Amalanādipirān

அமலனாதிபிரான்

Amalanādipirān
Thiruppāṇ Āzhvār, being born in the Panar clan, was unable to enter the temple, adhering to the customs of his time. Despite that, he devoted himself completely to Lord Ranganathar. As per the belief 'Gopura darisanam papa vimosanam’ (meaning 'a divine sight of the temple tower will cleanse one's sins'), he stood every day on the bank of the river Cauvery + Read more
திருப்பாணாழ்வார் வாழ்ந்த காலத்தை அனுசரித்து தான் பாணர் குலத்தில் பிறந்தவராதலால் திருக்கோயிலுக்குச் சென்று பகவானை தரிசிக்க முடியவில்லையானாலும் முக்கரணங்களையும் பகவத் சிந்தனையிலேயே செலுத்தியவர். 'கோபுர தரிசனம் பாப விமோசனம்' என்ற வசனத்தை முழு மனதுடன் நம்பி அனுதினமும் காவேரி கரையில் நின்று + Read more
Group: 1st 1000
Verses: 927 to 936
Glorification: Sri Ranganāthar (திருவரங்கன்)
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

AAP 1

927 அமலனாதிபிரான் அடியார்க்கென்னையாட்படுத்த
விமலன் * விண்ணவர்கோன் விரையார்பொழில் வேங்கடவன் *
நிமலன் நின்மலன்நீதிவானவன் நீள்மதிளரங்கத்தம்மான் * திருக்
கமலபாதம்வந்து என்கண்ணினுள்ளனவொக்கின்றதே. (2)
927 ## . அமலன் ஆதிபிரான் * அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் * விண்ணவர்கோன் * விரையார் பொழில் வேங்கடவன் **
நிமலன் நின்மலன் நீதி வானவன் * நீள் மதில் அரங்கத்து அம்மான் * திருக்
கமல பாதம் வந்து * என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே (1)
927 ## . amalaṉ ātipirāṉ * aṭiyārkku ĕṉṉai āṭpaṭutta
vimalaṉ * viṇṇavarkoṉ * viraiyār pŏzhil veṅkaṭavaṉ **
nimalaṉ niṉmalaṉ nīti vāṉavaṉ * nīl̤ matil araṅkattu ammāṉ * tiruk
kamala pātam vantu * ĕṉ kaṇṇiṉ ul̤l̤aṉa ŏkkiṉṟate (1)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-11

Simple Translation

927. He, the faultless one, the king of the gods in the sky of Vaikuntam who gives us his grace and makes us his devotees, is pure, the lord of the Thiruvenkatam hills surrounded with fragrant groves. He is the god of justice in the sky, and the dear one of Srirangam surrounded by tall walls. His lotus feet came and entered my sight.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அமலன் பரிசுத்தனும்; ஆதிபிரான் ஜகத்காரணனும்; என்னை தாழ்ந்த குலத்தவனான என்னை; அடியார்க்கு பாகவதர்களுக்கு; ஆட்படுத்த ஆட்படுத்துகையாலே; விமலன் சிறந்த புகழையுடையவனும்; விண்ணவர் நித்யஸூரிகளுக்கு; கோன் தலைவனும்; விரையார் மணம் மிக்க; பொழில் சோலைகளையுடைய; வேங்கடவன் திருவேங்கடத்தில் இருப்பவனும்; நிமலன் குற்றமற்றவனும்; நின்மலன் அடியாருடைய குற்றத்தைக் காணாதவனும்; நீதி நியாயமே நிலவும்; வானவன் பரமபதத்துக்குத் தலைவனுமானவன்; நீள் மதில் உயர்ந்த மதிள்களையுடைய; அரங்கத்து ஸ்ரீரங்கத்துக் கோயிலிலே; அம்மான் இருப்பவனுடைய; திருக்கமல திருவடித்தாமரைகளானவை; பாதம் வந்து தானே வந்து; என்கண்ணின் உள்ளன என் கண்ணுக்குள்ளே; ஒக்கின்றதே புகுந்து பிரகாசிக்கின்றனவே

