதியேலும் *
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் * வருதியேல் என் சினம் தீர்வன் நானே (8)
705 ĕṉṉai varuka ĕṉak kuṟittiṭṭu * iṉamalar mullaiyiṉ pantar-nīzhal *
maṉṉi aval̤aip puṇarap pukku * maṟṟu ĕṉṉaik kaṇṭu uzhaṟā nĕkizhntāy **
pŏṉṉiṟa āṭaiyaik kaiyil tāṅkip * pŏy-accam kāṭṭi nī potiyelum *
iṉṉam ĕṉ kaiyakattu īṅku ŏru nāl̤ * varutiyel ĕṉ ciṉam tīrvaṉ nāṉe (8)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

705. You asked me to come here but you went away to be with another one hiding beneath the cover of the jasmine creepers. On seeing me, you mumbled and left the place. Though you pretended to be scared of me and ran away , holding your golden dress, the day you come here again, I will vent my anger.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
என்னை வருக என்னை வா என்று; எனக் குறித்திட்டு இடத்தைக்குறித்து விட்டு; இனமலர் நிறைந்த மலர்களையுடைய; முல்லையின் முல்லை; பந்தர் நீழல் பந்தலின் நிழலிலே; மன்னி பதுங்கி நின்ற; அவளை ஒருத்தியை; புணர சேர்வதற்கு; புக்கு சென்றாய்; மற்று என்னைக் பிறகு என்னை; கண்டு பார்த்து; உழறா கலங்கி; நெகிழ்ந்தாய் நழுவினாய்; பொன்னிற பொன்னிற; ஆடையை ஆடையை; கையில் தாங்கி கையிலே தாங்கியபடி; பொய் பொய்யாக எனக்கு; அச்சம் காட்டி பயந்தது போல் நடித்து; நீ போதியேலும் நீ ஓடிப் போன போதிலும்; இன்னம் இனிமேல்; என் கையகத்து என்னிடத்திற்கு; ஈங்கு ஒரு நாள் இங்கு ஒரு நாள்; வருதியேல் வருவாயாகில்; என் சினம் நான் என் கோபத்தை; தீர்வன் நானே தீர்த்துக் கொள்வேன்
ĕṉṉai varuka calling me to come; ĕṉak kuṟittiṭṭu to a specific place; pantar nīḻal under the canopy; iṉamalar filled with creepers; mullaiyiṉ of jasmine; maṉṉi You stood hidden; pukku and went; puṇara to be with; aval̤ai a women; maṟṟu ĕṉṉaik then You; kaṇṭu saw me; uḻaṟā got confused; nĕkiḻntāy and slipped away; kaiyil tāṅki holding in Your hands; pŏṉṉiṟa the golden; āṭaiyai garment; pŏy deceptively; accam kāṭṭi You acted like You were afraid of me; nī potiyelum and ran away; iṉṉam from now on; varutiyel if You; īṅku ŏru nāl̤ one day come; ĕṉ kaiyakattu to my place; ĕṉ ciṉam I will take out my anger; tīrvaṉ nāṉe and make You pay for it

PMT 6.9

706 மங்கலநல்வனமாலைமார்விலிலங்க
மயில்தழைப் பீலிசூடி *
பொங்கிளவாடை யரையில்சாத்திப்
பூங்கொத்துக்காதிற்புணரப்பெய்து *
கொங்குநறுங்குழலார்களோடு
குழைந்துகுழலினிதூதிவந்தாய் *
எங்களுக்கேயொருநாள்வந்தூத
உன்குழலின்னிசைபோதராதே.
706 மங்கல நல் வனமாலை மார்வில் இலங்க * மயில் தழைப் பீலி சூடி *
பொங்கு இள ஆடை அரையில் சாத்தி * பூங்கொத்துக் காதில் புணரப் பெய்து **
கொங்கு நறுங் குழலார்களோடு * குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய் *
எங்களுக்கே ஒருநாள் வந்து ஊத * உன் குழலின் இசை போதராதே? (9)
706 maṅkala nal vaṉamālai mārvil ilaṅka * mayil-tazhaip pīli cūṭi *
pŏṅku il̤a āṭai araiyil cātti * pūṅkŏttuk kātil puṇarap pĕytu **
kŏṅku naṟuṅ kuzhalārkal̤oṭu * kuzhaintu kuzhal iṉitu ūti vantāy *
ĕṅkal̤ukke ŏrunāl̤ vantu ūta * uṉ kuzhaliṉ icai potarāte? (9)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

706. “Adorned with lovely, auspicious flower garlands on the chest, with peacock feathers in your hair, your ears are adorned with a bunch of flowers, and wearing beautiful, bright clothes , You played sweet music on the flute for the girls, with hair adorned with fragrant kongu flowers and flirted with them. Won't you come and play music on your flute one day to enthrall us?"

