துன்னு நறு மலரால் தோள் கொட்டிக் கற்பகத்தின் மன்னு மலர்வாய் மணி வண்டு பின் தொடர- அத்தாலே அது துகளாய் ஒளி மிக்க நீலப் பாவின் சின்ன நறும் தாதை ராஜாக்கள் வளையம் வைக்குமா போலே வைத்து மந்தாரப் பூவைத் தோளில் தோள் மாலையாக ஏறிட்டு கற்பகத்துக்கு எழுதிக் கொடுத்த வண்டுகள் தன்னைக் கொண்டு எழுந்து போகும் படியாய் –
இன்னிளம் பூந்தென்றல் புகுந்தீங்கு இள முலை மேல் -நன்னறும்