Chapter 5

Indra’s Palace - (இரு விசும்பில்)

இந்திரனின் அரண்மனை
Verses: 2726 to 2738
Grammar: Kaliveṇpā / கலிவெண்பா
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PTM 5.14

2726 இருவிசும்பில் மன்னுமழைதவழும் வாணிலாநீண்மதிதோய் *
மின்னினொளிசேர் விசும்பூரும்மாளிகைமேல் *
மன்னுமணி விளக்கைமாட்டி * மழைக்கண்ணார் -
2726 இரு விசும்பில் மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய் *
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல் *
மன்னும் மணி விளக்கை மாட்டி * மழை கண்ணார் 14
2726 iru vicumpil maṉṉum mazhai tavazhum vāl̤ nilā nīl̤ mati toy *
miṉṉiṉ ŏl̤i cer vicumpu ūrum māl̤ikaimel *
maṉṉum maṇi vil̤akkai māṭṭi * mazhai kaṇṇār 14

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2726. "The sages stay in palaces that shine like lightning as the clouds float above them. The moon shines from the sky and many bright lamps hang in the rooms where they stay(15).

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இரு விசும்பில் பரந்த ஆகாசத்தில்; மன்னும் மழை தவழும் மேகங்கள் வந்து நின்றும்; வாள் நிலா நீள் அழகிய நிலவையுடைய பெரிய; மதி தோய் சந்திரன் வந்து நின்றும்; மின்னின் மின்னலின்; ஒளி சேர் ஒளி போன்ற ஒளியை உடையதும்; விசும்பு ஊரும் ஆகாசத்தில் ஸஞ்சரிக்கும்; மாளிகை மேல் விமானத்தில்; மன்னும் மணி என்றும் அணையாத மணி; விளக்கை மாட்டி விளக்கைத் தொங்கவிட்டு; மழை குளிர்ந்த; கண்ணார் கண்களையுடையவரான மாதர்கள்
iruvisumbil mannu mazhai thavazhum in the expansive ethereal layer, with the region of clouds fitting well; vān nilā nīl̤ madhi thŏy with the huge, beautiful moon fitting well; minnin ol̤i sĕr having the lustre of lightning; visusmbu ūrum māl̤igai mĕl in the aerial vehicle which is roaming around in the sky; mazhai kaṇṇār women with cool eyes; mannu maṇi vil̤akkai mātti hanging the lamps of rubies, which will never get put out

PTM 5.15

2727 பன்னுவிசித்திரமாப் பாப்படுத்தபள்ளிமேல் *
துன்னியசாலேகம் சூழ்கதவம்தாள் திறப்ப *
அன்னமுழக்க நெரிந்துக்கவாள்நீலச் * சின்னநறுந்தாது சூடி * ஓர்மந்தாரம் -
2727 பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல் *
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப *
அன்னம் உழக்க நெரிந்து
உக்க வாள் நீலச் * சின்ன நறுந் தாது சூடி * ஓர் மந்தாரம் 15
2727 paṉṉu vicittiramāp pāppaṭutta pal̤l̤imel *
tuṉṉiya cālekam cūzh katavam tāl̤ tiṟappa *
aṉṉam uzhakka nĕrintu
ukka vāl̤ nīlac * ciṉṉa naṟun tātu cūṭi * or mantāram 15

