Chapter 8

Yashoda embraces Kannan - (பொன் இயல்)

அச்சோப் பருவம்
Yashoda embraces Kannan - (பொன் இயல்)
Lord Krishna is the embodiment of devotion. He stands before those who call out to Him. He comes running when the devotees seek Him. He is Narayana, who dwells in the hearts of all. Yashoda has boundless love for her Krishna. When a child sees its mother, it rushes to embrace her. Similarly she desires that the child Krishna should also come running to her to embraced her.
பகவான் பக்தி சபலன். பக்தியுள்ளவர்கள் அழைத்தவுடன் எதிரில் வந்து நிற்பான். பெறியாழ்வார் அழைத்தால் எதிரில் வந்து நிற்பான். நச்சுவார்முன் நிற்கும் நாராயணன் அவன். யசோதைக்குக் கண்ணன்மீது அன்பு மிகுதி. குழந்தை தாயைக் கண்டவுடன் ஓடிவந்து அவளை அணைத்துக்கொள்ளும். குழந்தை கண்ணனும் அவ்வாறே வந்து தன்னை அணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாள் யசோதை!
Verses: 97 to 107
Grammar: Kaliththāḻisai, Taravu Kocchakakkalippā / கலித்தாழிசை, தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Will go to Vaikuṇṭam and rule the skys
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 1.8.1

97 பொன்னியல்கிண்கிணி சுட்டிபுறம்கட்டி *
தன்னியலோசை சலன்சலனென்றிட *
மின்னியல்மேகம் விரைந்தெதிர்வந்தாற்போல் *
என்னிடைக்கோட்டராஅச்சோவச்சோ எம்பெருமான்! வாராஅச்சோவச்சோ. (2)
97 ## பொன் இயல் கிண்கிணி * சுட்டி புறங் கட்டி *
தன் இயல் ஓசை * சலன் சலன் என்றிட **
மின் இயல் மேகம் * விரைந்து எதிர் வந்தாற்போல் *
என் இடைக்கு ஓட்டரா அச்சோ அச்சோ * எம்பெருமான் வாராய் அச்சோ அச்சோ (1)
97 ## pŏṉ iyal kiṇkiṇi * cuṭṭi puṟaṅ kaṭṭi *
taṉ iyal ocai * calaṉ-calaṉ ĕṉṟiṭa **
miṉ iyal mekam * viraintu ĕtir vantāṟpol *
ĕṉ iṭaikku oṭṭarā acco acco * ĕmpĕrumāṉ vārāy acco acco (1)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

97. The golden anklets that adorn Your feet jingle with a musical sound and the chutti (ornament) dangles on your forehead. O, dear One, You come fast like a cloud with lightning! Come and sit on my waist, achoo! achoo! O dear one, come and embrace me, achoo, achoo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொன் இயல் பொன்னால் செய்யப்பட்ட; கிண்கிணி சதங்கையும்; சுட்டி புறம் நெற்றிக்கு அழகூட்டும்; கட்டி தன் சுட்டியின்; இயல் ஓசை இயற்கையான ஒலி; சலன் சலன் என்றிட ‘ஜல்’ ‘ஜல்’ என்ற ஒலியும்; மின் இயல் மின்னலைத் தன்னிடத்தே கொண்ட; மேகம் மேகமானது; விரைந்து எதிர் விரைந்து எதிரே; வந்தாற்போல் வந்தது போல்; என் இடைக்கு என் இடுப்பிற்கு; ஓட்டரா ஓடிவந்து; அச்சோ! அச்சோ! என்னை அணைத்துக் கொள்ளவெண்டும்; எம்பெருமான் வாரா எம்பெருமானே! வந்து; அச்சோ! அச்சோ! என்னை அணைத்துக் கொள்ளானோ!
kiṇkiṇi anklets; pŏṉ iyal made of gold; kaṭṭi taṉ and chutti (ornament) that; cuṭṭi puṟam dangles on your forehead; calaṉ calaṉ ĕṉṟiṭa makes 'jal' jal'; iyal ocai musical sound; vantāṟpol like; mekam clouds; miṉ iyal with lightning; viraintu ĕtir that swifty comes in front of me; oṭṭarā come and run to me to; ĕṉ iṭaikku my waist; acco! acco! and embrace me; ĕmpĕrumāṉ vārā oh Lord! come; acco! acco! please embrace me!

