PTM 5.18

தேவர் உலகத்து இன்பம் வேண்டாம்; தெய்வ இன்ப வழியில் செல்வோம்

2730 இன்னவுருவின் இமையாத்தடங்கண்ணார் *
அன்னவர்தம்மானோக்கமுண்டு ஆங்கணிமுறுவல் *
இன்னமுதம் மாந்தியிருப்பர் * - இதுவன்றே
2730 iṉṉa uruviṉ imaiyāt taṭaṅ kaṇṇār *
aṉṉavar tam māṉ nokkam uṇṭu āṅku aṇi muṟuval *
iṉ amutam mānti iruppar * itu aṉṟe 19

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2730. They drink the nectar from the mouths of the women with large eyes that never blink, enjoying their doe-like look and lovely smiles. (19)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இன்ன உருவின் இப்படிப்பட்ட வடிவு படைத்த; தடங் கண்ணார் நீண்ட கண்களையுடைய; இமையாத்து தேவலோகத்து; அன்னவர் தம் மாதர்களின்; மான் நோக்கம் மானைப்போன்ற நோக்கினை; உண்டு அநுபவித்து; ஆங்கு அதோடு; அணி முறுவல் அழகிய புன்சிரிப்பாகிய; இன் அமுதம் இனிய அம்ருதத்தையும்; மாந்தி இருப்பர் புசித்திருப்பர்கள்; அன்ன அறத்தின் அப்படிப்பட்ட தர்மத்தின் அறத்தின்; பயன் ஆவது பலனாகப் பெறும் பேறு; இது அன்றே இதுவேயாம்
agam kuzhanidhu with the heart softening; inna uruvin imaiyā thadam kaṇṇār having such great, expansive eyes; annavar tham such celestial damsels’; mān nŏkkam uṇdu enjoying the look of a doe’s eyes; āngu along with that; aṇi muṛuval innamudham māndhi iruppar they would have consumed the nectar of beautiful smile.; anna aṛaththin payan āvadhu idhu anṛĕ this is the benefit that one gets for that purushārtham dharmam (which ī had spoken of, earlier)