இது வன்றே அன்ன வறத்தின் பயனாவது – ஒரு சிறாங்கை என்கிறது – கிருஷிக்கு தக்க பலம் போராமை-
ஒண் பொருளும் அன்ன திறத்தே யாதலால் காமத்தின் – ஒண் பொருளும் அத்தனையே ஒண் பொருள் -ஆச்சார்யர்களையும் விட்டுப் பற்றுமவன் பஷத்தாலே –
மன்னும் வழி முறையே நிற்று – ஆபாச காமத்தை ஒழிய நிலை நின்ற பகவத் காமத்தின் வழியே-
நாம் – காமத்தை ஒழிய சர்வத்தையும் விட்ட நாம்