PAT 1.8.2

98 செங்கமலப்பூவில் தேனுண்ணும்வண்டேபோல் *
பங்கிகள்வந்து உன்பவளவாய்மொய்ப்ப *
சங்குவில்வாள்தண்டு சக்கரமேந்திய *
அங்கைகளாலேவந்துஅச்சோவச்சோ ஆரத்தழுவா வந்துஅச்சோவச்சோ.
98 செங்கமலப் பூவில் * தேன் உண்ணும் வண்டே போல் *
பங்கிகள் வந்து * உன் பவளவாய் மொய்ப்ப **
சங்கு வில் வாள் தண்டு * சக்கரம் ஏந்திய *
அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ * ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ (2)
98 cĕṅkamalap pūvil * teṉ uṇṇum vaṇṭe pol *
paṅkikal̤ vantu * uṉ paval̤avāy mŏyppa **
caṅku vil vāl̤ taṇṭu * cakkaram entiya *
aṅkaikal̤āle vantu acco acco * ārat tazhuvāy vantu acco acco (2)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

98. Like the bees that swarm on a red lotus to drink nectar, your dark hair falls on your coral mouth. Come and embrace me with your beautiful hands that hold the conch, the bow, the sword, the club and the discus (Chakra). Come and stay on my waist, achoo! achoo! Come and embrace me tightly, achoo, achoo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செங்கமலப்பூவில் செந்தாமரைப்பூவில்; தேன் உண்ணும் தேனைக் குடித்த; வண்டே போல் வண்டுகளைப் போல; பங்கிகள் வந்து உனது சுருண்ட கூந்தல்; உன் பவளவாய் பவள நிறமாக உள்ள உன்வாயில்; மொய்ப்ப மொய்க்கும்படியாக; சங்கு வில் வாள் சங்கு வில் வாள்; தண்டு சக்கரம் ஏந்திய கதை சக்ராயுதம் தரித்த; அங்கைகளாலே வந்து அழகிய கைகளாலே; அச்சோ! அச்சோ! என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்; ஆரத்தழுவாய் மனதார நன்றாகத் தழுவி; வந்து ஓடிவந்து; அச்சோ! அச்சோ! என்னை அணைத்துக் கொள்ள மாட்டானோ
vaṇṭe pol like the bees that swarm; cĕṅkamalappūvil red lotus; teṉ uṇṇum to drink nectar; paṅkikal̤ vantu Your curly hair; mŏyppa falls on; uṉ paval̤avāy your coral mouth; caṅku vil vāl̤ the One with conch, the bow, the sword; taṇṭu cakkaram entiya and the club and the discus (Chakra; aṅkaikal̤āle vantu with Your beautiful hands; acco! acco! come and stay on my waist; ārattaḻuvāy embrace me tightly; vantu come and; acco! acco! please embrace me!

PAT 1.8.3

99 பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து *
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நல்பொய்கைபுக்கு *
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த *
அஞ்சனவண்ணனே! அச்சோவச்சோ ஆயர்பெருமானே! அச்சோவச்சோ.
99 பஞ்சவர் தூதனாய்ப் * பாரதம் கைசெய்து *
நஞ்சு உமிழ் நாகம் * கிடந்த நல் பொய்கை புக்கு **
அஞ்சப் பணத்தின்மேல் * பாய்ந்திட்டு அருள்செய்த *
அஞ்சனவண்ணனே அச்சோ அச்சோ * ஆயர் பெருமானே அச்சோ அச்சோ (3)
99 pañcavar tūtaṉāyp * pāratam kaicĕytu *
nañcu umizh nākam * kiṭanta nal pŏykai pukku **
añcap paṇattiṉmel * pāyntiṭṭu arul̤cĕyta *
añcaṉavaṇṇaṉe acco acco * āyar pĕrumāṉe acco acco (3)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