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2727. Women with lovely cool eyes, wearing flowers that drip honey in their hair, spread beds and open the doors for them. There men wear fragrant mandaram flower garlands on their arms and bees from the karpaga flowers swarm around them. Swans wander in the garden. (16)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விசித்திரமா ஆச்சரியமான; பாப்படுத்த விசாலமாகப் பரப்பிய; பன்னு கொண்டாடத்தக்க; பள்ளிமேல் சயனத்தின் மீது; துன்னிய சாலேகம் நெருங்கிய சன்னல்களை; சூழ் கதவம் சுற்றியுள்ள கதவுகள்; தாள் திறப்ப திறந்துகொள்ள; அன்னம் உழக்க அன்னப்பறவைகள் மிதிப்பதனாலே; நெரிந்து உக்க நெரிந்து பொடியாகிய; வாள் நீல நீலோத்பல மலரின்; சின்ன நறு மணம் மிக்க சிறிய; தாது சூடி தாதுக்களைச் சூடிக்கொண்டும்; ஓர் மந்தாரம் பரமபோக்யான மந்த மாருதமானது; துன்னு சிறந்த மந்தார மரத்தின்
vichiththiramā pāppaduththa being spread out expansively; pannu pal̤l̤imĕl on the mattress which is to be extolled; thunniya sālĕgam sūzh kadhavam thāl̤ thiṛappa with the doors of the closely fabricated windows opening out; annam uzhakka nerindhu ukka vāl̤ neelam naṛu chinna thādhu sūdi wearing the grains of fragrant, minute pollens from the blue water lily which had been crushed by the stamping of swans

PTM 5.16

2728 துன்னுநறுமலரால் தோள்கொட்டி * கற்பகத்தின்
மன்னுமலர்வாய் மணிவண்டுபின்தொடர *
இன்னிளம்பூந்தென்றல் புகுந்தீங்கிளமுலைமேல் *
நன்னறுஞ்சந்தனச்சேறு உலர்த்த * தாங்கருஞ்சீர்-
2728 துன்னு நறு மலரால் தோள் கொட்டி *
கற்பகத்தின் மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர *
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல் *
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த * தாங்கு அரும் சீர் 16
2728 tuṉṉu naṟu malarāl tol̤ kŏṭṭi *
kaṟpakattiṉ maṉṉu malarvāy maṇi vaṇṭu piṉtŏṭara *
iṉ il̤am pūn tĕṉṟal pukuntu īṅku il̤a mulaimel *
nal naṟum cantaṉac ceṟu ulartta * tāṅku arum cīr 16

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2728. The sweet fresh breeze enters their room and dries the fragrant sandal paste that the Apsarasas have smeared on their young breasts. (17)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நறு அடர்ந்த மணம் மிக்க; மலரால் மலர்களால்; தோள் கொட்டி தோள்களை அலங்கரித்து; கற்பகத்தின் கற்பக மரத்து; மன்னு மலர்வாய் பூக்களிலே இருக்கும்; மணி வண்டு அழகிய வண்டுகள்; பின் தொடர பின்னால் தொடர்ந்து வர; இன் இளம் பூந் தென்றல் இனிய தென்றல்; புகுந்து ஈங்கு புகுந்து நன்கு வீச; இள அதனால் அப்பெண்கள்; முலைமேல் மார்பகங்களில் பூசிய; நல் நறும் நல்ல வாசனையான; சந்தனச் சேறு உலர்த்த சந்தனம் உலர; தாங்கு அரும் சீர் அவர்களின் அழகிய
ŏr mandhāram thunnu naṛumalarāl thŏl̤ kotti decorating the shoulders with fragrant flowers which are from the distinguished mandhāram tree (a celestial flower bearing tree); kaṛpagaththin mannu malar vāy maṇivaṇdu pinthodara being followed by beetles which had settled on the flowers of kalpaka vruksha (celestial, wish-fulfilling tree); in il̤a pū thenṛal the most enjoyable southerly wind; īngu pugundhu wafting inside wherever these people are going; il̤a mulai mĕl on top of the young bosom; nal naṛu sandhana sĕṛu ularththa drying up a fragrant sandal wood paste

PTM 5.17

2729 மின்னிடைமேல் கைவைத்திருந்து ஏந்திளமுலைமேல் *
பொன்னரும்பாரம்புலம்ப * - அகங்குழைந்தாங்கு
2729 மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல் *
பொன் அரும்பு ஆரம் புலம்ப * அகம் குழைந்து ஆங்கு 17
2729 miṉ iṭaimel kai vaittu iruntu entu il̤a mulaimel *
pŏṉ arumpu āram pulampa * akam kuzhaintu āṅku 17

