AAP 5

அவனது திருமார்புதான் என்னை ஆட்கொண்டது

931 பாரமாய பழவினைபற்றறுத்து * என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றியென்னுள் புகுந்தான் *
கோரமாதவம்செய்தனன்கொல்லறியேன் * அரங்கத்தம்மான் * திரு
வாரமார்பதன்றோ அடியேனையாட்கொண்டதே.
AAP.5
931 pāramāya * pazhaviṉai paṟṟaṟuttu * ĕṉṉait taṉ
vāram ākki vaittāṉ * vaittatu aṉṟi ĕṉ ul̤ pukuntāṉ **
kora mātavam cĕytaṉaṉ kŏl aṟiyeṉ * araṅkattu ammāṉ * tiru
āramārpa taṉṟo * aṭiyeṉai āṭkŏṇṭate (5)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

931. Making me his dear devotee and entering my heart. He removed all the bad karmā that has burdened me all my life. I don’t know what hard penance I could have done for this to happen. The ornamented divine chest of the god of Srirangam made me his slave and protects me.

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

AAP.5

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாரம் ஆய பொறுக்கமுடியாத; பழவினை சுமையான பாபங்களின்; பற்று அறுத்து சம்பந்தத்தைத் தொலைத்து; என்னைத் தன் என்னைத் தன்னிடத்தில்; வாரம் பக்தி உடையவனாக; ஆக்கிவைத்தான் மாற்றினான்; வைத்தது அன்றி இப்படிச் செய்ததும் அல்லாமல்; என்னுள் புகுந்தான் என் மனதுக்குள் புகுந்தான்; கோர இவ்விதம் பாக்யம் பெற; மாதவம் நான் என்ன கடுமையான தவம்; செய்தனன் கொல்? செய்தேனோ; அறியேன் தெரியவில்லை; அரங்கத்து அம்மான் ஸ்ரீரங்கநாதா; திரு மஹாலக்ஷ்மியையும்; ஆர முத்துமாலையை உடைய; மார்வு அது அன்றோ உன் மார்பன்றோ; அடியேனை அடியேனை; ஆட்கொண்டதே ஆட்கொண்டது

Detailed WBW explanation

Śrī Periya Perumāḷ, the Lord of Śrīraṅgam, severed the connections with deeds—burdensome and ancient—that were incessantly following me. He fostered in my heart profound affection towards Him. Not content with merely this grace, He made His divine abode within my heart. I am unable to fathom the magnitude of penance I must have undertaken in my previous births to be

+ Read more