99. O dear one, You went as a messenger for the Pāndavās and fought for them in the Bhārathā war, entered the pond where the snake Kālingan lived, danced on him, made him surrender and gave your grace You have the dark color of kohl, achoo, achoo. O dear child of the cowherds, come and embrace me, achoo, achoo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பஞ்சவர் பாண்டவர்கள் உடைய; தூதனாய் தூதுவனாகச் சென்று; பாரதம் பாரதப் போரில்; கைசெய்து கை கொடுத்தவனும்; நஞ்சு உமிழ் விஷத்தைக் கக்கும்; நாகம் கிடந்த காளீய நாகம் இருந்த; நற் பொய்கை புக்கு தடாகத்திற்குள் புகுந்து; அஞ்ச அஞ்சும்படியாக; பணத்தின் பாம்பின் மேல்; பாய்ந்திட்டு பாய்ந்து அது சரணமடைய பின்பு அதற்கு அருள் செய்த; அஞ்சன வண்ணனே! மைபோன்ற அழகனே!; அச்சோ! அச்சோ! என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்; ஆயர் பெருமானே! ஆயர்பாடி மக்களுக்குத் தலவனே!; அச்சோ! அச்சோ! என்னை அணைத்துக் கொள்வானோ!
tūtaṉāy You went as a messenger; pañcavar for Pandavas; kaicĕytu the One who gave a helping hand; pāratam in the mahabaratha war; naṟ pŏykai pukku You entered the pond where; nākam kiṭanta serpent (Kaaliya) lived which; nañcu umiḻ spitted poison; paṇattiṉ to make the serpent; añca fear You; pāyntiṭṭu You jumped on it and blessed him to have him surrender; añcaṉa vaṇṇaṉe! oh beautiful dark One!; acco! acco! You embrance me; āyar pĕrumāṉe! oh Leader of the cowherd tribe; acco! acco! please embrace me!

PAT 1.8.4

100 நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்ன *
தேறிஅவளும் திருவுடம்பில்பூச *
ஊறியகூனினை உள்ளேயொடுங்க * அன்று
ஏறவுருவினாய்! அச்சோவச்சோ எம்பெருமான்! வாராஅச்சோவச்சோ.
100 நாறிய சாந்தம் * நமக்கு இறை நல்கு என்ன *
தேறி அவளும் * திருவுடம்பில் பூச **
ஊறிய கூனினை * உள்ளே ஒடுங்க * அன்று
ஏற உருவினாய் அச்சோ அச்சோ * எம்பெருமான் வாராய் அச்சோ அச்சோ (4)
100 nāṟiya cāntam * namakku iṟai nalku ĕṉṉa *
teṟi aval̤um * tiruvuṭampil pūca **
ūṟiya kūṉiṉai * ul̤l̤e ŏṭuṅka * aṉṟu
eṟa uruviṉāy acco acco * ĕmpĕrumāṉ vārāy acco acco (4)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

100. When you asked a hunch-backed woman, a servant of king Kamsan, to give you the fragrant sandal paste that she was carrying for the king, she took it and smeared it on your body without being afraid of the king. You straightened her back that was bent for a long time, with your hands. Come and embrace me, achoo! achoo! O dear one, come and embrace me, achoo, achoo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாறிய சாந்தம் மணம் வீசுகின்ற சந்தனத்தை; நமக்கு எங்களுக்கு தா; இறை நல்கு என்ன கொஞம் தா என்று கூனியை கேட்க; தேறி அவளும் அவளும் அதை ஏற்று; திருவுடம்பிற் பூச உன் திருமேனியிலே பூசியதும்; அன்று அப்போது; ஊறிய கூனினை பல ஆண்டுகளாய் இருந்த கூன்; உள்ளே ஒடுங்க உள்ளெ ஒடுங்கும்படி; ஏற உருவினாய்! கைகளால் நிமிர்த்து உருவினவனே!; அச்சோ! அச்சோ! என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்; எம்பெருமான்! எம்பெருமானே! வந்து; வாரா அச்சோ! அச்சோ! என்னை அணைத்துக் கொள்ளானோ!
iṟai nalku ĕṉṉa when You asked a hunchback women to; namakku give You; nāṟiya cāntam sandal that emanates fragrance; teṟi aval̤um she agreed and; tiruvuṭampiṟ pūca applied it on Your divine body; aṉṟu at that time; eṟa uruviṉāy! You straightened with Your hands; ūṟiya kūṉiṉai her back that was bent for a long time; ul̤l̤e ŏṭuṅka and rectified the hunchback problem; acco! acco! You have to embrance me; ĕmpĕrumāṉ! oh Lord! come; vārā, acco! acco! please embrace me!

