Chapter 7

Praising the conch - (கருப்பூரம் நாறுமோ)

வலம்புரிக்குக் கிடைத்த பேறு
Praising the conch - (கருப்பூரம் நாறுமோ)
"White Conch! Panchajanya! Among the five divine weapons, you have gained the greatest fortune! How can one describe the blessings you have received? You are in contact with the ruby-red lips of Lord Krishna! You taste the nectar of His mouth! The wealth you have attained is immense! Even Indra cannot match you! But there is one thing! It is not fair that you alone enjoy the nectar of Krishna's lips, which rightfully belongs to all the Gopis!" says Andal.
வெண் சங்கே! பாஞ்சசன்னியமே! பஞ்சாயுதங்களுள் நீயே பெரும்பேறு பெற்றவன்! நீ அடைந்த பாக்கியத்தை என்ன வென்று கூறுவது! கண்ணபிரான் திருப்பவளச் செவ்வாயோடு தொடர்பு கொண்டுள்ளாய்! வாயமுதைப் பருகுகிறாய்! நீ பெற்ற செல்வமே பெருஞ்செல்வம்! இந்திரனும் உனக்கு நிகராக மாட்டான்! ஆனால் ஒன்று! எல்லா கோபியர்களுக்கும் உரியதான கண்ணன் வாயமுதத்தை ஆக்கிரமித்து நீ ஒருவனே பருகுவது நல்லதன்று! என்று கூறுகிறாள் ஆண்டாள்.
Verses: 567 to 576
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Will be with the Lord
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

NAT 7.1

567 கருப்பூரம்நாறுமோ? கமலப்பூநாறுமோ? *
திருப்பவளச்செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ? *
மருப்பொசித்தமாதவன்றன் வாய்ச்சுவையும்நாற்றமும் *
விருப்புற்றுக்கேட்கின்றேன் சொல்லாழிவெண்சங்கே. (2)
567 ## கருப்பூரம் நாறுமோ? * கமலப் பூ நாறுமோ? *
திருப் பவளச் செவ்வாய்தான் * தித்தித்திருக்குமோ? **
மருப்பு ஒசித்த மாதவன் தன் * வாய்ச்சுவையும் நாற்றமும் *
விருப்புற்றுக் கேட்கின்றேன் * சொல் ஆழி வெண்சங்கே (1)
567 ## karuppūram nāṟumo? * kamalap pū nāṟumo? *
tirup paval̤ac cĕvvāytāṉ * tittittirukkumo? **
maruppu ŏcitta mātavaṉ taṉ * vāyccuvaiyum nāṟṟamum *
viruppuṟṟuk keṭkiṉṟeṉ * cŏl āzhi-vĕṇcaṅke (1)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 9-1

Simple Translation

567. O white conch, born in the ocean, tell me—I ask you anxiously. He puts you in His mouth to blow What is the taste and the fragrance of the mouth of Mādhavan who broke the tusks of the elephant? Does it have the fragrance of camphor? Does it have the fragrance of a lotus flower? Does his beautiful red coral mouth taste sweet?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆழி கம்பீரமான; வெண் வெண்மையான; சங்கே! சங்கே!; மருப்பு யானையின்; ஒசித்த கொம்பை முறித்த; மாதவன் தன் கண்ணனுடைய; வாய் உதட்டின்; சுவையும் சுவையையும்; நாற்றமும் மணத்தையும்; விருப்புற்று ஆசையோடு; கேட்கின்றேன் உன்னைக் கேட்கிறேன்; திருப் பவள அழகிய பவளம் போன்ற; செவ்வாய் தான் சிவந்த அதரத்தோடு; கருப்பூரம் பச்சைக்கற்பூரமென; நாறுமோ? மணக்குமோ?; கமலப்பூ தாமரையைப் போல்; நாறுமோ? மணம் வீசுமோ?; தித்தித்து தித்திப்பாக; இருக்குமோ? இருக்குமோ?; சொல் என்று எனக்குச் சொல்

NAT 7.2

568 கடலில்பிறந்து கருதாது * பஞ்சசனன்
உடலில்வளர்ந்துபோய் ஊழியான்கைத்தலத்து
திடரில் * குடியேறித் தீயவசுரர் *
நடலைப்படமுழங்கும் தோற்றத்தாய்நற்சங்கே.
568 கடலிற் பிறந்து கருதாது * பஞ்சசனன்
உடலில் வளர்ந்துபோய் * ஊழியான் கைத்தலத்து
திடரில் ** குடியேறி * தீய அசுரர் *
நடலைப் பட முழங்கும் * தோற்றத்தாய் நற் சங்கே (2)
568 kaṭaliṟ piṟantu karutātu * pañcacaṉaṉ
uṭalil val̤arntupoy * ūzhiyāṉ kaittalattu
tiṭaril ** kuṭiyeṟi * tīya acurar *
naṭalaip paṭa muzhaṅkum * toṟṟattāy naṟ caṅke (2)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