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2729. The men joyfully put their hands on the lightning-like waists and the ornaments on the women’s breasts make noise. The sound of their jewels give joy to the hearts of the men. (18)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின் இடை மேல் நுண்ணிய இடுப்பின் மேல்; கை வைத்து இருந்து கை வைக்கும் போது; ஏந்து இளமுலைமேல் உன்னதமான மார்பின் மேல்; பொன் அரும்பு காசுமாலைகள்; ஆரம் புலம்ப ஒலிக்கும்படி நிற்க; ஆங்கு அவ்விருப்பைக் கண்டு; அகம் குழைந்து மனமுருகி
thānga aru sīr min idai mĕl kai vaiththu irundhu keeping the hand on the (subtle) difficult-to-bear waist which is like a beautiful lightning; ĕndhu il̤a mulai mĕl on top of the well-risen bosom; pon arumbu āram pulamba chains (worn by the celestial damsel) make sounds; āngu in that place

PTM 5.18

2730 இன்னவுருவின் இமையாத்தடங்கண்ணார் *
அன்னவர்தம்மானோக்கமுண்டு ஆங்கணிமுறுவல் *
இன்னமுதம் மாந்தியிருப்பர் * - இதுவன்றே
2730 இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார் *
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல் *
இன் அமுதம் மாந்தி இருப்பர் * இது அன்றே 19
2730 iṉṉa uruviṉ imaiyāt taṭaṅ kaṇṇār *
aṉṉavar tam māṉ nokkam uṇṭu āṅku aṇi muṟuval *
iṉ amutam mānti iruppar * itu aṉṟe 19

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2730. They drink the nectar from the mouths of the women with large eyes that never blink, enjoying their doe-like look and lovely smiles. (19)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இன்ன உருவின் இப்படிப்பட்ட வடிவு படைத்த; தடங் கண்ணார் நீண்ட கண்களையுடைய; இமையாத்து தேவலோகத்து; அன்னவர் தம் மாதர்களின்; மான் நோக்கம் மானைப்போன்ற நோக்கினை; உண்டு அநுபவித்து; ஆங்கு அதோடு; அணி முறுவல் அழகிய புன்சிரிப்பாகிய; இன் அமுதம் இனிய அம்ருதத்தையும்; மாந்தி இருப்பர் புசித்திருப்பர்கள்; அன்ன அறத்தின் அப்படிப்பட்ட தர்மத்தின் அறத்தின்; பயன் ஆவது பலனாகப் பெறும் பேறு; இது அன்றே இதுவேயாம்
agam kuzhanidhu with the heart softening; inna uruvin imaiyā thadam kaṇṇār having such great, expansive eyes; annavar tham such celestial damsels’; mān nŏkkam uṇdu enjoying the look of a doe’s eyes; āngu along with that; aṇi muṛuval innamudham māndhi iruppar they would have consumed the nectar of beautiful smile.; anna aṛaththin payan āvadhu idhu anṛĕ this is the benefit that one gets for that purushārtham dharmam (which ī had spoken of, earlier)

PTM 5.19

2731 அன்னவறத்தின் பயனாவது * ஒண்பொருளும்
அன்னதிறத்ததே யாதலால் * - காமத்தின்
மன்னும்வழிமுறையே நிற்றும்நாம் *
2731 அன்ன அறத்தின் பயன் ஆவது * ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் * காமத்தின்
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் 20
2731 aṉṉa aṟattiṉ payaṉ āvatu * ŏṇ pŏrul̤um
aṉṉa tiṟattate ātalāl * kāmattiṉ
maṉṉum vazhimuṟaiye niṟṟum nām 20

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2731. "Such is the result of their penance, which at best achieves only passion. I have described (20)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒண் பொருளும் அர்த்தமும் பொருளின்; அன்ன திறத்ததே பயனும் இதுவேயாம்; ஆதலால் அறம் பொருள் இரண்டுக்கும் காமமே; காமத்தின் பயனாகத் தேறுவதனால் அக்காமத்தின்; மன்னும் வழி நிலைநின்ற வழியாகிய; முறையே இறைவன் மீதான அன்பின் வழியே; நிற்றும் நாம் நாம் ஆர்வம் கொண்டவர்களாக இருப்போம்
oṇ porul̤um the benefit for the distinguished artha (wealth) purushārtham; anna thiṛaththadhĕ it is as lowly and as temporary (as this); ādhalāl for both the purushārthams aṛam (dharmam or righteousness) and porul̤ (wealth), since kāmam (love) is the benefit,; kāmaththin for that purushārtham kāmam; mannum vazhi muṛaiyĕ in the path of love towards bhagavān which is the well established path; nām niṝum we will be firmly involved with.