PAT 1.8.5

101 கழல்மன்னர்சூழக் கதிர்போல்விளங்கி *
எழலுற்றுமீண்டே இருந்துஉன்னைநோக்கும் *
சுழலைப்பெரிதுடைத் துச்சோதனனை *
அழலவிழித்தானே! அச்சோவச்சோ ஆழியங்கையனே! அச்சோவச்சோ.
101 கழல் மன்னர் சூழக் * கதிர் போல் விளங்கி *
எழலுற்று மீண்டே * இருந்து உன்னை நோக்கும் **
சுழலை பெரிது உடைத் * துச்சோதனனை *
அழல விழித்தானே அச்சோ அச்சோ * ஆழி அங் கையனே அச்சோ அச்சோ (5)
101 kazhal maṉṉar cūzhak * katir pol vil̤aṅki *
ĕzhaluṟṟu mīṇṭe * iruntu uṉṉai nokkum **
cuzhalai pĕritu uṭait * tuccotaṉaṉai *
azhala vizhittāṉe acco acco * āzhi aṅ kaiyaṉe acco acco (5)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

101. In Duryodhanā’s assembly, surrounded by heroic ankleted kings, shining like a sun, when the wicked Duryodhanā saw you he stood up but then sat again, staring at you. You looked at him with fiery eyes and destroyed his evil thoughts, achoo, achoo You hold the discus in your beautiful hands. Come and embrace me, achoo, achoo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கழல் வீரக் கழலை அணிந்த; மன்னர் அரசர்கள்; சூழ சூழ்ந்திருக்க; கதிர்போல் சூரியன்போல; விளங்கி பிரகாசமாக; எழல் உற்று எழுந்திருக்க முயன்று; மீண்டு மறுபடியும்; இருந்து உட்கார்ந்து கொண்டு; உன்னை உன்னை; நோக்கும் நோக்கிய; பெரிது பெரும்பாலும்; கழலை உடை சூழ்ச்சியையே எண்ணுபவனான; துச்சோதனனை துர்யோதனனை; அழல விழித்தானே உக்ரமாகப் பார்த்தவனே!; அச்சோ அச்சோ என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்; ஆழி திரு சக்ரத்தையுடையவனே!; அம் கையனே அழகிய கையிலேந்தியவனே!; அச்சோ அச்சோ என்னை அணைத்துக் கொள்ளானோ!
katirpol seeing You like a sun; vil̤aṅki shining; cūḻa amidst; maṉṉar the kings; kaḻal wearing a heroic anklets; ĕḻal uṟṟu Duryodhanā stood up and; mīṇṭu later; iruntu sat down; tuccotaṉaṉai Duryodhanā; kaḻalai uṭai who was always thinking of evil plots; nokkum was looking at; uṉṉai You; pĕritu often; aḻala viḻittāṉe the One who looked at him ferociously!; acco acco You have to embrance me; am kaiyaṉe the One whose hand holds!; āḻi the divine disc!; acco acco please embrace me!

PAT 1.8.6

102 போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறைதீர்ப்பான் *
தேரொக்கவூர்ந்தாய் செழுந்தார்விசயற்காய் *
காரொக்கும்மேனிக் கரும்பெருங்கண்ணனே! *
ஆரத்தழுவாவந்துஅச்சோவச்சோ ஆயர்கள்போரேறே! அச்சோவச்சோ.
102 போர் ஒக்கப் பண்ணி * இப் பூமிப்பொறை தீர்ப்பான் *
தேர் ஒக்க ஊர்ந்தாய் * செழுந்தார் விசயற்காய் **
கார் ஒக்கு மேனிக் * கரும் பெருங் கண்ணனே *
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ * ஆயர்கள் போரேறே அச்சோ அச்சோ (6)
102 por ŏkkap paṇṇi * ip pūmippŏṟai tīrppāṉ *
ter ŏkka ūrntāy * cĕzhuntār vicayaṟkāy **
kār ŏkku meṉik * karum pĕruṅ kaṇṇaṉe *
ārat tazhuvāy vantu acco acco * āyarkal̤ poreṟe acco acco (6)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

