Chapter 5

Lord of Vitruvakkottam - (தரு துயரம்)

வித்துவக்கோட்டு அம்மானையே வேண்டி நிற்றல்
Lord of Vitruvakkottam - (தரு துயரம்)
Vitruvakkodu is a Divya Desam located in Kerala. It is also known as Vithuvakkodu and Thirumittikodu. "Oh Vitruvakkodu Amman! I have come to you seeking refuge. You must protect me. Even if you do not remove my suffering, like a child crying out for its mother's grace, or like a citizen looking to the king's scepter for life, I will yearn and hope for + Read more
விற்றுவக்கோடு என்பது ஒரு திவ்விய தேசம். இது கேரள நாட்டில் உள்ளது. இதை வித்துவக்கோடு என்றும், திருமிற்றிக் கோடு என்றும் கூறுவர். விற்றுவக்கோட்டு அம்மானே! உன்னைத் தஞ்சமாக வந்தடைந்தேன். நீயே என்னைக் காக்க வேண்டும். நீ என் துன்பத்தை நீக்கா விட்டாலும், தாயின் அருளையே நினைந்து அழும் குழந்தை + Read more
Verses: 688 to 697
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Will not go to hell
  • PMT 5.1
    688 ## தரு துயரம் தடாயேல் உன் * சரண் அல்லால் சரண் இல்லை *
    விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ் * வித்துவக்கோட்டு அம்மானே **
    அரி சினத்தால் ஈன்ற தாய் * அகற்றிடினும் * மற்று அவள்தன்
    அருள் நினைந்தே அழும் குழவி * அதுவே போன்று இருந்தேனே (1)
  • PMT 5.2
    689 கண்டார் இகழ்வனவே * காதலன்தான் செய்திடினும் *
    கொண்டானை அல்லால் * அறியாக் குலமகள் போல் **
    விண் தோய் மதில் புடை சூழ் * வித்துவக்கோட்டு அம்மா * நீ
    கொண்டாளாயாகிலும் * உன் குரைகழலே கூறுவனே (2)
  • PMT 5.3
    690 மீன் நோக்கும் நீள் வயல் சூழ் * வித்துவக்கோட்டு அம்மா * என்
    பால் நோக்காயாகிலும் * உன் பற்று அல்லால் பற்று இலேன் **
    தான் நோக்காது * எத்துயரம் செய்திடினும் * தார் வேந்தன்
    கோல் நோக்கி வாழும் * குடி போன்று இருந்தேனே (3)
  • PMT 5.4
    691 வாளால் அறுத்துச் சுடினும் * மருத்துவன்பால் *
    மாளாத காதல் * நோயாளன் போல் மாயத்தால் **
    மீளாத் துயர் தரினும் * வித்துவக்கோட்டு அம்மா * நீ
    ஆளா உனது அருளே * பார்ப்பன் அடியேனே (4)
  • PMT 5.5
    692 வெங்கண் திண்களிறு அடர்த்தாய் * வித்துவக்கோட்டு அம்மானே *
    எங்குப் போய் உய்கேன்? * உன் இணையடியே அடையல் அல்லால் **
    எங்கும் போய்க் கரை காணாது * எறிகடல்வாய் மீண்டு ஏயும் *
    வங்கத்தின் கூம்பு ஏறும் * மாப் பறவை போன்றேனே (5)
  • PMT 5.6
    693 செந்தழலே வந்து * அழலைச் செய்திடினும் * செங்கமலம்
    அந்தரம் சேர் * வெங்கதிரோற்கு அல்லால் அலராவால் **
    வெந்துயர் வீட்டாவிடினும் * வித்துவக்கோட்டு அம்மா * உன்
    அந்தமில் சீர்க்கு அல்லால் * அகம் குழைய மாட்டேனே (6)
  • PMT 5.7
    694 எத்தனையும் வான் மறந்த * காலத்தும் பைங்கூழ்கள் *
    மைத்து எழுந்த மா முகிலே * பார்த்திருக்கும் மற்று அவை போல் **
    மெய்த் துயர் வீட்டாவிடினும் * வித்துவக்கோட்டு அம்மா * என்
    சித்தம் மிக உன்பாலே * வைப்பன் அடியேனே (7)
  • PMT 5.8
    695 தொக்கு இலங்கி யாறெல்லாம் * பரந்து ஓடி * தொடுகடலே
    புக்கு அன்றிப் புறம்நிற்க * மாட்டாத மற்று அவை போல் **
    மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் * வித்துவக்கோட்டு அம்மா * உன்
    புக்கு இலங்கு சீர் அல்லால் * புக்கிலன் காண் புண்ணியனே (8)
  • PMT 5.9
    696 நின்னையே தான் வேண்டி * நீள் செல்வம் வேண்டாதான் *
    தன்னையே தான் வேண்டும் * செல்வம்போல் மாயத்தால் **
    மின்னையே சேர் திகிரி * வித்துவக்கோட்டு அம்மானே *
    நின்னையே தான் வேண்டி * நிற்பன் அடியேனே (9)
  • PMT 5.10
    697 ## வித்துவக்கோட்டு அம்மா * நீ வேண்டாயே ஆயிடினும் *
    மற்று ஆரும் பற்று இலேன் என்று * அவனைத் தாள் நயந்து **
    கொற்ற வேல் தானைக் * குலசேகரன் சொன்ன *
    நற்றமிழ் பத்தும் வல்லார் * நண்ணார் நரகமே (10)