PTM 5.16 2728 துன்னு நறு மலரால் தோள் கொட்டி * கற்பகத்தின் மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர * இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல் * நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த * தாங்கு அரும் சீர் 16
PTM 5.17 2729 மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல் * பொன் அரும்பு ஆரம் புலம்ப * அகம் குழைந்து ஆங்கு 17
PTM 5.18 2730 இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார் * அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல் * இன் அமுதம் மாந்தி இருப்பர் * இது அன்றே 19
PTM 5.19 2731 அன்ன அறத்தின் பயன் ஆவது * ஒண் பொருளும் அன்ன திறத்ததே ஆதலால் * காமத்தின் மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் 20
PTM 5.20 2732 மான் நோக்கின் * அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல் * மன்னு மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும் * தென் உரையில் கேட்டு அறிவது உண்டு * அதனை யாம் தெளியோம் மன்னும் வட நெறியே வேண்டினோம் * 21
PTM 5.21 2733 வேண்டாதார் தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின் * அன்னது ஓர் தன்மை அறியாதார் * 22
PTM 5.22 2734 ஆயன் வேய் இன் இசை ஓசைக்கு இரங்காதார் * மால் விடையின் மன்னும் மணி புலம்ப வாடாதார் * 23
PTM 5.23 2735 பெண்ணைமேல் பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு * உன்னி உடல் உருகி நையாதார் * 24