AAP 2

I Contemplate the Reddish Garment of Araṅgan

அரங்கனின் சிவந்த ஆடையைச் சிந்திக்கின்றேன்

928 உவந்தவுள்ளத்தனாய் உலகமளந்தண்டமுற *
நிவந்தநீள்முடியன் அன்றுநேர்ந்தநிசாசரரை *
கவர்ந்தவெங்கணைக்காகுத்தன் கடியார்பொழிலரங்கத்தம்மான் * அரைச்
சிவந்தஆடையின்மேல் சென்றதாமென்சிந்தனையே.
AAP.2
928 uvanta ul̤l̤attaṉāy * ulakam al̤antu aṇṭam uṟa *
nivanta nīl̤ muṭiyaṉ * aṉṟu nernta nicācararai **
kavarnta vĕṅkaṇaik kākuttaṉ * kaṭiyār pŏzhil araṅkattu ammāṉ * araic
civanta āṭaiyiṉ mel * cĕṉṟatām ĕṉ cintaṉaiye (2)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

928. He is pleasant and joyful measured the world, growing so tall that his crown touched the sky, and as Rāma of the Kakutstha dynasty he killed the Rakshasās with his cruel arrows. My thoughts are immersed in the red garment that adorns the waist of the god of Srirangam surrounded by fragrant groves.

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

AAP.2

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
உவந்த மகிழ்ந்த; உள்ளத்தனாய் மனமுடையவனாய்; உலகமளந்து மூவுலகங்களையும் அளந்து; அண்டம் உற அண்டகடாஹங்களுக்கும் சென்று; நிவந்த மலர்ந்த முகத்தையுடையவனாய்; நீள் முடியன் நீண்ட முடியையுடையவனாய்; அன்று நேர்ந்த முன்பு எதிர்த்துவந்த; நிசாசரரை ராக்ஷஸர்களை; கவர்ந்த கொன்ற; வெங்கணை கொடிய அம்புகளையுடைய; காகுத்தன் இராமனாய்; கடியார் மணம் மிக்க; பொழில் சோலைகளையுடைய; அரங்கத்து ஸ்ரீரங்கத்தில்; அம்மான் இருப்பவனுடைய; அரைச் சிவந்த உடலிலிருந்த சிவந்த; ஆடையின்மேல் ஆடையின் மேல்; என சிந்தனையே என் சிந்தனை; சென்றது ஆம் சென்று அங்கேயே நிலைபெற்றது
ul̤l̤attaṉāy with a heart; uvanta that is joyful; ulakamal̤antu measured the three worlds; aṇdam uṟa reached even the ends of the cosmos; kākuttaṉ as Rama; nivanta with a radiant (blossomed) face; nīl̤ mudiyaṉ with long, flowing hair; vĕṅkaṇai with deadly arrows that; kavarnta You killed; nicācararai the demons; aṉṟu nernta who once confronted; ĕṉa cintaṉaiye my thought; cĕṉṟatu ām went and stayed on; araic civanta the red-hued; ādaiyiṉmel garment that is on; ammāṉ the Lord who is; araṅkattu in Sri Rangam; kadiyār that has fragrant; pŏzhil groves

Detailed Explanation

Emperumān, during His divine act of blissfully measuring the celestial realms, bore a crown that soared to the uppermost boundary of this egg-shaped cosmos. Śrī Rāma, the vanquisher of hostile demons with His formidable arrows, now serenely reclines as Periya Perumāl in Śrīraṅgam, a sacred abode adorned with fragrant gardens. My contemplations are deeply immersed in the divine vestment gracefully encircling His celestial waist.