568. O beautiful conch! You were born in the ocean, you grew up in the body of the Asuran Pānchajanyam But now you are blessed to rest in His hand, You make the sound of victory when he conquers the evil Asurans.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நற் சங்கே! அழகிய சங்கே!; கடலில் பிறந்து கடலிலே பிறந்து; பஞ்சசனன் பஞ்சசனன் என்னும் அசுரனின்; உடலில் சரீரத்தில்; போய் வளர்ந்து போய் வளர்ந்து; கருதாது அதை நினையாமல்; ஊழியான் எம்பெருமான்; கைத்தலத் திடரில் கைத்தலத்தில்; குடி ஏறித் குடிபுகுந்து; தீய அசுரர் கொடிய அசுரர்கள்; நடலைப் பட துன்பப்படும்படி; முழங்கும் முழங்கும்; தோற்றத்தாய் தோற்றதைப் பெற்றாய்

NAT 7.3

569 தடவரையின்மீதே சரற்காலசந்திரன் *
இடையுவாவில்வந்து எழுந்தாலேபோல * நீயும்
வடமதுரையார்மன்னன் வாசுதேவன்கையில் *
குடியேறிவீற்றிருந்தாய் கோலப்பெருஞ்சங்கே!
569 தட வரையின் மீதே * சரற்கால சந்திரன் *
இடை உவாவில் வந்து * எழுந்தாலே போல நீயும் **
வட மதுரையார் மன்னன் * வாசுதேவன் கையில் *
குடியேறி வீற்றிருந்தாய் * கோலப் பெருஞ் சங்கே (3)
569 taṭa varaiyiṉ mīte * caraṟkāla cantiraṉ *
iṭai uvāvil vantu * ĕzhuntāle pola nīyum **
vaṭa maturaiyār-maṉṉaṉ * vācutevaṉ kaiyil *
kuṭiyeṟi vīṟṟiruntāy * kolap pĕruñ caṅke (3)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

569. You are a wonderful conch! Like the full moon that rises from behind the large mountain, in autumn, you stay in the hands of Vasudevan the king of northern Madhura.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோல அழகிய; பெருஞ் சங்கே! பெரும் சங்கே!; சரற்கால சந்திரன் சரத்கால சந்திரன்; இடை உவாவில் பௌர்ணமியன்று; தடவரையின் பெரிய மலை; மீதே வந்து மீது வந்து; எழுந்தாலே போல உதித்தது போல; நீயும் நீயும்; வடமதுரையார் வடமதுரை; மன்னன் மன்னன்; வாசுதேவன் கண்ணபிரான்; கையில் கையில்; குடி ஏறி குடி புகுந்து; வீற்று அமர்ந்து; இருந்தாய் இருக்கின்றாய்

NAT 7.4

570 சந்திரமண்டலம்போல் தாமோதரன்கையில் *
அந்தரமொன்றின்றி ஏறியவன்செவியில் *
மந்திரங்கொள்வாயேபோலும் வலம்புரியே *
இந்திரனுமுன்னோடு செல்வத்துக்கேலானே.
570 சந்திர மண்டலம் போல் * தாமோதரன் கையில் *
அந்தரம் ஒன்று இன்றி * ஏறி அவன் செவியில் **
மந்திரம் கொள்வாயே போலும் * வலம்புரியே ! *
இந்திரனும் உன்னோடு * செல்வத்துக்கு ஏலானே (4)
570 cantira-maṇṭalam pol * tāmotaraṉ kaiyil *
antaram ŏṉṟu iṉṟi * eṟi avaṉ cĕviyil **
mantiram kŏl̤vāye polum * valampuriye ! *
intiraṉum uṉṉoṭu * cĕlvattukku elāṉe (4)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