102. You fought in the battle for the Pāndavās, to redress the burden of the earth. You became the charioteer for Arjunā adorned with beautiful garlands, You with big and dark eyes and a body as dark as a cloud, come and embrace me tightly, achoo, achoo, O ! You are the mighty bull that fights for the cowherds, achoo, achoo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இப்பூமி இந்தப் பூமியினுடைய; பொறை பாரத்தை; தீர்ப்பான் தீர்ப்பதற்காக; போர் கௌரவர்களோடு; ஒக்க பண்ணி நேருக்கு நேர் யுத்தம்; பண்ணி செய்து; செழு தார் செழிப்பான தும்பை மாலை அணிந்துள்ள; விசயற்கு ஆய் அர்ஜுனனுக்காக; தேர் ஒக்க கௌரவர் தேர்களுக்கு ஈடாகும்படி; ஊர்ந்தாய் பாகனாய் தேரைச் செலுத்தினவனே!; நார் ஒக்கும் மேகம் போன்ற நிறமுடைய; மேனி திருமேனியில்; கரும்பெரும் கரிய பெரிய; கண்ணனே! கண்ணழகனே!; வந்து ஆர ஓடிவந்து நெஞ்சார; தழுவா அச்சோ அச்சோ என்னை தழுவிக்கொள்ளாயோ!; ஆயர்கள் யாதவர்களின்; போர் ஏறே போர்க் காளையே!; அச்சோ அச்சோ வாராயோ வாராயோ
tīrppāṉ to reduce; pŏṟai the burden for; ippūmi this earth; paṇṇi You participated; ŏkka paṇṇi in a face to face battle; por against Gauravas; ūrntāy you became a charioteer; vicayaṟku āy for Arjuna; cĕḻu tār who wore thumbai garland; ter ŏkka to match the chariots of Gauravas; kaṇṇaṉe! One with beautiful eyes; karumpĕrum that were big and dark; meṉi with a divine body with; nār ŏkkum the skin tone of dark clouds; vantu āra come with affection; taḻuvā acco acco please embrace me!; por eṟe oh war Bull!; āyarkal̤ who fought for cowherds; acco acco please come, please come

PAT 1.8.7

103 மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில் *
தக்கதிதன்றென்று தானம்விலக்கிய *
சுக்கிரன்கண்ணைத் துரும்பால்கிளறிய *
சக்கரக்கையனே! அச்சோவச்சோ சங்கமிடத்தானே! அச்சோவச்சோ.
103 மிக்க பெரும்புகழ் * மாவலி வேள்வியில் *
தக்கது இது அன்று என்று * தானம் விலக்கிய **
சுக்கிரன் கண்ணைத் * துரும்பாற் கிளறிய *
சக்கரக் கையனே அச்சோ அச்சோ * சங்கம் இடத்தானே அச்சோ அச்சோ (7)
103 mikka pĕrumpukazh * māvali vel̤viyil *
takkatu itu aṉṟu ĕṉṟu * tāṉam vilakkiya **
cukkiraṉ kaṇṇait * turumpāṟ kil̤aṟiya *
cakkarak kaiyaṉe acco acco * caṅkam iṭattāṉe acco acco (7)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

103. When the famous Mahābali performed a yagnā (You came as a dwarf and asked for land as a boon), When the Guru Sukrāchariyar felt it not good and wished to stop the sacrifice, You were angry and pricked his eye with a twig. You carry the discus (chakra) in your right hand, achoo, achoo, and the conch in your left hand, achoo, achoo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மிக்க பெரும் புகழ் மிகுந்த புகழ் பெற்ற; மாவலி வேள்வியில் மகாபலியின் யாகத்திலே; இது பூமியைத் தானம் கொடுப்பது; தக்கது அன்று சரி அல்ல; என்று தானம் என்று கருதி தானத்தை; விலக்கிய விலக்க முயன்ற; சுக்கிரன் சுக்கிராச்சாரியாருடைய; கண்ணை கண்ணை; துரும்பால் கிளறிய சிறிய துரும்பால் குத்தியவனே!; சக்கரக் கையனே! சக்கரமேந்திய பெருமானே!; அச்சோ! அச்சோ! வாராயோ வாராயோ!; சங்கம் பாஞ்ச சன்னியம் எனும் சங்கை; இடத்தானே! இடது கையில் ஏந்தியவனே!; அச்சோ! அச்சோ! வாராயோ வாராயோ!
māvali vel̤viyil when a yagna performed by Mahabali; mikka pĕrum pukaḻ the one with great fame; cukkiraṉ Sukracharya; vilakkiya wanted to stop the; ĕṉṟu tāṉam sacrifice thinking its; takkatu aṉṟu not good to; itu give land as sacrifice; turumpāl kil̤aṟiya with a twig you poked; kaṇṇai his eyes; cakkarak kaiyaṉe! the Lord holding disc!; acco! acco! please come, come!; iṭattāṉe! the One holding on the left hand!; caṅkam the conch, called Panchajanya; acco! acco! please come, please come!

