PTM 4.10 2722 முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற * அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன் * பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப * பொங்கு ஒளி சேர் கொல் நவிலும் கோள் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர் * 11
PTM 4.11 2723 மன்னிய சிங்காசனத்தின்மேல் * வாள் நெடுங் கண் கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து * ஆங்கு இன் இளம் பூந் தென்றல் இயங்க * மருங்கு இருந்த 11
PTM 4.12 2724 மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல் * முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப * அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர் * பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம் * மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை * இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர் * மன்னிய மா மயில் போல் கூந்தல் * மழைத் தடங் கண் 13
PTM 4.13 2725 மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து * மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின் * மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த * மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள் * அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று * 14