PAT 1.8.4

கூனியின் கூனை நிமிர்த்தவன்

100 நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்ன *
தேறிஅவளும் திருவுடம்பில்பூச *
ஊறியகூனினை உள்ளேயொடுங்க * அன்று
ஏறவுருவினாய்! அச்சோவச்சோ எம்பெருமான்! வாராஅச்சோவச்சோ.
100 nāṟiya cāntam * namakku iṟai nalku ĕṉṉa *
teṟi aval̤um * tiruvuṭampil pūca **
ūṟiya kūṉiṉai * ul̤l̤e ŏṭuṅka * aṉṟu
eṟa uruviṉāy acco acco * ĕmpĕrumāṉ vārāy acco acco (4)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

100. When you asked a hunch-backed woman, a servant of king Kamsan, to give you the fragrant sandal paste that she was carrying for the king, she took it and smeared it on your body without being afraid of the king. You straightened her back that was bent for a long time, with your hands. Come and embrace me, achoo! achoo! O dear one, come and embrace me, achoo, achoo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாறிய சாந்தம் மணம் வீசுகின்ற சந்தனத்தை; நமக்கு எங்களுக்கு தா; இறை நல்கு என்ன கொஞம் தா என்று கூனியை கேட்க; தேறி அவளும் அவளும் அதை ஏற்று; திருவுடம்பிற் பூச உன் திருமேனியிலே பூசியதும்; அன்று அப்போது; ஊறிய கூனினை பல ஆண்டுகளாய் இருந்த கூன்; உள்ளே ஒடுங்க உள்ளெ ஒடுங்கும்படி; ஏற உருவினாய்! கைகளால் நிமிர்த்து உருவினவனே!; அச்சோ! அச்சோ! என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்; எம்பெருமான்! எம்பெருமானே! வந்து; வாரா அச்சோ! அச்சோ! என்னை அணைத்துக் கொள்ளானோ!
iṟai nalku ĕṉṉa when You asked a hunchback women to; namakku give You; nāṟiya cāntam sandal that emanates fragrance; teṟi aval̤um she agreed and; tiruvuṭampiṟ pūca applied it on Your divine body; aṉṟu at that time; eṟa uruviṉāy! You straightened with Your hands; ūṟiya kūṉiṉai her back that was bent for a long time; ul̤l̤e ŏṭuṅka and rectified the hunchback problem; acco! acco! You have to embrance me; ĕmpĕrumāṉ! oh Lord! come; vārā, acco! acco! please embrace me!