PTM 5.20

2732 மானோக்கின்
அன்னநடையாரலரேச ஆடவர்மேல் *
மன்னுமடலூரா ரென்பதோர்வாசகமும் *
தென்னுரையில் கேட்டறிவதுண்டு * - அதனையாம் தெளியோம்
மன்னும் வடநெறியே வேண்டினோம் * -
2732 மான் நோக்கின் *
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல் *
மன்னு மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும் *
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு * அதனை யாம் தெளியோம்
மன்னும் வட நெறியே வேண்டினோம் * 21
2732 māṉ nokkiṉ *
aṉṉa naṭaiyār alar eca āṭavarmel *
maṉṉu maṭal ūrār ĕṉpatu or vācakamum *
tĕṉ uraiyil keṭṭu aṟivatu uṇṭu * ataṉai yām tĕl̤iyom
maṉṉum vaṭa nĕṟiye veṇṭiṉom * 21

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2732. Doe-eyed women who walk like swans will not write letters when they love men even if others gossip about them. I have heard this and know it from the southern tradition, but I don’t want to worry about that. I have only described what the northern tradition says. (21)"

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மான் நோக்கின் மான் போன்ற நோக்கையும்; அன்ன அன்னம் போன்ற; நடையார் நடையையும் உடைய மாதர்கள்; அலர் ஏச உலகத்தார் பழிக்கும் படி; ஆடவர் மேல் ஆண்களை நோக்கி; மன்னும் மடல் ஊரார் ‘மடலூரக் கூடாது’; என்பது என்று சொல்லுகிற; ஓர் வாசகமும் ஒரு வாக்கியத்தை; தென் உறையில் தென் நாட்டு நெறி என்று தமிழர் மரபு; கேட்டுஅறிவது உண்டு அறிந்திருக்கிறோம்; அதனை யாம் அதனை நாம்; தெளியோம் ஏற்கமாட்டோம்; மன்னும் வட வட மொழி நூல்களில்; நெறியே சொல்லப்பட்டிருக்கும் நெறியையே; வேண்டினோம் பின் பற்றுவோம்
mān nŏkkin annam nadaiyār women who have eyes like a doe and gait like a swan; alar ĕsa to be abused (by worldly people); ādavar mĕl on the male (towards men); mannum madal ūrār enbadhu ŏr vāsagamum a saying “one should not engage in madal to sustain (one’s life)”; then uraiyil kĕttu aṛivadhu uṇdu we have heard of in thamizh language; nām adhanai thel̤iyŏm we do not consider that as having any clarity (it is not apt); mannum vadaneṛiyĕ vĕṇdinŏm (in this matter of engaging in madal) we will follow the method prescribed in great samskrutha literature

PTM 5.21

2733 வேண்டாதார்
தென்னன்பொதியில் செழுஞ்சந்தனக்குழம்பின் *
அன்னதோர் தன்மையறியாதார் * -
2733 வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின் *
அன்னது ஓர் தன்மை அறியாதார் * 22
2733 veṇṭātār
tĕṉṉaṉ pŏtiyil cĕzhuñ cantaṉak kuzhampiṉ *
aṉṉatu or taṉmai aṟiyātār * 22

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2733. Those who do not want to follow the northern tradition will not know the coolness of the sandal paste from the Podiyam hills of Pandyan kings. (22)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேண்டாதார் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ள காம நெறியை விரும்பாதவர்கள்; தென்னன் பாண்டிய நாட்டு; பொதியில் பொதிய மலை; செழுஞ் சந்தன குழம்பின் செழுஞ் சந்தன குழம்பின்; அன்னது ஓர் தன்மை ஓர் ஒப்பற்ற தன்மை; அறியாதார் அறியாதவர்கள் போன்று காமத்தின் வலிமையை உணராதவர் ஆவர்
vĕṇdādhār those who do not like (to cross the limit as mentioned in samskrutha texts); thennan podhiyil sezhum sandhanak kuzhambinannadhu ŏr thanmai aṛiyādhār those who do not know that property of the sandalwood paste made from sandalwood trees which grow in the podhigai malai (podhigai mountain range) in the kingdom of pāṇdyas.