570. O beautiful large valampuri conch, You stay in Damodaran's hand, like the shining moon in the sky. Staying so close, do you say any mantras in his ears? Even Indra the king of gods does not have the fortune of closeness that you have.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வலம்புரியே! வலம்புரிச் சங்கே!; தாமோதரன் கண்ணபிரானது; கையில் கையில்; சந்திர சந்திர; மண்டலம் போல் மண்டலம் போல்; அந்தரம் ஒன்று இடைவிடாது; இன்றி ஏறி இருந்து கொண்டு; அவன் செவியில் அவனுடைய காதில்; மந்திரம் ரகசியம் பேசுவது; கொள்வாயே போலும் போல் நிற்கிறாய்; இந்திரனும் இந்திரனும்; செல்வத்துக்கு செல்வ விஷயத்தில்; உன்னோடு உனக்கு; ஏலானே இணையாக மாட்டான்

NAT 7.5

571 உன்னோடுடனே ஒருகடலில்வாழ்வாரை *
இன்னாரினையாரென்று எண்ணுவாரில்லைகாண் *
மன்னாகிநின்ற மதுசூதன்வாயமுதம் *
பன்னாளுமுண்கின்றாய் பாஞ்சசன்னியமே!
571 உன்னோடு உடனே * ஒரு கடலில் வாழ்வாரை *
இன்னார் இனையார் என்று * எண்ணுவார் இல்லை காண் **
மன் ஆகி நின்ற * மதுசூதன் வாயமுதம் *
பன்னாளும் உண்கின்றாய் * பாஞ்சசன்னியமே (5)
571 uṉṉoṭu uṭaṉe * ŏru kaṭalil vāzhvārai *
iṉṉār iṉaiyār ĕṉṟu * ĕṇṇuvār illai kāṇ **
maṉ āki niṉṟa * matucūtaṉ vāyamutam *
paṉṉāl̤um uṇkiṉṟāy * pāñcacaṉṉiyame (5)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

571. O Pānchajanyam! Others were born along with you in the ocean, but they do not receive the respect that you do. You drink constantly the nectar from the mouth of the king Madhusūdanan.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாஞ்சசன்னியமே! வெண் சங்கே!; ஒரு கடலில் ஒரே கடலில்; உன்னோடு உன்னோடு; உடனே கூடவே; வாழ்வாரை வாழ்பவர் பலரை; இன்னார் இவர்; இனையார் என்று இப்படிப்பட்டவர் என; எண்ணுவார் இல்லை மதிப்பாரில்லை; காண் ஆனால் நீயோவெனில்; மன் ஆகி சர்வ ஸ்வாமியாக; நின்ற இருக்கும்; மதுசூதன் கண்ணனின்; வாய் அமுதம் வாய் அமுதத்தை; பன்னாளும் பலகாலமாக; உண்கின்றாய் பருகுகின்றாய்

NAT 7.6

572 போய்த்தீர்த்தமாடாதே நின்றபுணர்மருதம் *
சாய்த்தீர்த்தான்கைத்தலத்தே ஏறிக்குடிகொண்டு *
சேய்த்தீர்த்தமாய்நின்ற செங்கண்மால்தன்னுடய *
வாய்த்தீர்த்தம்பாய்ந்தாடவல்லாய் வலம்புரியே!
572 போய்த் தீர்த்தம் ஆடாதே * நின்ற புணர் மருதம் *
சாய்த்து ஈர்த்தான் கைத்தலத்தே * ஏறிக் குடிகொண்டு **
சேய்த் தீர்த்தமாய் நின்ற * செங்கண் மால்தன்னுடைய *
வாய்த் தீர்த்தம் பாய்ந்து ஆட வல்லாய் * வலம்புரியே (6)
572 poyt tīrttam āṭāte * niṉṟa puṇar marutam *
cāyttu īrttāṉ kaittalatte * eṟik kuṭikŏṇṭu **
ceyt tīrttamāy niṉṟa * cĕṅkaṇ māltaṉṉuṭaiya *
vāyt tīrttam pāyntu āṭa vallāy * valampuriye (6)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

572. O Valampuri conch, You have not gone to the Ganges or on other pilgrimages to bathe, You rest in the hands of lovely-eyed Thirumāl who destroyed the Asurans when they came as marudam trees. You have the good fortune of plunging into the divine water that comes from his mouth.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வலம்புரியே! வலம்புரிசங்கே!; போய் வெகுதூரம் வழிநடந்துபோய்; தீர்த்தம் கங்கை முதலிய தீர்த்தங்களிலே; ஆடாதே நீராடும் கஷ்டங்கள் படாமல்; நின்ற நாரத சாபத்தாலே மரமாய்நின்ற; புணர் மருதம் இரட்டை மருதமரத்தை; சாய்த்து முறித்துத் தள்ளின; ஈர்த்தான் கண்ணபிரானுடைய; கைத்தலத்தே திருக்கைத்தலத்தின்; ஏறி மீதேறி; குடி கொண்டு குடி புகுந்து; சேய் மிகச்சிறந்த; தீர்த்தமாய் நின்ற தீர்த்தமாகிய; செங்கண் சிவந்த கண்களையுடைய; மால் தன்னுடைய கண்ணபிரானின்; வாய்த் தீர்த்தம் வாயிலுள்ள தீர்த்தத்திலே; பாய்ந்து படிந்து; ஆட நீராடும்; வல்லாய் பாக்யம் பெற்றிருக்கிறாய்