AAP 2

928 உவந்தவுள்ளத்தனாய் உலகமளந்தண்டமுற *
நிவந்தநீள்முடியன் அன்றுநேர்ந்தநிசாசரரை *
கவர்ந்தவெங்கணைக்காகுத்தன் கடியார்பொழிலரங்கத்தம்மான் * அரைச்
சிவந்தஆடையின்மேல் சென்றதாமென்சிந்தனையே.
928 உவந்த உள்ளத்தனாய் * உலகம் அளந்து அண்டம் உற *
நிவந்த நீள் முடியன் * அன்று நேர்ந்த நிசாசரரை **
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் * கடியார் பொழில் அரங்கத்து அம்மான் * அரைச்
சிவந்த ஆடையின் மேல் * சென்றதாம் என் சிந்தனையே (2)
928 uvanta ul̤l̤attaṉāy * ulakam al̤antu aṇṭam uṟa *
nivanta nīl̤ muṭiyaṉ * aṉṟu nernta nicācararai **
kavarnta vĕṅkaṇaik kākuttaṉ * kaṭiyār pŏzhil araṅkattu ammāṉ * araic
civanta āṭaiyiṉ mel * cĕṉṟatām ĕṉ cintaṉaiye (2)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

928. He is pleasant and joyful measured the world, growing so tall that his crown touched the sky, and as Rāma of the Kakutstha dynasty he killed the Rakshasās with his cruel arrows. My thoughts are immersed in the red garment that adorns the waist of the god of Srirangam surrounded by fragrant groves.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உவந்த மகிழ்ந்த; உள்ளத்தனாய் மனமுடையவனாய்; உலகமளந்து மூவுலகங்களையும் அளந்து; அண்டம் உற அண்டகடாஹங்களுக்கும் சென்று; நிவந்த மலர்ந்த முகத்தையுடையவனாய்; நீள் முடியன் நீண்ட முடியையுடையவனாய்; அன்று நேர்ந்த முன்பு எதிர்த்துவந்த; நிசாசரரை ராக்ஷஸர்களை; கவர்ந்த கொன்ற; வெங்கணை கொடிய அம்புகளையுடைய; காகுத்தன் இராமனாய்; கடியார் மணம் மிக்க; பொழில் சோலைகளையுடைய; அரங்கத்து ஸ்ரீரங்கத்தில்; அம்மான் இருப்பவனுடைய; அரைச் சிவந்த உடலிலிருந்த சிவந்த; ஆடையின்மேல் ஆடையின் மேல்; என சிந்தனையே என் சிந்தனை; சென்றது ஆம் சென்று அங்கேயே நிலைபெற்றது

AAP 3

929 மந்திபாய் வடவேங்கடமாமலை * வானவர்கள்
சந்திசெய்யநின்றான் அரங்கத்தரவினணையான் *
அந்திபோல்நிறத்தாடையும் அதன்மேலயனைப் படைத்ததோரெழில் *
உந்திமேலதன்றோ அடியேனுள்ளத்தின்னுயிரே. (2)
929 ## . மந்தி பாய் * வட வேங்கட மா மலை * வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் * அரங்கத்து அரவினணையான் **
அந்தி போல் நிறத்து ஆடையும் * அதன் மேல் அயனைப் படைத்தது ஓர் எழில் *
உந்தி மேலது அன்றோ * அடியேன் உள்ளத்து இன்னுயிரே (3)
929 ## . manti pāy * vaṭa veṅkaṭa mā malai * vāṉavarkal̤
canti cĕyya niṉṟāṉ * araṅkattu araviṉaṇaiyāṉ **
anti pol niṟattu āṭaiyum * ataṉ mel ayaṉaip paṭaittatu or ĕzhil *
unti melatu aṉṟo * aṭiyeṉ ul̤l̤attu iṉṉuyire (3)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-21, BG. 10-9

Simple Translation

929. Female monkeys jump everywhere in the Thiruvenkatam hills in the north where the gods in the sky come to worship the lord resting on the snake bed. He (Arangan) wears a red garment with the color of the evening sky and above that is Nānmuhan whom he created. His beauty is this devotee’s life.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மந்தி பாய் குரங்குகள் தாவும்; வட வேங்கட திருவேங்கட; மாமலை மலையிலே; வானவர்கள் நித்யஸூரிகள்; சந்தி செய்ய பூக்களால் ஆராதிக்கும்படி; நின்றான் நிற்பவனும்; அரவின் பாம்புப் படுக்கையில்; அணையான் இருப்பவனுமான; அரங்கத்து ஸ்ரீரங்கநாதனுடைய; அந்தி போல் சிவந்த வானம் போன்ற; நிறத்து நிறத்தையுடைய; ஆடையும் ஆடையும்; அதன் மேல் அதன் மேலும்; அயனை பிரமனை; படைத்தது ஓர் எழில் படைத்த அழகிய; உந்திமேல் நாபிக்கமலத்தின் மேலும்; அது அன்றோ! அன்றோ!; அடியேன் உள்ளத்து என்னுடைய மனம்; இன்னுயிரே! நிலைபெற்றது

