PAT 1.8.6

ஸ்ரீ பார்த்தஸாரதி

102 போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறைதீர்ப்பான் *
தேரொக்கவூர்ந்தாய் செழுந்தார்விசயற்காய் *
காரொக்கும்மேனிக் கரும்பெருங்கண்ணனே! *
ஆரத்தழுவாவந்துஅச்சோவச்சோ ஆயர்கள்போரேறே! அச்சோவச்சோ.
102 por ŏkkap paṇṇi * ip pūmippŏṟai tīrppāṉ *
ter ŏkka ūrntāy * cĕzhuntār vicayaṟkāy **
kār ŏkku meṉik * karum pĕruṅ kaṇṇaṉe *
ārat tazhuvāy vantu acco acco * āyarkal̤ poreṟe acco acco (6)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

102. You fought in the battle for the Pāndavās, to redress the burden of the earth. You became the charioteer for Arjunā adorned with beautiful garlands, You with big and dark eyes and a body as dark as a cloud, come and embrace me tightly, achoo, achoo, O ! You are the mighty bull that fights for the cowherds, achoo, achoo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இப்பூமி இந்தப் பூமியினுடைய; பொறை பாரத்தை; தீர்ப்பான் தீர்ப்பதற்காக; போர் கௌரவர்களோடு; ஒக்க பண்ணி நேருக்கு நேர் யுத்தம்; பண்ணி செய்து; செழு தார் செழிப்பான தும்பை மாலை அணிந்துள்ள; விசயற்கு ஆய் அர்ஜுனனுக்காக; தேர் ஒக்க கௌரவர் தேர்களுக்கு ஈடாகும்படி; ஊர்ந்தாய் பாகனாய் தேரைச் செலுத்தினவனே!; நார் ஒக்கும் மேகம் போன்ற நிறமுடைய; மேனி திருமேனியில்; கரும்பெரும் கரிய பெரிய; கண்ணனே! கண்ணழகனே!; வந்து ஆர ஓடிவந்து நெஞ்சார; தழுவா அச்சோ அச்சோ என்னை தழுவிக்கொள்ளாயோ!; ஆயர்கள் யாதவர்களின்; போர் ஏறே போர்க் காளையே!; அச்சோ அச்சோ வாராயோ வாராயோ
tīrppāṉ to reduce; pŏṟai the burden for; ippūmi this earth; paṇṇi You participated; ŏkka paṇṇi in a face to face battle; por against Gauravas; ūrntāy you became a charioteer; vicayaṟku āy for Arjuna; cĕḻu tār who wore thumbai garland; ter ŏkka to match the chariots of Gauravas; kaṇṇaṉe! One with beautiful eyes; karumpĕrum that were big and dark; meṉi with a divine body with; nār ŏkkum the skin tone of dark clouds; vantu āra come with affection; taḻuvā acco acco please embrace me!; por eṟe oh war Bull!; āyarkal̤ who fought for cowherds; acco acco please come, please come