Chozha Nādu·Temple 12 of 108

Thirukudanthai

திருக்குடந்தை

Bāshkara Kshethram

ஸ்ரீ கோமளவல்லீ ஸமேத ஸ்ரீ சாரங்கபாணியே நமஹ
Image 1
12
Presiding Deities
MoolavarĀravamudan
ThāyārSri Komala Valli (Padithāndā Pathini)
UtsavarSri Sārangapāni, Aparyapthamrudan, Uttāna Sayee
Sayana (Reclining)Faces East Directions
VimānamVaidheega (Vedha Vedha)
PushkaraniHema Pushkarani (Potrāmarai), Cauveri, Arasalāru
ThirukolamSayana (Reclining)
DirectionEast
Location
MandalamChozha Nādu
AreaKumbakkonam
StateTamilNadu
Tradition
ĀgamamPāncharāthram
SampradāyamVadakalai
Festivals & Timings
Timings6:00 a.m. to 12:30 noon 4:30 p.m. to 9:00 p.m.
Recitation
Translation

TNT 2.17

2068 பொங்கார்மெல்லிளங்கொங்கைபொன்னேபூப்பப்

பொருகயல்கண்ணீரரும்பப்போந்துநின்று *

செங்காலமடப்புறவம்பெடைக்குப்பேசும்

சிறுகுரலுக்குஉடலுருகிச்சிந்தித்து * ஆங்கே

தண்காலும்தண்குடந்தைநகரும்பாடித்

தண்கோவலூர்பாடியாடக்கேட்டு *

நங்காய்! நங்குடிக்குஇதுவோநன்மை? என்ன

நறையூரும்பாடுவாள்நவில்கின்றாளே.

TEK 1

2672 ஒருபேருந்தியிருமலர்த்தவிசில் *

ஒருமுறையயனையீன்றனை * ஒருமுறை

இருசுடர்மீதினிலியங்கா * மும்மதி

ளிலங்கையிருகால்வளைய * ஒருசிலை

யொன்றியஈரெயிற்றழல்வாய்வாளியி *

னட்டனை * மூவடிநானிலம்வேண்டி *

முப்புரிநூலொடுமானுரியிலங்கு

மார்வினின் * இருபிறப்பொருமாணாகி *

ஒருமுறையீரடிமூவுலகளந்தனை *

நால்திசைநடுங்கஅஞ்சிறைப்பறவை

யேறி * நால்வாய்மும்மதத்திருசெவி

யொருதனிவேழத்தரந்தையை * ஒருநாள்

இருநீர்மடுவுள் தீர்த்தனை * முத்தீ

நான்மறைஐவகைவேள்வி * அறுதொழி

லந்தணர்வணங்குந்தன்மையை * ஐம்புலன்

அகத்தினுள்செறுத்து * நான்குடனடக்கி

முக்குணத்திரண்டவையகற்றி * ஒன்றினில்

ஒன்றிநின்று * ஆங்கிருபிறப்பறுப்போர்

அறியும்தன்மையை * முக்கண்நால்தோள்

ஐவாயரவோடு * ஆறுபொதிசடையோன்

அறிவருந்தன்மைப்பெருமையுள்நின்றனை *

ஏழுலகெயிற்றினில்கொண்டனை * கூறிய

அறுசுவைப்பயனுமாயினை * சுடர்விடும்

ஐம்படையங்கையுளமர்ந்தனை * சுந்தர

நால்தோள்முந்நீர்வண்ண! * நின்னீரடி

ஒன்றியமனத்தால் * ஒருமதிமுகத்து

மங்கையரிருவரும் மலரன * அங்கையின்

முப்பொழுதும்வருடஅறிதுயிலமர்ந்தனை *

நெறிமுறைநால்வகைவருணமுமாயினை *

மேதகும்ஐம்பெரும்பூதமும்நீயே *

அறுபதம்முரலுங்கூந்தல்காரணம் *

ஏழ்விடையடங்கச்செற்றனை * அறுவகைச்

சமயமும்அறிவருநிலையினை * ஐம்பா

லோதியையாகத்திருத்தினை * அறம்முதல்

நான்கவையாய்மூர்த்திமூன்றாய் *

இருவகைப்பயனாய் ஒன்றாய்விரிந்து

நின்றனை * குன்றாமதுமலர்ச்சோலை

வண்கொடிப்படப்பை * வருபுனற்பொன்னி

மாமணியலைக்கும் * செந்நெலொண்கழனித்

திகழ்வனமுடுத்த * கற்போர்புரிசைக்

கனகமாளிகை * நிமிர்கொடிவிசும்பில்

இளம்பிறைதுவக்கும் * செல்வம்மல்குதென்

திருக்குடந்தை * அந்தணர்மந்திரமொழியுடன்

வணங்க * ஆடரவமளியிலறிதுயில்

அமர்ந்தபரம! * நின்னடியிணைபணிவன்

வருமிடரகலமாற்றோவினையே. (2)