PMT 6.4

கண்ணா, என்னை ஏமாற்றி விட்டாயே!

701 தாய்முலைப்பாலிலமுதிருக்கத்
தவழ்ந்துதளர்நடையிட்டுச்சென்று *
பேய்முலைவாய்வைத்துநஞ்சையுண்டு
பித்தனென்றேபிறரேசநின்றாய் *
ஆய்மிகுகாதலோடுயானிருப்ப
யான்விடவந்த என்தூதியோடே *
நீமிகுபோகத்தைநன்குகந்தாய்
அதுவுமுன்கோரம்புக்கேற்குமன்றே.
701 tāy-mulaip pālil amutirukkat * tavazhntu tal̤arnaṭaiyiṭṭuc cĕṉṟu *
pey-mulai vāyvaittu nañcai uṇṭu * pittaṉ ĕṉṟe piṟar eca niṉṟāy **
āymiku kātaloṭu yāṉ iruppa * yāṉ viṭa vanta ĕṉ tūtiyoṭe *
nī miku pokattai naṉku ukantāy * atuvum uṉ korampukku eṟkum aṉṟe. (4)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

704 Though Yashodā was ready to feed you with sweet mother's milk you crawled and toddled towards devil Putanā and sucked the poison from her breasts, making people call you weird and crazy. When I waited with immense love for you here, you spent a lovely time with the maid I had sent. Is that also one of your naughty deeds?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாய் தாயாகிய யசோதையின்; முலைப் பாலில் தாய்ப் பாலில்; அமுதிருக்க இனிப்பு இருந்தபோதும்; தவழ்ந்து தவழ்ந்து; தளர் நடையிட்டு தட்டுத் தடுமாறி நடந்து; சென்று சென்று; பேய் முலை பூதனையின் மார்பகத்தில்; வாய்வைத்து வாய் வைத்து; நஞ்சை உண்டு விஷத்தை உண்டு; பித்தன் என்றே பித்தன் என்று; பிறர் ஏச ஊரார் ஏசும்படி; நின்றாய் நின்றவனே; ஆய்மிகு மிகவும் அதிகமான; காதலோடு காதலோடு; யான் இருப்ப நான் இருக்க; யான் விட வந்த நான் அனுப்பிவிட வந்த; என் தூதியோடே என் வேலைக்காரியோடே; நீ மிகு போகத்தை நீ மிகுந்த உல்லாசத்தை; நன்கு உகந்தாய் நன்றாக அனுபவித்தாய்; அதுவும் அந்தச் செய்கையும்; உன் உன்; கோரம்புக்கு குறும்புத்தனத்துக்கு; ஏற்கும் அன்றே ஏற்றபடி உள்ளதே