AAP 4

930 சதுரமாமதிள்சூழ் இலங்கைக்கிறைவன்தலைபத்து
உதிரவோட்டி * ஓர்வெங்கணையுய்த்தவன் ஒதவண்ணன் *
மதுரமாவண்டுபாட மாமயிலாடரங்கத்தம்மான் * திருவயிற்று
உதரபந்தம் என்னுள்ளத்துள்நின்றுலாகின்றதே.
930 சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் * தலை பத்து
உதிர ஓட்டி * ஓர் வெங்கணை உய்த்தவன் * ஓதவண்ணன் **
மதுர மா வண்டு பாட * மா மயில் ஆட அரங்கத்து அம்மான் * திரு வயிற்று
உதர பந்தம் * என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே (4)
930 catura mā matil̤ cūzh ilaṅkaikku iṟaivaṉ * talai pattu
utira oṭṭi * or vĕṅkaṇai uyttavaṉ * otavaṇṇaṉ **
matura mā vaṇṭu pāṭa * mā mayil āṭa araṅkattu ammāṉ * tiru vayiṟṟu
utara pantam * ĕṉ ul̤l̤attul̤ niṉṟu ulākiṉṟate (4)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

930. The ocean-colored god shot sharp arrows, conquering and killing the ten-headed Rāvana, king of Lankā surrounded by high walls on all four sides. The beautiful ornament tied on the divine waist created a mark of the god of Srirangam (damodara) where bees that drink honey sing and beautiful peacocks dance entered my heart and stayed there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சதுர மா சதுரமான உயர்ந்த; மதிள் சூழ் மதிள்களாலே சூழ்ந்த; இலங்கைக்கு இலங்கை; இறைவன் அரசன் ராவணனை; ஓட்டி முதல்நாள் யுத்தத்தில் தோற்று ஓடும்படி செய்து; தலை பத்து உதிர தலைபத்தும் உதிரும்படி; ஓர் வெங்கணை ஒப்பற்ற கூர்மையான அஸ்திரத்தை; உய்த்தவன் பிரயோகித்தவனும்; ஓதவண்ணன் கடல்போன்ற நிறமுடையவனும்; வண்டு வண்டுகள்; மதுர மா பாட மதுரமான இசைபாட; மா மயில் ஆட சிறந்த மயில்கள் ஆட; அரங்கத்து ஸ்ரீரங்கத்தில் இருக்கும்; அம்மான் ரங்கநாதனுடைய; திரு வயிற்று திருவயிற்றிலுள்ள; உதர பந்தம் ஆபரணமானது; என் உள்ளத்துள் என் நெஞ்சினுள்; நின்று நிலைத்து நின்று; உலாகின்றதே! உலாவுகின்றது

AAP 5

931 பாரமாய பழவினைபற்றறுத்து * என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றியென்னுள் புகுந்தான் *
கோரமாதவம்செய்தனன்கொல்லறியேன் * அரங்கத்தம்மான் * திரு
வாரமார்பதன்றோ அடியேனையாட்கொண்டதே.
931 பாரமாய * பழவினை பற்றறுத்து * என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான் * வைத்தது அன்றி என் உள் புகுந்தான் **
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன் * அரங்கத்து அம்மான் * திரு
ஆரமார்ப தன்றோ * அடியேனை ஆட்கொண்டதே (5)
931 pāramāya * pazhaviṉai paṟṟaṟuttu * ĕṉṉait taṉ
vāram ākki vaittāṉ * vaittatu aṉṟi ĕṉ ul̤ pukuntāṉ **
kora mātavam cĕytaṉaṉ kŏl aṟiyeṉ * araṅkattu ammāṉ * tiru
āramārpa taṉṟo * aṭiyeṉai āṭkŏṇṭate (5)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

