Chapter 8

Yashoda embraces Kannan - (பொன் இயல்)

அச்சோப் பருவம்
Yashoda embraces Kannan - (பொன் இயல்)
Lord Krishna is the embodiment of devotion. He stands before those who call out to Him. He comes running when the devotees seek Him. He is Narayana, who dwells in the hearts of all. Yashoda has boundless love for her Krishna. When a child sees its mother, it rushes to embrace her. Similarly she desires that the child Krishna should also come running to her to embraced her.
பகவான் பக்தி சபலன். பக்தியுள்ளவர்கள் அழைத்தவுடன் எதிரில் வந்து நிற்பான். பெறியாழ்வார் அழைத்தால் எதிரில் வந்து நிற்பான். நச்சுவார்முன் நிற்கும் நாராயணன் அவன். யசோதைக்குக் கண்ணன்மீது அன்பு மிகுதி. குழந்தை தாயைக் கண்டவுடன் ஓடிவந்து அவளை அணைத்துக்கொள்ளும். குழந்தை கண்ணனும் அவ்வாறே வந்து தன்னை அணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாள் யசோதை!
Verses: 97 to 107
Grammar: Kaliththāḻisai, Taravu Kocchakakkalippā / கலித்தாழிசை, தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Will go to Vaikuṇṭam and rule the skys
  • PAT 1.8.1
    97 ## பொன் இயல் கிண்கிணி * சுட்டி புறங் கட்டி *
    தன் இயல் ஓசை * சலன் சலன் என்றிட **
    மின் இயல் மேகம் * விரைந்து எதிர் வந்தாற்போல் *
    என் இடைக்கு ஓட்டரா அச்சோ அச்சோ * எம்பெருமான் வாராய் அச்சோ அச்சோ (1)
  • PAT 1.8.2
    98 செங்கமலப் பூவில் * தேன் உண்ணும் வண்டே போல் *
    பங்கிகள் வந்து * உன் பவளவாய் மொய்ப்ப **
    சங்கு வில் வாள் தண்டு * சக்கரம் ஏந்திய *
    அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ * ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ (2)
  • PAT 1.8.3
    99 பஞ்சவர் தூதனாய்ப் * பாரதம் கைசெய்து *
    நஞ்சு உமிழ் நாகம் * கிடந்த நல் பொய்கை புக்கு **
    அஞ்சப் பணத்தின்மேல் * பாய்ந்திட்டு அருள்செய்த *
    அஞ்சனவண்ணனே அச்சோ அச்சோ * ஆயர் பெருமானே அச்சோ அச்சோ (3)
  • PAT 1.8.4
    100 நாறிய சாந்தம் * நமக்கு இறை நல்கு என்ன *
    தேறி அவளும் * திருவுடம்பில் பூச **
    ஊறிய கூனினை * உள்ளே ஒடுங்க * அன்று
    ஏற உருவினாய் அச்சோ அச்சோ * எம்பெருமான் வாராய் அச்சோ அச்சோ (4)
  • PAT 1.8.5
    101 கழல் மன்னர் சூழக் * கதிர் போல் விளங்கி *
    எழலுற்று மீண்டே * இருந்து உன்னை நோக்கும் **
    சுழலை பெரிது உடைத் * துச்சோதனனை *
    அழல விழித்தானே அச்சோ அச்சோ * ஆழி அங் கையனே அச்சோ அச்சோ (5)
  • PAT 1.8.6
    102 போர் ஒக்கப் பண்ணி * இப் பூமிப்பொறை தீர்ப்பான் *
    தேர் ஒக்க ஊர்ந்தாய் * செழுந்தார் விசயற்காய் **
    கார் ஒக்கு மேனிக் * கரும் பெருங் கண்ணனே *
    ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ * ஆயர்கள் போரேறே அச்சோ அச்சோ (6)
  • PAT 1.8.7
    103 மிக்க பெரும்புகழ் * மாவலி வேள்வியில் *
    தக்கது இது அன்று என்று * தானம் விலக்கிய **
    சுக்கிரன் கண்ணைத் * துரும்பாற் கிளறிய *
    சக்கரக் கையனே அச்சோ அச்சோ * சங்கம் இடத்தானே அச்சோ அச்சோ (7)
  • PAT 1.8.8
    104 என் இது மாயம்? * என் அப்பன் அறிந்திலன் *
    முன்னைய வண்ணமே கொண்டு * அளவாய் என்ன **
    மன்னு நமுசியை * வானில் சுழற்றிய *
    மின்னு முடியனே அச்சோ அச்சோ * வேங்கடவாணனே அச்சோ அச்சோ (8)
  • PAT 1.8.9
    105 கண்ட கடலும் * மலையும் உலகு ஏழும் *
    முண்டத்துக்கு ஆற்றா * முகில்வண்ணா ஓ என்று **
    இண்டைச் சடைமுடி * ஈசன் இரக்கொள்ள *
    மண்டை நிறைத்தானே அச்சோ அச்சோ * மார்வில் மறுவனே அச்சோ அச்சோ (9)
  • PAT 1.8.10
    106 துன்னிய பேரிருள் * சூழ்ந்து உலகை மூட *
    மன்னிய நான்மறை * முற்றும் மறைந்திட **
    பின் இவ் உலகினில் * பேரிருள் நீங்க * அன்று
    அன்னமது ஆனானே அச்சோ அச்சோ * அருமறை தந்தானே அச்சோ அச்சோ (10)
  • PAT 1.8.11
    107 ## நச்சுவார் முன் நிற்கும் * நாராயணன் தன்னை *
    அச்சோ வருக என்று * ஆய்ச்சி உரைத்தன **
    மச்சு அணி மாடப் * புதுவைக்கோன் பட்டன் சொல் *
    நிச்சலும் பாடுவார் * நீள் விசும்பு ஆள்வரே (11)