PAT 1.8.8

104 என்னிதுமாயம்? என்னப்பன்அறிந்திலன் *
முன்னையவண்ணமேகொண்டு அளவாயென்ன *
மன்னுநமுசியை வானில்சுழற்றிய *
மின்னுமுடியனே! அச்சோவச்சோ வேங்கடவாணனே! அச்சோவச்சோ.
104 என் இது மாயம்? * என் அப்பன் அறிந்திலன் *
முன்னைய வண்ணமே கொண்டு * அளவாய் என்ன **
மன்னு நமுசியை * வானில் சுழற்றிய *
மின்னு முடியனே அச்சோ அச்சோ * வேங்கடவாணனே அச்சோ அச்சோ (8)
104 ĕṉ itu māyam? * ĕṉ appaṉ aṟintilaṉ *
muṉṉaiya vaṇṇame kŏṇṭu * al̤avāy ĕṉṉa **
maṉṉu namuciyai * vāṉil cuzhaṟṟiya *
miṉṉu muṭiyaṉe acco acco * veṅkaṭavāṇaṉe acco acco (8)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

104. “What is this magic? My father didn’t know your tricks. When you asked for land from my father, you were a dwarf. But now you have become so tall that you measure the earth and the sky. Come in your former appearance". So said the adamant Namusi, the son of Mahābali. You lifted him up and threw him down to the earth from the sky. O you with a shining crown, embrace me, achoo, achoo. You are the god of Thiruvenkatam hills, achoo, achoo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்ன இது மாயம்? என்ன இது மாயமாக இருக்கிறது?; என் அப்பன் அறிந்திலன் என் தந்தைக்கும் விளங்கவில்லை; முன்னைய முன்பு இருந்த; வண்ணமே வாமனன் உருவையே; கொண்டு அளவாய் கொண்டு அளந்து கொள்; என்ன என்று மகாபலியின் மகன் நமுசி கூற; மன்னு நமுசியை பிடிவாதமாக் இருந்த நமுசியை; வானில் சுழற்றிய ஆகாயத்தில் சுழற்றி எறிந்தவனான; மின்னு முடியனே! ஜொலிக்கும் கிரீடம் அணிந்தவனே!; அச்சோ! அச்சோ! வாராயோ வாராயோ!; வேங்கட வாணனே! வேங்கடமலை பெருமானே!; அச்சோ! அச்சோ! வாராயோ வாராயோ!
ĕṉṉa Mahabali's son, Namusi asked the lord; ĕṉṉa itu māyam? is this magic?; ĕṉ appaṉ aṟintilaṉ his father also did not understand; maṉṉu namuciyai Namusi was adamant; kŏṇṭu al̤avāy and asked the lord to measure the land using; vaṇṇame the dwarf form that; muṉṉaiya He Had earlier; vāṉil cuḻaṟṟiya You threw Namusi into the sky; miṉṉu muṭiyaṉe! the One with shining crown!; acco! acco! please come, please come!; veṅkaṭa vāṇaṉe! the Lord of Thiruvenkatam hills!; acco! acco! please come, please come!

