PMT 6.5

கண்ணா! இங்கு ஏன் வந்தாய்?

702 மின்னொத்தநுண்ணிடையாளைக்கொண்டு
வீங்கிருள்வாயென்றன்வீதியூடே *
பொன்னொத்தவாடைகுக்கூடலிட்டுப்
போகின்றபோதுநான்கண்டுநின்றேன் *
கண்ணுற்றவளைநீகண்ணாலிட்டுக்
கைவிளிக் கின்றதும்கண்டேநின்றேன் *
என்னுக்கவளைவிட்டிங்குவந்தாய் ?
இன்னமங்கேநடநம்பி! நீயே.
702 miṉṉŏtta nuṇṇiṭaiyāl̤aik kŏṇṭu * vīṅku irul̤vāy ĕṉtaṉ vītiyūṭe *
pŏṉṉŏtta āṭai kukkūṭaliṭṭup * pokiṉṟa potu nāṉ kaṇṭu niṉṟeṉ **
kaṇṇuṟṟaval̤ai nī kaṇṇāliṭṭuk * kai vil̤ikkiṉṟatum kaṇṭe niṉṟeṉ *
ĕṉṉukku aval̤ai viṭṭu iṅku vantāy? * iṉṉam aṅke naṭa nampi nīye. (5)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

702. I saw you one dark night, on my street, holding a girl with a lightning -like thin waist and veiling your faces with golden silk clothes. I also watched you looking at another girl and gesturing towards her. Why have you come to me now, leaving that girl? Dear Nambi, you better go back to her.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின்னொத்த மின்னல் போன்று; நுண் நுட்பமான; இடையாளை இடையுள்ளவளை; கொண்டு அழைத்துக் கொண்டு; வீங்கு இருள் வாய் மிக்க இருளிலே; என்தன் வீதியூடே என் வீதி வழியே; பொன்னொத்த ஆடை பீதாம்பரத்தாலே; குக்கூடலிட்டு முட்டாக்கிட்டுக் கொண்டு; போகின்ற போது போகும் போது; நான் நான்; கண்டு பார்த்து; நின்றேன் கொண்டிருந்தேன்; கண்ணுற்று கண்ணில் பட்ட; அவளை ஒரு பெண்ணை; நீ நீ; கண்ணாலிட்டு கண்ஜாடை காட்டி; கை விளிக்கின்றதும் அழைத்தையும்; கண்டே பார்த்துக் கொண்டு; நின்றேன் இருந்தேன்; அவளை அந்தப் பெண்ணை; விட்டு விட்டு; இங்கு என்னிடத்திற்கு; என்னுக்கு எதற்காக; வந்தாய்? வந்தாய்?; நம்பி! நீயே நம்பியே! நீ; இன்னம் இனி; அங்கே நட அங்கேயே போவாயாக