NAT 7.7

573 செங்கமலநாண்மலர்மேல் தேனுகருமன்னம்போல் *
செங்கண்கருமேனி வாசுதேவனுடய *
அங்கைத்தலமேறி அன்னவசஞ்செய்யும் *
சங்கரையா! உன்செல்வம் சாலவழகியதே.
573 செங்கமல நாள் மலர்மேல் * தேன் நுகரும் அன்னம் போல் *
செங்கண் கருமேனி * வாசுதேவனுடைய **
அங்கைத் தலம் ஏறி * அன்ன வசஞ் செய்யும் *
சங்கு அரையா உன் செல்வம் * சால அழகியதே (7)
573 cĕṅkamala nāl̤-malarmel * teṉ nukarum aṉṉam pol *
cĕṅkaṇ karumeṉi * vācutevaṉuṭaiya **
aṅkait talam eṟi * aṉṉa-vacañ cĕyyum *
caṅku-araiyā uṉ cĕlvam * cāla azhakiyate (7)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

573. O king of conches, Like a swan that stays on a fresh red lotus flower and drinks honey, you are in the beautiful hands of Vāsudevan with a dark body and red eyes and you stay with him. Your good fortune is truly wonderful.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாள் அன்றலர்ந்த; செங்கமல மலர் மேல் செந்தாமரைப் பூவில்; தேன் நுகரும் தேனைப் பருகும்; அன்னம்போல் அன்னப் பறவைபோல்; செங்கண் சிவந்த கண்களையும்; கருமேனி கறுத்த திருமேனியுமுடைய; வாசுதேவனுடைய கண்ணபிரானது; அங்கைத் தலம் அழகிய கைத்தலத்தின்; ஏறி மீதேறி; அன்ன வசஞ் செய்யும் கண் வளரும்; சங்கு அரையா! சிறந்த சங்கே!!; உன் செல்வம் உன்னுடைய செல்வமானது; சால அழகியதே! மிகவும் சிறந்ததன்றோ!

NAT 7.8

574 உண்பதுசொல்லில் உலகளந்தான்வாயமுதம் *
கண்படைகொள்ளில் கடல்வண்ணன்கைத்தலத்தே *
பெண்படையாருன்மேல் பெரும்பூசல்சாற்றுகின்றார் *
பண்பலசெய்கின்றாய் பாஞ்சசன்னியமே!
574 உண்பது சொல்லில் * உலகு அளந்தான் வாயமுதம் *
கண்படை கொள்ளில் * கடல்வண்ணன் கைத்தலத்தே **
பெண் படையார் உன் மேல் * பெரும் பூசல் சாற்றுகின்றார் *
பண் பல செய்கின்றாய் * பாஞ்சசன்னியமே (8)
574 uṇpatu cŏllil * ulaku al̤antāṉ vāyamutam *
kaṇpaṭai kŏl̤l̤il * kaṭalvaṇṇaṉ kaittalatte **
pĕṇ paṭaiyār uṉ mel * pĕrum pūcal cāṟṟukiṉṟār *
paṇ pala cĕykiṉṟāy * pāñcacaṉṉiyame (8)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

574. O Pānchajanyam, the food you eat is the nectar that springs from His mouth The place where you rest and sleep is the hand of the ocean-colored god who measured the world Like this you do many things that make women jealous and they complain loudly about your good luck,

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாஞ்சசன்னியமே! வெண் சங்கே!; உண்பது நீ உண்பது; சொல்லில் என்னவென்றால்; உலகளந்தான் உலகங்களை அளந்த; வாய் பிரானுடைய வாய்; அமுதம் அமிர்தம்; கண்படை நீ உறங்குவது; கொள்ளில் எங்கேயெனில்; கடல் வண்ணன் கடல் நிறத்தபிரானின்; கைத் தலத்தே திருக்கையிலே; பெண் படையார் பெண்கள் அனைவரும்; உன் மேல் பெரும் உன் மேல் பெரிய; பூசல் பொறாமை கொள்ளும்படியான; பண் பல பல காரியம்; செய்கின்றாய் செய்கிறாய்!