PAT 1.8.9

105 கண்டகடலும் மலையும்உலகேழும் *
முண்டத்துக்காற்றா முகில்வண்ணாவோ! என்று *
இண்டைச்சடைமுடி ஈசன்இரக்கொள்ள *
மண்டைநிறைத்தானே! அச்சோவச்சோ மார்வில்மறுவனே! அச்சோவச்சோ.
105 கண்ட கடலும் * மலையும் உலகு ஏழும் *
முண்டத்துக்கு ஆற்றா * முகில்வண்ணா ஓ என்று **
இண்டைச் சடைமுடி * ஈசன் இரக்கொள்ள *
மண்டை நிறைத்தானே அச்சோ அச்சோ * மார்வில் மறுவனே அச்சோ அச்சோ (9)
105 kaṇṭa kaṭalum * malaiyum ulaku ezhum *
muṇṭattukku āṟṟā * mukilvaṇṇā o ĕṉṟu **
iṇṭaic caṭaimuṭi * īcaṉ irakkŏl̤l̤a *
maṇṭai niṟaittāṉe acco acco * mārvil maṟuvaṉe acco acco (9)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

105. “Even all the deep oceans, the mountains and the seven worlds cannot fill this Nānmuhan’s (Brahmā's) skull that has stuck to my hand. (Nānmuhan’s head was stuck to Shivā’s palm because of a curse) O dark cloud-colored lord, help me!”, implored Shivā, with matted hair, and you filled Nānmuhan’s head (the skull) with your blood Embrace me, achoo, achoo, You bear the mark of Srivatsam on your chest, achoo, achoo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இண்டை நெருங்கிய; சடைமுடி ஜடாமுடியை உடைய; ஈசன் ருத்திரன்; கண்ட கண்களுக்குப் புலப்படும்; கடலும் கடல்களும்; மலையும் மலைகளும்; உலகு ஏழும் ஏழு உலகங்களும்; முண்டத்துக்கு என் கை கபாலத்திற்குப்; ஆற்றா போதாததாயிருக்கின்றன; முகில் வண்ணா! மேக வண்ணனே!; ஓ! என்று ஓவென்று உரக்கக் குரல் கொடுத்து; இரக்கொள்ள ஈசன் யாசிக்க; மண்டை அந்த கபாலத்தை; நிறைத்தானே! நிறைத்தவனே!; அச்சோ! அச்சோ! வராயோ வாராயோ!; மறுவனே! ஸ்ரீவத்ஸ மச்சத்தை; மார்வில் மார்பில் உடையவனே!; அச்சோ! அச்சோ! வாராயோ வாராயோ!
īcaṉ Rudra with; iṇṭai highly dense; caṭaimuṭi matted hair; āṟṟā realizing that we wasnt able to fill; muṇṭattukku the skull of Brahma that was stuck to his hand; kaṭalum with seas; malaiyum mountains; ulaku eḻum seven worlds; kaṇṭa visible to the eyes; mukil vaṇṇā! he requested Kannan, the cloud colored One!; o! ĕṉṟu with a loud crying voice; irakkŏl̤l̤a when Shiva requested; niṟaittāṉe! You filled!; maṇṭai that skull; acco! acco! please come, please come!; mārvil One's chest that contains; maṟuvaṉe! Srivatsam mole; acco! acco! please come, please come!

PAT 1.8.10

106 துன்னியபேரிருள் சூழ்ந்துஉலகைமூட *
மன்னியநான்மறை முற்றும்மறைந்திட *
பின்னிவ்வுலகினில் பேரிருள்நீங்க * அன்று
அன்னமதானானே! அச்சோவச்சோ அருமறைதந்தானே! அச்சோவச்சோ.
106 துன்னிய பேரிருள் * சூழ்ந்து உலகை மூட *
மன்னிய நான்மறை * முற்றும் மறைந்திட **
பின் இவ் உலகினில் * பேரிருள் நீங்க * அன்று
அன்னமது ஆனானே அச்சோ அச்சோ * அருமறை தந்தானே அச்சோ அச்சோ (10)
106 tuṉṉiya perirul̤ * cūzhntu ulakai mūṭa *
maṉṉiya nāṉmaṟai * muṟṟum maṟaintiṭa **
piṉ iv ulakiṉil * perirul̤ nīṅka * aṉṟu
aṉṉamatu āṉāṉe acco acco * arumaṟai tantāṉe acco acco (10)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