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
மங்கல நல் மங்களகரமாய் நல்ல அழகிய; வன மாலை வனமாலையானது; மார்வில் இலங்க மார்பில் துலங்கவும்; மயில் தழை பீலி மயிலிறகுகளை; சூடி சூடிக்கொண்டும்; பொங்கு பளபளவென்ற; இள ஆடை மெல்லிய ஆடையை; அரையில் அரையிலே; சாத்தி சாத்திக் கொண்டும்; பூங்கொத்து பூங்கொத்தை; காதில் காதிலே; புணர பொருந்த; பெய்து அணிந்து கொண்டும்; கொங்கு தேன் மணம்; நறும் கமழ்கின்ற; குழலார்களோடு கூந்தலையுடையவர்களோடு; குழைந்து குழைந்தவாறு; குழல் புல்லாங்குழலை; இனிது ஊதி இனிதாக; வந்தாய் ஊதிக்கொண்டு வந்தாய்; எங்களுக்கே எங்களுக்காக; ஒரு நாள் ஒரு நாளாகிலும்; வந்து வந்து ஊத முடியாதோ?; ஊத ஊதினால்; உன் குழலின் இசை உன் குழலின் இசை; போதராதே? பொருந்தாதோ?
maṅkala nal the auspicious and beautifully charming; vaṉa mālai forest garland you wear; mārvil ilaṅka shines brightly on your chest; cūṭi You adorn Yourself with; mayil taḻai pīli peacock feathers; araiyil Your waist; cātti is wrapped; il̤a āṭai with fine delicate garment; pŏṅku that shines; pĕytu and wore it with style; pūṅkŏttu floral earring; puṇara fitted; kātil on Your ear; kuḻaintu blending with; kuḻalārkal̤oṭu the women with hair; naṟum that has the fragrance of; kŏṅku honey; vantāy You came playing; kuḻal the flute; iṉitu ūti sweetly; ĕṅkal̤ukke but for us; ŏru nāl̤ even for a day; vantu cant You come and play the flute?; ūta if You do; uṉ kuḻaliṉ icai will that melody; potarāte? not suit us?

PMT 6.10

707 அல்லிமலர்த்திருமங்கைகேள்வன்தன்னை
நயந்திளவாய்ச்சிமார்கள் *
எல்லிப்பொழுதினிலேமத்தூடி
எள்கியுரைத்தவுரையதனை *
கொல்லிநகர்க்கிறைகூடற்கோமான்
குலசேகரனின்னிசையில்மேவி *
சொல்லியவின்தமிழ்மாலைபத்தும்
சொல்லவல்லார்க்கில்லைதுன்பந்தானே. (2)
707 ## அல்லி மலர்த் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து * இள ஆய்ச்சிமார்கள் *
எல்லிப் பொழுதினில் ஏமத்து ஊடி * எள்கி உரைத்த உரையதனை **
கொல்லி நகர்க்கு இறை கூடற்கோமான் * குலசேகரன் இன்னிசையில் மேவி *
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும் * சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பந் தானே. (10)
707 ## alli malart tirumaṅkai kel̤vaṉ taṉṉai nayantu * il̤a āyccimārkal̤ *
ĕllip pŏzhutiṉil emattu ūṭi * ĕl̤ki uraitta uraiyataṉai **
kŏlli nakarkku iṟai kūṭaṟkomāṉ * kulacekaraṉ iṉṉicaiyil mevi *
cŏlliya iṉ tamizh mālai pattum * cŏlla vallārkku illai tuṉpan tāṉe. (10)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

707. Kulasekharan, the chief of Kolli and Madurai composed ten sweet Tamil pāsurams describing how the young cowherd girls fell in love with the beloved of beautiful goddess Lakshmi and how they expressed their friendly, loving fights with the lord. Those who recite with music these ten sweet Tamil pāsurams of Kulasekharan, will have no troubles in their lives.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
இள ஆய்ச்சிமார்கள் இளம் ஆய்ச்சிமார்கள்; அல்லி மலர் தாமரைப்பூவில் பிறந்த; திரு மங்கை ஸ்ரீதேவியின்; கேள்வன் கணவனான; தன்னை பிரானை; நயந்து ஆசைப்பட்டு; எல்லி இரவின்; பொழுதினில் நடுச்சாமத்திலே; ஏமத்து ஊடி ஊடலுடன் கூடி; எள்கி பேசியவற்றை; உரைத்த பாசுரங்களாக; உரையதனை அருளிச்செய்த; கொல்லி நகர்க்கு கொல்லி நகருக்கு; இறை தலைவரும்; கூடற்கோமான் மதுரைக்கு அரசருமான; குலசேகரன் குலசேகராழ்வார்; இன்னிசையில் மேவி இனிய பண்ணிலே பொருந்த; சொல்லிய அருளிச் செய்த; இன் தமிழ் இனிய தமிழாலாகிய; மாலை பத்தும் பத்துப் பாட்டுக்களையும்; சொல்ல வல்லார்க்கு அனுசந்திப்பவர்க்கு; இல்லை துன்பந்தானே துன்பம் ஏதும் வராதே!
kulacekaraṉ Kulasekhara Azhwar; kūṭaṟkomāṉ the king of Madurai; iṟai and the leader; kŏlli nakarkku to the city of Kolli; cŏlliya composed; iṉṉicaiyil mevi in sweet melodic tunes; uraiyataṉai recited; uraitta as sacred hymns; ĕl̤ki about things spoken; il̤a āyccimārkal̤ by young cowherd girls; nayantu describing their longing; taṉṉai for the Lord who is; kel̤vaṉ the consort; tiru maṅkai of Goddess Sri Devi; alli malar who is from a lotus flower; emattu ūṭi during the divine union; pŏḻutiṉil in the middle of; ĕlli the night; cŏlla vallārkku for those who recite; mālai pattum these ten songs; iṉ tamiḻ in beautiful Tamil; illai tuṉpantāṉe no sorrow shall ever come!