Chapter 6

Women who suffered to find and follow their beloveds. - Rama going to the forest with Vaidehi. - (போர் வேந்தன்)

பெண்கள் தங்களது அன்பானவர்களை கண்டுபிடித்து பின்பற்ற சிரமப்படுவது
Verses: 2739 to 2741
Grammar: Kaliveṇpā / கலிவெண்பா
  • PTM 6.27
    2739 போர் வேந்தன்
    தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து *
    பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு *
    மன்னும் வளநாடு கைவிட்டு * மாதிரங்கள் 28
  • PTM 6.28
    2740 மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு *
    கல் நிறைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று *
    பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா *
    கொல் நவிலும் வெம் கானத்தூடு * 29
  • PTM 6.29
    2741 கொடும் கதிரோன்
    துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால் *
    மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும் *
    அன்ன நடைய அணங்கு நடந்திலளே? * 30