PMT 6.3

கண்ணா, உன் மாயை வளர்கிறது

700 கருமலர்க்கூந்தலொருத்திதன்னைக்
கடைக்கணித்து * ஆங்கேயொருத்திதன்பால்
மருவிமனம்வைத்துமற்றொருத்திக்குரைத்து
ஒருபேதைக்குப்பொய்குறித்து *
புரிகுழல்மங்கையொருத்திதன்னைப்
புணர்தி அவளுக்கும்மெய்யனல்லை *
மருதிறுத்தாய்! உன்வளர்த்தியூடே
வளர்கின்றதாலுன்றன்மாயைதானே.
700 karumalark kūntal ŏruttitaṉṉaik * kaṭaikkaṇittu * āṅke ŏruttitaṉpāl
maruvi maṉam vaittu * maṟṟŏruttikku uraittu ŏru petaikkup pŏy kuṟittu **
purikuzhal maṅkai ŏruttitaṉṉaip puṇarti * aval̤ukkum mĕyyaṉ allai *
marutu iṟuttāy uṉ val̤arttiyūṭe * val̤arkiṉṟatāl uṉtaṉ māyai tāṉe. (3)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

700. “You cast glances at a girl with dark hair adorned with flowers, and gave your heart to another in the same place. you went to another and spoke about her. While you deceived another innocent girl with your enchanting words, you stood with another curly-haired young girl in embrace. But you are not true to any of them. O you who destroyed the asurās who came as maruda trees, as you grow, your mischief grows with you. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கருமலர் கறுத்த முடியில் மலர் சூடிய; கூந்தல் கூந்தலை உடையவளான; ஒருத்தி தன்னை ஒரு பெண்ணை; கடை கடைக்கண்ணால்; கணித்து பார்த்துவிட்டு; ஆங்கே அங்கேயே; ஒருத்தி வேறொரு; தன்பால் பெண்ணிடத்தில்; மருவி மனம் மனதை; வைத்து பொருந்த விட்டு; மற்றொருத்திக்கு மற்றும் ஒருத்தியிடம்; உரைத்து கூறிவிட்டு; ஒரு ஒரு பேதை; பேதைக்கு பெண்ணிடத்தில்; பொய் குறித்து பொய் சொல்லி; புரிகுழல் அழகிய கூந்தலையுடைய; மங்கை வேறு ஒரு; ஒருத்திதன்னை மங்கையுடன்; புணர்தி சேர்ந்து நின்றாய்; அவளுக்கும் அவளிடத்திலும்; மெய்யன் உண்மையாக; அல்லை இல்லாது நின்றாய்; மருது மருதமரங்களை; இறுத்தாய்! முறித்தவனே!; உன் உன்னுடைய; வளர்த்தியூடே வயது வளர்த்தியூடே; உன்தன் உன்னுடைய; மாயை தானே கள்ளத்தனமும்; வளர்கின்றதால் வளர்ந்து வருகின்றதே