PTM 5.22

2734 ஆயன்வேய்
இன்னிசை யோசைக்கு இரங்காதார் * மால்விடையின்
மன்னுமணி புலம்பவாடாதார் * -
2734 ஆயன் வேய்
இன் இசை ஓசைக்கு இரங்காதார் * மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் * 23
2734 āyaṉ vey
iṉ icai ocaikku iraṅkātār * māl viṭaiyiṉ
maṉṉum maṇi pulampa vāṭātār * 23

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2734. They will not understand the beauty of the sweet music of the flutes of the cowherds, or the suffering of cows when they hear the bells of the bulls returning home in the evening. (23)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆயன் ஆயர்குலச்சிறுவன்; வேய் ஊதுகிற புல்லாங்குழலின்; இன்னிசை ஓசைக்கு இனிய இசையைக் கேட்டு; இரங்காதார் மனம் தளராதே இருப்பவர்கள்; மால் பசுவின் மேலே ஆசையுற்று; விடையின் வரும் காளையின்; மன்னும் கழுத்தில் கட்டப்பட்ட; மணி மணி ஓசை கேட்டு; புலம்ப வாடாதார் மனம் தளர்ந்து புலம்பாதவர்
āyan vĕy innisai ŏsaikku irangādhār those who are not disheartened after hearing the sweet music played by the shepherd on his flute; māl vidaiyin the bull which comes infatuated (with the cow); mannu maṇi pulamba vādādhār those who are not dispirited after hearing the great sound of the bell (tied to that bull’s neck)

PTM 5.23

2735 பெண்ணைமேல்
பின்னும் அவ்வன்றிற்பேடைவாய்ச் சிறுகுரலுக்கு *
உன்னியுடலுருகிநையாதார் * -
2735 பெண்ணைமேல்
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு *
உன்னி உடல் உருகி நையாதார் * 24
2735 pĕṇṇaimel
piṉṉum av aṉṟil pĕṭai vāyc ciṟu kuralukku *
uṉṉi uṭal uruki naiyātār * 24

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2735. When they hear the sorrowful sound of the calling of the andril birds on the palm tree separated from their mates, they will not feel pain. (24)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெண்ணைமேல் பனைமரத்தின் மீது ஆண் அன்றிலுடன்; பின்னும் தன் வாயைப் பின்னிக்கொண்டிருக்கும்; அவ் அன்றில் பெடை வாய் பெண் அன்றிலின்; சிறு குரலுக்கு சிறு குரலைக் கேட்டு; உன்னி உடல் உருகி விரகத்தால் உடல் உருகி; நையாதார் குலையாதவர்
peṇṇaimĕl pinnum hooking its beak with its male’s, on top of the palm tree; avvanṛil pedai vāy siṛu kuralukku hearing the feeble voice from the mouth of the female love-bird; unni thinking back on the union with their males; udal urugi naiyādhār those who do not have their physical forms destroyed, by melting

PTM 5.24

2736 உம்பவர்வாய்த்
துன்னிமதியுகுத்த தூநிலா நீள்நெருப்பில் *
தம்முடலம்வேவத் தளராதார் * -
2736 உம்பர்வாய்த்
துன்னு மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில் *
தம் உடலம் வேவத் தளராதார் * 25
2736 umparvāyt
tuṉṉu mati ukutta tū nilā nīl̤ nĕruppil *
tam uṭalam vevat tal̤arātār * 25

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2736. When the shining moon in the sky sends its cool rays, their bodies will not burn. (25)"