NAT 7.9

575 பதினாறாமாயிரவர் தேவிமார்பார்த்திருப்ப *
மதுவாயில்கொண்டாற்போல் மாதவன்றன்வாயமுதம் *
பொதுவாகவுண்பதனைப் புக்குநீயுண்டக்கால் *
சிதையாரோ? உன்னோடு செல்வப்பெருஞ்சங்கே!
575 பதினாறாம் ஆயிரவர் * தேவிமார் பார்த்திருப்ப *
மது வாயிற் கொண்டாற்போல் * மாதவன் தன் வாயமுதம் **
பொதுவாக உண்பதனைப் * புக்கு நீ உண்டக்கால் *
சிதையாரோ? உன்னோடு * செல்வப் பெருஞ்சங்கே (9)
575 patiṉāṟām āyiravar * tevimār pārttiruppa *
matu vāyiṟ kŏṇṭāṟpol * mātavaṉ taṉ vāyamutam **
pŏtuvāka uṇpataṉaip * pukku nī uṇṭakkāl *
citaiyāro? uṉṉoṭu * cĕlvap pĕruñcaṅke (9)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

575. O fortunate conch! When the sixteen thousand consorts of Madhavan wait to taste the nectar from His mouth, you enjoy His closeness and the dripping nectar from His mouth always. Won't they get angry seeing this?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெருஞ்செல்வ பெரிய செல்வம் போன்ற; சங்கே! சங்கே!; பதினாறாம் ஆயிரவர் பதினாறாயிரம்; தேவிமார் தேவியர்; கண்ணபிரானுடைய கண்ணபிரானின்; வாயமுதத்தை வாயமுதத்தை; பார்த்திருப்ப விரும்பி காத்திருக்கையில்; பொதுவாக மாதவன் தன் வாய் அமுதம்; உண்பதனை உண்பவனாக; நீ புக்கு நீயொருவனே ஆக்கிரமித்து; மது வாயில் தேனை; கொண்டாற்போல் உண்பது போல்; உண்டக்கால் உண்டால்; உன்னோடு உன்னோடு; சிதையாரோ? பிணக்கமாட்டார்களா?

NAT 7.10

576 பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும் *
வாய்ந்தபெருஞ்சுற்றமாக்கிய வண்புதுவை *
ஏய்ந்தபுகழ்ப்பட்டர்பிரான் கோதைதமிழீரைந்தும் *
ஆய்ந்தேத்தவல்லாரவரு மணுக்கரே. (2)
576 ## பாஞ்சசன்னியத்தைப் * பற்பநாபனோடும் *
வாய்ந்த பெருஞ் சுற்றம் * ஆக்கிய வண்புதுவை **
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் * கோதை தமிழ் ஈரைந்தும் *
ஆய்ந்து ஏத்த வல்லார் * அவரும் அணுக்கரே (10)
576 ## pāñcacaṉṉiyattaip * paṟpanāpaṉoṭum *
vāynta pĕruñ cuṟṟam * ākkiya vaṇputuvai **
eynta pukazhp paṭṭarpirāṉ * kotai tamizh īraintum *
āyntu etta vallār * avarum aṇukkare (10)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

576. Pattarpirān Kodai, famed in rich Puduvai, composed ten Tamil pāsurams describing Padmanābhan with the Pānchajanyam conch. Those who learn and recite these pāsurams will be near Him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாஞ்சசன்னியத்தை சங்கை; பற்பனாபனோடும் எம்பெருமானோடு; வாய்ந்த கிட்டிய; பெரும் பெரிய; சுற்றமாக்கிய உறவைச்சொன்ன; வண்புதுவை அழகிய ஸ்ரீ வில்லிபுத்தூரின்; ஏய்ந்த புகழ் புகழ் வாய்ந்த; பட்டர்பிரான் பெரியாழ்வாரின் மகள்; கோதை கோதையின்; தமிழ் தமிழ் பாசுரங்களான; ஈரைந்தும் இந்தப் பத்தையும்; ஆய்ந்து ஏத்த அனுபவித்துத் துதிக்க; வல்லார் வல்லவர்; அவரும் எவரும் கண்ணனுக்கு; அணுக்கரே நெருங்கியவர்கள் தான்