PMT 6.9

குழைந்து குழலூதி வரமாட்டாயா?

706 மங்கலநல்வனமாலைமார்விலிலங்க
மயில்தழைப் பீலிசூடி *
பொங்கிளவாடை யரையில்சாத்திப்
பூங்கொத்துக்காதிற்புணரப்பெய்து *
கொங்குநறுங்குழலார்களோடு
குழைந்துகுழலினிதூதிவந்தாய் *
எங்களுக்கேயொருநாள்வந்தூத
உன்குழலின்னிசைபோதராதே.
706
maNGgala nal vanamālai mārvil ilaNGga * mayil thazhai peeli soodi *
poNGgiLa ādai araiyil sātthi * pooNGgotthu kāthil puNarap peythu *
koNGgu naRuNG kuzhalārhaLOdu * kuzhaindhu kuzhalinidhu oothi vandhāy *
eNGgaLukkE oru_nāL vandhoodha * un kuzhal innisai pOdharāthE 6.9

Ragam

செஞ்சுருட்டி

Thalam

ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

706. “Adorned with lovely, auspicious flower garlands on the chest, with peacock feathers in your hair, your ears are adorned with a bunch of flowers, and wearing beautiful, bright clothes , You played sweet music on the flute for the girls, with hair adorned with fragrant kongu flowers and flirted with them. Won't you come and play music on your flute one day to enthrall us?"

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மங்கல நல் மங்களகரமாய் நல்ல அழகிய; வன மாலை வனமாலையானது; மார்வில் இலங்க மார்பில் துலங்கவும்; மயில் தழை பீலி மயிலிறகுகளை; சூடி சூடிக்கொண்டும்; பொங்கு பளபளவென்ற; இள ஆடை மெல்லிய ஆடையை; அரையில் அரையிலே; சாத்தி சாத்திக் கொண்டும்; பூங்கொத்து பூங்கொத்தை; காதில் காதிலே; புணர பொருந்த; பெய்து அணிந்து கொண்டும்; கொங்கு தேன் மணம்; நறும் கமழ்கின்ற; குழலார்களோடு கூந்தலையுடையவர்களோடு; குழைந்து குழைந்தவாறு; குழல் புல்லாங்குழலை; இனிது ஊதி இனிதாக; வந்தாய் ஊதிக்கொண்டு வந்தாய்; எங்களுக்கே எங்களுக்காக; ஒரு நாள் ஒரு நாளாகிலும்; வந்து வந்து ஊத முடியாதோ?; ஊத ஊதினால்; உன் குழலின் இசை உன் குழலின் இசை; போதராதே? பொருந்தாதோ?