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உம்பவர் வாய் ஆகாசத்தில்; துன்னு மதி உகுத்த சந்திரன் சொரிந்த; தூ நிலா தூய நிலவாகிற; நீள் நெருப்பில் பெரிய நெருப்பில்; தம் உடலம் தம் உடல்; வேவ வெந்துபோகும்படி; தளராதார் உருகிக் குலையாதவர் யாரென்றால்
umbar vāy in the sky; thunnu madhi uguththa emitted by moon which has dense rays; thū nilā nīl̤ neruppil in the huge fire, also known as pure moon; tham udalam vĕvath thal̤arādhār those who do not weaken such that their bodies are burnt

PTM 5.25

2737 காமவேள்
மன்னுஞ்சிலைவாய் மலர்வாளிகோத்தெய்ய *
பொன்நெடுவீதிபுகாதார் * -
2737 காமவேள்
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய *
பொன் நெடு வீதி புகாதார் * 26
2737 kāmavel̤
maṉṉum cilaivāy malar vāl̤i kottu ĕyya *
pŏṉ nĕṭu vīti pukātār * 26

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2737. "When Kama shoots his flower arrows from his everlasting bow they will not die and go to the golden street in heaven. (26)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காமவேள் மன்மதன் தன்; மன்னும் சிலைவாய் சிறந்த வில்லில்; மலர் வாளி பூக்களாகிய அம்புகளை; கோத்து எய்ய தொடுத்து எய்யவும் இனி மடலூர்வதே புருஷார்த்தமென்று; பொன் நெடு வீதி அழகிய பெரிய வீதிகளிலே; புகாதார் புறப்படாதவர்கள்
kāmavĕl̤ manmadha (cupid); silai vāy mannum malar vāl̤i kŏththu eyya even when manmadha strings arrows of flowers on his bow and shoots (affirming that engaging with madal is the purushārtham (benefit) now); pon nedu vīdhi pugādhār those who do not enter the beautiful, long streets

PTM 5.26

2738 தம்பூவணைமேல்
சின்னமலர்க்குழலும் அல்குலும்மென்முலையும் *
இன்னிளவாடைதடவத் தாம்கண்துயிலும் *
பொன்னனையார் பின்னுந்திருவுறுக * -
2738 தம் பூ அணைமேல்
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும் *
இன் இளவாடை தடவத் தாம் கண் துயிலும் *
பொன் அனையார் பின்னும் திரு உறுக * 27
2738 tam pū aṇaimel
ciṉṉa malark kuzhalum alkulum mĕṉ mulaiyum *
iṉ il̤avāṭai taṭavat tām kaṇ tuyilum *
pŏṉ aṉaiyār piṉṉum tiru uṟuka * 27

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2738. They will stay on their flower beds with women whose hair is decorated with flowers as a breeze caresses their waists and soft breasts, and they will sleep with those women who are precious like gold. Let them enjoy themselves. (27)"

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தம் பூ அணைமேல் தங்களுடைய புஷ்பசயனத்தின் மீது; சின்ன மலர்க் துகள்களையுடைய புஷ்பங்களையணிந்த; குழலும் கூந்தலையும்; அல்குலும் இடையையும்; மென் முலையும் மார்பகங்களையும்; இன் இளவாடை இனிதான வாடைக் காற்றானது; தடவ வந்து தடவ; தாம் கண் துயிலும் தூங்குகின்றவர்கள் தூங்கட்டும்; பொன் அனையார் பெண்களானவர்கள்; பின்னும் மேன்மேலும்; திரு உறுக மேனி அழகை மேம்படச் செய்துகொள்ளட்டும்
tham pū aṇai mĕl on their bed of flowers; chinnam malar kuzhalum tresses, adorning themselves with flowers which had just then blossomed.; algulum waist; mel mulaiyum soft bosom; in il̤a vādai thadava being stroked by the sweet, youthful northerly winds; kaṇ thuyilum sleeping (happily); pon anaiyār thām those who are fortunate; pinnum thiru uṛuga let them shine with more and more of physical beauty