PMT 6.1

வாசுதேவா, உனக்காகக் காத்திருந்தேனே!

698 ஏர்மலர்ப்பூங்குழலாயர்மாதர்
எனைப்பலருள்ளவிவ்வூரில் * உன்தன்
மார்வுதழுவுதற்காசையின்மைஅறிந்தறிந்தே
உன்தன் பொய்யைக்கேட்டு *
கூர்மழைபோல்பனிக்கூதலெய்திக்
கூசிநடுங்கியமுனையாற்றில் *
வார்மணற்குன்றில்புலரநின்றேன்
வாசுதேவா! உன்வரவுபார்த்தே. (2)
698 ## er malarp pūṅkuzhal āyar mātar * ĕṉaip palar ul̤l̤a iv ūril * uṉtaṉ
mārvu tazhuvutaṟku * ācaiyiṉmai aṟintaṟinte uṉtaṉ pŏyyaik keṭṭu **
kūr mazhai pol paṉik kūtal ĕytik * kūci naṭuṅki yamuṉai āṟṟil *
vār maṇal kuṉṟil pulara niṉṟeṉ * vācutevā uṉ varavu pārtte (1)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

698.“ O Vāsudevā, many of the cowherd women here whose hair is decorated with fragrant flowers don’t want to embrace your chest because you lied to them. Listening to your lies, I was standing on a sand dune on the banks of the Yamuna river, till dawn shaking in the cold that comes after a strong rain".

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாசுதேவா! கண்ணபிரானே!; ஏர் அழகிய மணம் மிக்க; மலர் மலரணிந்த; பூங்குழல் கூந்தலையுடைய; ஆயர் மாதர் ஆயர்ப் பெண்கள்; எனப் பலர் என்று பல; உள்ள பேர்களிருக்க; இவ் ஊரில் இந்தத் திருவாய்ப்பாடியில்; உன் தன் உனது; மார்வு மார்பை; தழுவுதற்கு அணைவதற்கு; ஆசையின்மை ஆசையில்லாமையை; அறிந்தறிந்தே நன்றாக அறிந்தும்; உன் தன் உனது; பொய்யைக் பொய்; கேட்டு பேச்சைக்கேட்டு; கூர் மழை பெரிய மழை; போல் போல் பெய்கிற; பனிக் கூதல் பனியாலுண்டான குளிரிலே; எய்தி அகப்பட்டு; கூசி நடுங்கி கூசி நடுங்கியபடி; யமுனை ஆற்றில் யமுனை நதியில்; வார் பெரியதொரு; மணற் குன்றில் மணற் குன்றிலே; உன் வரவு உன் வரவை; பார்த்தே எதிர்பார்த்துக் கொண்டு; புலர பொழுது விடியும் வரை; நின்றேன் காத்து நின்றேன்