O Lord of Kuṭantai! Even After Death, Your Feet Are My Support.
திருக்குடந்தையானே! இறந்த பின்னும் நின் தாளே என் துணை
3312 என்நான்செய்கேன்? யாரேகளைகண்? என்னையென் செய்கின்றாய்? *
உன்னாலல்லால்யாவராலும் ஒன்றும்குறைவேண்டேன் *
கன்னார்மதிள்சூழ்குடந்தைக்கிடந்தாய்! அடியேனரு வாணாள் *
சென்னாளெந்நாள்? அந்நாள் உன்தாள்பிடித்தே செலக்காணே.