AAP 4

அவனது திருவயிறு என் மனத்தில் உலவுகிறது

930 சதுரமாமதிள்சூழ் இலங்கைக்கிறைவன்தலைபத்து
உதிரவோட்டி * ஓர்வெங்கணையுய்த்தவன் ஒதவண்ணன் *
மதுரமாவண்டுபாட மாமயிலாடரங்கத்தம்மான் * திருவயிற்று
உதரபந்தம் என்னுள்ளத்துள்நின்றுலாகின்றதே.
AAP.4
930 சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் * தலை பத்து
உதிர ஓட்டி * ஓர் வெங்கணை உய்த்தவன் * ஓதவண்ணன் **
மதுர மா வண்டு பாட * மா மயில் ஆட அரங்கத்து அம்மான் * திரு வயிற்று
உதர பந்தம் * என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே (4)
930 catura mā matil̤ cūzh ilaṅkaikku iṟaivaṉ * talai pattu
utira oṭṭi * or vĕṅkaṇai uyttavaṉ * otavaṇṇaṉ **
matura mā vaṇṭu pāṭa * mā mayil āṭa araṅkattu ammāṉ * tiru vayiṟṟu
utara pantam * ĕṉ ul̤l̤attul̤ niṉṟu ulākiṉṟate (4)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

930. The ocean-colored god shot sharp arrows, conquering and killing the ten-headed Rāvana, king of Lankā surrounded by high walls on all four sides. The beautiful ornament tied on the divine waist created a mark of the god of Srirangam (damodara) where bees that drink honey sing and beautiful peacocks dance entered my heart and stayed there.

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

AAP.4

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
சதுர மா சதுரமான உயர்ந்த; மதிள் சூழ் மதிள்களாலே சூழ்ந்த; இலங்கைக்கு இலங்கை; இறைவன் அரசன் ராவணனை; ஓட்டி முதல்நாள் யுத்தத்தில் தோற்று ஓடும்படி செய்து; தலை பத்து உதிர தலைபத்தும் உதிரும்படி; ஓர் வெங்கணை ஒப்பற்ற கூர்மையான அஸ்திரத்தை; உய்த்தவன் பிரயோகித்தவனும்; ஓதவண்ணன் கடல்போன்ற நிறமுடையவனும்; வண்டு வண்டுகள்; மதுர மா பாட மதுரமான இசைபாட; மா மயில் ஆட சிறந்த மயில்கள் ஆட; அரங்கத்து ஸ்ரீரங்கத்தில் இருக்கும்; அம்மான் ரங்கநாதனுடைய; திரு வயிற்று திருவயிற்றிலுள்ள; உதர பந்தம் ஆபரணமானது; என் உள்ளத்துள் என் நெஞ்சினுள்; நின்று நிலைத்து நின்று; உலாகின்றதே! உலாவுகின்றது

Detailed WBW explanation

Periya Perumāḷ is serenely reclining as the Supreme Lord within the sacred precincts of Srīraṅgam, a place resonating with the melodious humming of beetles and the elegant dance of majestic peacocks. Such is the grandeur of Periya Perumāḷ who, in the great battlefield, vanquished Rāvaṇa, the sovereign of Laṅkā, a realm fortified by four distinct layers of protection.

+ Read more