106. Once when thick darkness covered the world and all the four omnipresent Vedās disappeared, you became a swan and removed the darkness of the earth. Embrace me, achoo, achoo. You brought the divine Vedās back, achoo, achoo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துன்னிய நிரந்தரமான; பேரிருள் சூழ்ந்து அஞ்ஞான இருள் சூழ்ந்து; உலகை மூட உலகத்தை மூடிவிட; மன்னிய அழிவில்லாத; நான்மறை நான்கு வேதங்களும்; முற்றும் முழுமையாக; மறைந்திட மறைந்துவிட; பின் இவ் உலகினில் பின்னால் இந்த உலகின்; பேரிருள் நீங்க அன்று அந்தகாரம் விலக அன்று; அன்னம் அது அன்னமாகத்; ஆனானே! தோன்றியவனே!; அச்சோ! அச்சோ! வராயோ வாராயோ!; அருமறை தந்தானே! வேதங்களை மீட்டவனே!; அச்சோ! அச்சோ! வாராயோ வாராயோ!
tuṉṉiya when permanent; perirul̤ cūḻntu thick darkness called ignorance; ulakai mūṭa covered the world; maṉṉiya the indestructible; nāṉmaṟai four vedas; maṟaintiṭa disappeared; muṟṟum completely; perirul̤ nīṅka aṉṟu to remove darkness; piṉ iv ulakiṉil from this world; āṉāṉe! You incarnated !; aṉṉam atu as a swan; acco! acco! please come, please come!; arumaṟai tantāṉe! the One who brought back the vedas!; acco! acco! please come, please come!

PAT 1.8.11

107 நச்சுவார்முன்னிற்கும் நாராயணன் தன்னை *
அச்சோவருகவென்று ஆய்ச்சியுரைத்தன *
மச்சணிமாடப் புதுவைக்கோன்பட்டன்சொல் *
நிச்சலும்பாடுவார் நீள்விசும்பாள்வரே. (2)
107 ## நச்சுவார் முன் நிற்கும் * நாராயணன் தன்னை *
அச்சோ வருக என்று * ஆய்ச்சி உரைத்தன **
மச்சு அணி மாடப் * புதுவைக்கோன் பட்டன் சொல் *
நிச்சலும் பாடுவார் * நீள் விசும்பு ஆள்வரே (11)
107 ## naccuvār muṉ niṟkum * nārāyaṇaṉ taṉṉai *
acco varuka ĕṉṟu * āycci uraittaṉa **
maccu aṇi māṭap * putuvaikkoṉ paṭṭaṉ cŏl *
niccalum pāṭuvār * nīl̤ vicumpu āl̤vare (11)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

107. He is the One who appears before those who call Him. Mother Yashodā called her son Lord Nārāyanān saying, “Come, achoo, achoo!” Vishnuchithan, the chief of Puduvai city, filled with beautiful palaces and porches, composed pāsurams with Yashodā's words. Those who recite these pāsurams every day will go to the celestial world and rule the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நச்சுவார் தன்னை துதிப்பவர்; முன் நிற்கும் முன் தோன்றும்; நாராயணன் தன்னை கண்ண பெருமானே!; அச்சோ வருக வருவாயே; என்று ஆய்ச்சி என்று ஆயர்குல மாது யசோதை; உரைத்தன கூறியவற்றை; மச்சுஅணி மாட அழகிய மாடங்கள் நிறைந்த; புதுவைக்கோன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்வாமியான; பட்டன் பெரியாழ்வார்; சொல் அருளியதை; நிச்சலும் பாடுவார் அனுதினமும் ஓதுபவர்கள்; நீள் விசும்பு ஆள்வரே விண்ணுலகை ஆள்வார்கள்!
nārāyaṇaṉ taṉṉai Lord Krishna; muṉ niṟkum appears in front of those who; naccuvār call for Him; niccalum pāṭuvār those who recite daily; cŏl the hyms composed by; paṭṭaṉ Periyāzhvār; putuvaikkoṉ the saint of Sri Villuputhur; maccuaṇi māṭa place filled with beautiful buildings; uraittaṉa which focuses on; ĕṉṟu āycci Yashoda, the mother of Ayarpadi clan; acco varuka who calls out for Him; nīl̤ vicumpu āl̤vare they will reach the celestial world