PAT 1.8.10

ஹம்ஸாவதாரம்

106 துன்னியபேரிருள் சூழ்ந்துஉலகைமூட *
மன்னியநான்மறை முற்றும்மறைந்திட *
பின்னிவ்வுலகினில் பேரிருள்நீங்க * அன்று
அன்னமதானானே! அச்சோவச்சோ அருமறைதந்தானே! அச்சோவச்சோ.
106 tuṉṉiya perirul̤ * cūzhntu ulakai mūṭa *
maṉṉiya nāṉmaṟai * muṟṟum maṟaintiṭa **
piṉ iv ulakiṉil * perirul̤ nīṅka * aṉṟu
aṉṉamatu āṉāṉe acco acco * arumaṟai tantāṉe acco acco (10)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

106. Once when thick darkness covered the world and all the four omnipresent Vedās disappeared, you became a swan and removed the darkness of the earth. Embrace me, achoo, achoo. You brought the divine Vedās back, achoo, achoo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துன்னிய நிரந்தரமான; பேரிருள் சூழ்ந்து அஞ்ஞான இருள் சூழ்ந்து; உலகை மூட உலகத்தை மூடிவிட; மன்னிய அழிவில்லாத; நான்மறை நான்கு வேதங்களும்; முற்றும் முழுமையாக; மறைந்திட மறைந்துவிட; பின் இவ் உலகினில் பின்னால் இந்த உலகின்; பேரிருள் நீங்க அன்று அந்தகாரம் விலக அன்று; அன்னம் அது அன்னமாகத்; ஆனானே! தோன்றியவனே!; அச்சோ! அச்சோ! வராயோ வாராயோ!; அருமறை தந்தானே! வேதங்களை மீட்டவனே!; அச்சோ! அச்சோ! வாராயோ வாராயோ!
tuṉṉiya when permanent; perirul̤ cūḻntu thick darkness called ignorance; ulakai mūṭa covered the world; maṉṉiya the indestructible; nāṉmaṟai four vedas; maṟaintiṭa disappeared; muṟṟum completely; perirul̤ nīṅka aṉṟu to remove darkness; piṉ iv ulakiṉil from this world; āṉāṉe! You incarnated !; aṉṉam atu as a swan; acco! acco! please come, please come!; arumaṟai tantāṉe! the One who brought back the vedas!; acco! acco! please come, please come!