TNT 3.29

This dog-like self thinks only of Kaṇṇaṉ.

கண்ணனையே நாயேன் நினைக்கின்றேன்

2080 அன்றாயர்குலமகளுக்கரையன்தன்னை

அலைகடலைக்கடைந்தடைத்தஅம்மான்தன்னை *

குன்றாதவலியரக்கர்கோனைமாளக்

கொடுஞ்சிலைவாய்ச்சரந்துரந்துகுலங்களைந்து

வென்றானை * குன்றெடுத்ததோளினானை

விரிதிரைநீர்விண்ணகரம்மருவிநாளும்

நின்றானை * தண்குடந்தைக்கிடந்தமாலை

நெடியானை அடிநாயேன்நினைந்திட்டேனே. (2)

Text size