931. Making me his dear devotee and entering my heart. He removed all the bad karmā that has burdened me all my life. I don’t know what hard penance I could have done for this to happen. The ornamented divine chest of the god of Srirangam made me his slave and protects me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாரம் ஆய பொறுக்கமுடியாத; பழவினை சுமையான பாபங்களின்; பற்று அறுத்து சம்பந்தத்தைத் தொலைத்து; என்னைத் தன் என்னைத் தன்னிடத்தில்; வாரம் பக்தி உடையவனாக; ஆக்கிவைத்தான் மாற்றினான்; வைத்தது அன்றி இப்படிச் செய்ததும் அல்லாமல்; என்னுள் புகுந்தான் என் மனதுக்குள் புகுந்தான்; கோர இவ்விதம் பாக்யம் பெற; மாதவம் நான் என்ன கடுமையான தவம்; செய்தனன் கொல்? செய்தேனோ; அறியேன் தெரியவில்லை; அரங்கத்து அம்மான் ஸ்ரீரங்கநாதா; திரு மஹாலக்ஷ்மியையும்; ஆர முத்துமாலையை உடைய; மார்வு அது அன்றோ உன் மார்பன்றோ; அடியேனை அடியேனை; ஆட்கொண்டதே ஆட்கொண்டது

AAP 6

932 துண்டவெண்பிறையன் துயர்தீர்த்தவன் * அஞ்சிறைய
வண்டுவாழ்பொழில்சூழ் அரங்கநகர்மேயஅப்பன் *
அண்டரண்டபகிரண்டத்து ஒருமாநிலமெழுமால்வரை * முற்றும்
உண்டகண்டங்கண்டீர் அடியேனையுய்யக்கொண்டதே.
932 துண்ட வெண் பிறையன் * துயர் தீர்த்தவன் * அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் * அரங்க நகர் மேய அப்பன் **
அண்டரண்ட பகிரண்டத்து * ஒரு மா நிலம் எழு மால் வரை * முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் * அடியேனை உய்யக் கொண்டதே (6)
932 tuṇṭa vĕṇ piṟaiyaṉ * tuyar tīrttavaṉ * añciṟaiya
vaṇṭu vāzh pŏzhil cūzh * araṅka nakar meya appaṉ **
aṇṭaraṇṭa pakiraṇṭattu * ŏru mā nilam ĕzhu māl varai * muṟṟum
uṇṭa kaṇṭam kaṇṭīr * aṭiyeṉai uyyak kŏṇṭate (6)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

932. Our father, the lord of Srirangam surrounded with groves where bees live removed the suffering of Shivā whose matted hair holds the crescent moon. See, he swallowed all the earth, the sky and the seven mountains and he gives his grace to me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துண்ட வெண் துண்டிக்கப்பட்ட வெளுத்த; பிறையன் சந்திரனை முடியிலுடைய சிவபெருமானின்; துயர் தீர்த்தவன் துயரத்தைப் போக்கினவனும்; அஞ்சிறைய அழகிய சிறகையுடைய; வண்டு வண்டுகள்; வாழ் பொழில் வாழும் சோலைகளால்; சூழ் சூழ்ந்த; அரங்க நகர் ஸ்ரீரங்கத்திலிருக்கும்; மேய அப்பன் ஸ்ரீரங்கநாதனுடைய; அண்டர் அண்ட அண்டத்திலுள்ள தேவர்களையும்; பகிரண்டத்து அண்ட ஆவரணங்களையும்; ஒரு மா நிலம் ஒப்பற்ற பெரிய பூமியையும்; எழு மால் வரை ஏழு பர்வதங்களையும்; முற்றும் எல்லாவற்றையும்; உண்டகண்டம் உண்டு காப்பாற்றிய கழுத்து; கண்டீர்! அடியேனை அன்றோ அடியேனை; உய்யக் கொண்டதே ஆட்கொண்டது

AAP 7

933 கையினார் சுரிசங்கனலாழியர் * நீள்வரைபோல்
மெய்யனார் துளபவிரையார் கமழ்நீள்முடியெம்
ஐயனார் * அணியரங்கனார் அரவினணைமிசைமேயமாயனார் *
செய்யவாய் ஐயோ! என்னைச்சிந்தைகவர்ந்ததுவே.
933 கையின் ஆர் * சுரி சங்கு அனல் ஆழியர் நீள் வரைபோல்
மெய்யனார் * துளப விரையார் கமழ் * நீள் முடி எம்
ஐயனார் ** அணி அரங்கனார் * அரவின் அணைமிசை மேய மாயனார் *
செய்ய வாய் ஐயோ * என்னைச் சிந்தை கவர்ந்ததுவே (7)
933 kaiyiṉ ār * curi caṅku aṉal āzhiyar nīl̤ varaipol
mĕyyaṉār * tul̤apa viraiyār kamazh * nīl̤ muṭi ĕm
aiyaṉār ** aṇi araṅkaṉār * araviṉ aṇaimicai meya māyaṉār *
cĕyya vāy aiyo * ĕṉṉaic cintai kavarntatuve (7)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

