PAT 1.8.5

துரியோதனனை அழல விழித்தவன்

101 கழல்மன்னர்சூழக் கதிர்போல்விளங்கி *
எழலுற்றுமீண்டே இருந்துஉன்னைநோக்கும் *
சுழலைப்பெரிதுடைத் துச்சோதனனை *
அழலவிழித்தானே! அச்சோவச்சோ ஆழியங்கையனே! அச்சோவச்சோ.
101 kazhal maṉṉar cūzhak * katir pol vil̤aṅki *
ĕzhaluṟṟu mīṇṭe * iruntu uṉṉai nokkum **
cuzhalai pĕritu uṭait * tuccotaṉaṉai *
azhala vizhittāṉe acco acco * āzhi aṅ kaiyaṉe acco acco (5)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

101. In Duryodhanā’s assembly, surrounded by heroic ankleted kings, shining like a sun, when the wicked Duryodhanā saw you he stood up but then sat again, staring at you. You looked at him with fiery eyes and destroyed his evil thoughts, achoo, achoo You hold the discus in your beautiful hands. Come and embrace me, achoo, achoo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கழல் வீரக் கழலை அணிந்த; மன்னர் அரசர்கள்; சூழ சூழ்ந்திருக்க; கதிர்போல் சூரியன்போல; விளங்கி பிரகாசமாக; எழல் உற்று எழுந்திருக்க முயன்று; மீண்டு மறுபடியும்; இருந்து உட்கார்ந்து கொண்டு; உன்னை உன்னை; நோக்கும் நோக்கிய; பெரிது பெரும்பாலும்; கழலை உடை சூழ்ச்சியையே எண்ணுபவனான; துச்சோதனனை துர்யோதனனை; அழல விழித்தானே உக்ரமாகப் பார்த்தவனே!; அச்சோ அச்சோ என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்; ஆழி திரு சக்ரத்தையுடையவனே!; அம் கையனே அழகிய கையிலேந்தியவனே!; அச்சோ அச்சோ என்னை அணைத்துக் கொள்ளானோ!
katirpol seeing You like a sun; vil̤aṅki shining; cūḻa amidst; maṉṉar the kings; kaḻal wearing a heroic anklets; ĕḻal uṟṟu Duryodhanā stood up and; mīṇṭu later; iruntu sat down; tuccotaṉaṉai Duryodhanā; kaḻalai uṭai who was always thinking of evil plots; nokkum was looking at; uṉṉai You; pĕritu often; aḻala viḻittāṉe the One who looked at him ferociously!; acco acco You have to embrance me; am kaiyaṉe the One whose hand holds!; āḻi the divine disc!; acco acco please embrace me!