பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல் பொய்கை புக்கு அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணனே அச்சோ அச்சோ ஆயர் பெருமானே அச்சோ அச்சோ – 1-8 3- –
பதவுரை
பஞ்சவர்–பாண்டவர்களுக்காக தூதன் ஆய்–(துர்யோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய் (அந்த துர்யோதநாதிகள் தன் சொற்படி இசைந்து வராமையால்) பாரதம்–பாரத யுத்தத்தை கை செய்து–அணி வகுத்துச் செய்து நஞ்சு–விஷத்தை