933. He holds a curving conch in one hand and a fire-like discus in the other. He, resting on a snake bed, the god of beautiful Srirangam has a body is like a tall mountain and long hair adorned with a fragrant Thulasi garland. The red mouth of that Māyanār has stolen my heart.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கையின் ஆர் கையில் நிறைந்த அழகிய; சுரி சங்கு வரிகளை உடைய வலம்புரி சங்கும்; அனலாழியர் பொறிபறக்கும் சக்கரமும் உடையவனும்; நீள் வரை போல் பெரிய மலைபோன்ற; மெய்யனார் உடலை உடையவனும்; கமழ் மணம் கமழும்; துளப விரையார் துளசி மாலையுடையவரும்; நீள் முடி நீண்ட முடியுடைய; எம் ஐயனார் அணி அழகிய எம்பெருமான்; அரங்கனார் ஸ்ரீரங்கத்திலிருப்பவனும்; அரவின் அணைமிசை பாம்புப் படுக்கையில்; மேய இருப்பவனும்; மாயனார் மாயங்கள் செய்யும் ஸ்ரீரங்கநாதனுடைய; செய்ய வாய் ஐயோ! சிவந்த பவள வாயன்றோ; என்னைச் சிந்தை என் சிந்தையை; கவர்ந்ததுவே! கொள்ளைகொண்டது

AAP 8

934 பரியனாகிவந்த அவுணனுடல்கீண்ட * அமரர்க்கு
அரியஆதிப்பிரான் அரங்கத்தமலன்முகத்து *
கரியவாகிப்புடைபரந்து மிளிர்ந்துசெவ்வரியோடி * நீண்டஅப்
பெரியவாயகண்கள் என்னைப்பேதைமைசெய்தனவே.
934 பரியனாகி வந்த * அவுணன் உடல் கீண்ட * அமரர்க்கு
அரிய ஆதிப்பிரான் * அரங்கத்து அமலன் முகத்து **
கரிய ஆகிப் புடை பரந்து * மிளிர்ந்து செவ்வரி ஓடி * நீண்ட அப்
பெரிய ஆய கண்கள் * என்னைப் பேதைமை செய்தனவே (8)
934 pariyaṉāki vanta * avuṇaṉ uṭal kīṇṭa * amararkku
ariya ātippirāṉ * araṅkattu amalaṉ mukattu **
kariya ākip puṭai parantu * mil̤irntu cĕvvari oṭi * nīṇṭa ap
pĕriya āya kaṇkal̤ * ĕṉṉaip petaimai cĕytaṉave (8)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

934. He (Arangan), the ancient god of the gods in the sky, came as a man-lion and split open the body of Hiranyan. The large, red-lined divine eyes on his dark face, shining and touching his ears, make me crazy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பரியன் ஆகி வந்த பருத்த வடிவையுடைய; அவுணன் அசுரனான இரணியனின்; உடல் கீண்ட சரீரத்தை கிழித்து வதைத்தவனும்; அமரர்க்கு பிரமன் போன்ற தேவர்களுக்கும்; அரிய ஆதிபிரான் அணுகமுடியாதவனும்; அரங்கத்து அமலன் ஸ்ரீரங்கத்திலிருப்பவனும்; முகத்துக்கரிய ஆகிப் புடை முகத்தில் கருத்து மலர்ந்து; பரந்து மிளிர்ந்து விரிந்து பிரகாசிக்கின்ற; செவ்வரி ஓடி சிவந்த வரிகளுடன் கூடிய; நீண்ட அப்பெரிய ஆய நீண்ட அப்பெரிய; கண்கள் கண்கள்; என்னைப் பேதைமை என்னை மதிமயங்க; செய்தனவே! செய்தனவே

AAP 9

935 ஆலமாமரத்தினிலைமேல் ஒருபாலகனாய் *
ஞாலமேழுமுண்டான் அரங்கத்தரவினணையான் *
கோலமாமணியாரமும் முத்துத்தாமமும் முடிவில்லதோரெழில் *
நீலமேனி ஐயோ! நிறைகொண்டதென்நெஞ்சினையே. (2)
935 ## . ஆல மா மரத்தின் இலைமேல் * ஒரு பாலகனாய் *
ஞாலம் ஏழும் உண்டான் * அரங்கத்து அரவின் அணையான் **
கோல மா மணி ஆரமும் * முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர் எழில் *
நீல மேனி ஐயோ * நிறைகொண்டது என் நெஞ்சினையே (9)
935 ## . āla mā marattiṉ ilaimel * ŏru pālakaṉāy *
ñālam ezhum uṇṭāṉ * araṅkattu araviṉ aṇaiyāṉ **
kola mā maṇi āramum * muttut tāmamum muṭivu illatu or ĕzhil *
nīla meṉi aiyo * niṟaikŏṇṭatu ĕṉ nĕñciṉaiye (9)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

935. He slept on a banyan leaf when he was a baby swallowed all the seven worlds, and rests on a snake bed in Srirangam. His dark body, endlessly beautiful, is adorned with pearl garlands and precious, lovely diamond chains. Oh, his blue body has stolen my heart!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆல மா மரத்தின் பெரிய ஆலமரத்தின்; இலைமேல் இலையின் மேல்; ஒரு பாலகனாய் ஒரு சிறு பிள்ளையாய்; ஞாலம் ஏழும் ஏழு உலகங்களையும்; உண்டான் உண்டவனும்; அரங்கத்து அரவின் ஆதிசேஷன் மேல்; அணையான் சயனித்தவனும்; கோல மா அழகிய சிறந்த; மணி ஆரமும் ரத்னமணிமாலையும்; முத்துத் முத்துவடமும் மேலும்; தாமமும் பல ஆபரணங்களும்; முடிவு இல்லது முடிவில்லாத; ஓர் எழில் ஒரு அழகைப்பெற்றதும்; நீலமேனி கருநெய்தல் மலர் போன்ற சரீரமானது; ஐயோ! அந்தோ!; என் நெஞ்சினையே! என் நெஞ்சையே; நிறை கொண்டது கொள்ளை கொண்டதே

AAP 10

936 கொண்டல்வண்ணனைக் கோவலனாய்வெண்ணெ
யுண்டவாயன் * என்னுள்ளம்கவர்ந்தானை *
அண்டர்கோன்அணியரங்கன் என்னமுதினைக்
கண்டகண்கள் * மற்றொன்றினைக் காணாவே. (2)
936 ## . கொண்டல் வண்ணனைக் * கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் * என் உள்ளம் கவர்ந்தானை **
அண்டர் கோன் அணி அரங்கன் * என் அமுதினைக்
கண்ட கண்கள் * மற்று ஒன்றினைக் காணாவே (10)
936 ## . kŏṇṭal vaṇṇaṉaik * kovalaṉāy vĕṇṇĕy
uṇṭa vāyaṉ * ĕṉ ul̤l̤am kavarntāṉai **
aṇṭar koṉ aṇi araṅkaṉ * ĕṉ amutiṉaik
kaṇṭa kaṇkal̤ * maṟṟu ŏṉṟiṉaik kāṇāve (10)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

936. He, the cowherd, who has the color of a cloud and a mouth is filled with butter has stolen my heart. Rangan, the beautiful one, is the king of the gods in the sky. Once they have seen him who is as sweet as nectar, my eyes do not wish to see anything else.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொண்டல் காளமேகம்போன்ற; வண்ணனை நிறமுடையவனும்; கோவலனாய் நந்த குமாரனாகப் பிறந்து; வெண்ணெய் வெண்ணெய்; உண்ட வாயன் உண்ட வாயை உடையவனும்; என் உள்ளம் என் நெஞ்சை; கவர்ந்தானை கவர்ந்தவனும்; அண்டர்கோன் நித்யஸூரிகட்குத் தலைவனும்; அணி அரங்கன் திருவரங்கத்தில் இருப்பவனும்; என் அமுதினை எனக்கு அம்ருதம் போன்றவனுமானவனை; கண்ட கண்கள் கண்ட கண்கள்; மற்று ஒன்றினை வேறொன்றையும்; காணாவே பார்க்காதே!