Your browser does not support the audio element.
audio
937 கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணியபெருமாயன் * என்னப்பனில் *
நண்ணித்தென்குருகூர் நம்பியென்றக்கால் *
அண்ணிக்கும்அமுதூறும் என்னாவுக்கே. (2)
938 நாவினால்நவிற்று இன்பமெய்தினேன் *
மேவினேன் அவன்பொன்னடிமெய்ம்மையே *
தேவுமற்றறியேன் குருகூர்நம்பி *
பாவினின்னிசை பாடித்திரிவனே.
939 திரிதந்தாகிலும் தேவபிரானுடை *
கரியகோலத் திருவுருக்காண்பன்நான் *
பெரியவண்குருகூர் நகர்நம்பிக்கா
ளுரியனாய் * அடியேன்பெற்ற நன்மையே.
940 நன்மையால்மிக்க நான்மறையாளர்கள் *
புன்மையாகக் கருதுவராதலின் *
அன்னையாயத்தனாய் என்னையாண்டிடும்
தன்மையான் * சடகோப னென்நம்பியே.
941 நம்பினேன் பிறர்நன்பொருள்தன்னையும் *
நம்பினேன் மடவாரையும்முன்னெல்லாம் *
செம்பொன்மாடத் திருக்குருகூர்நம்பிக்
கன்பனாய் * அடியேன் சதிர்த்தேனின்றே.
942 இன்றுதொட்டும் எழுமையும்எம்பிரான் *
நின்றுதன்புகழ் ஏத்தவருளினான் *
குன்றமாடத் திருக்குருகூர்நம்பி *
என்றுமென்னை இகழ்விலன்காண்மினே.
943 கண்டுகொண்டென்னைக் காரிமாறப்பிரான் *
பண்டைவல்வினை பாற்றியருளினான் *
எண்டிசையும் அறியவியம்புகேன் *
ஒண்தமிழ்ச் சடகோபனருளையே.
944 அருள்கொண்டாடும் அடியவரின்புற *
அருளினான் அவ்வருமறையின்பொருள் *
அருள்கொண்டு ஆயிரமின்தமிழ்பாடினான் *
அருள்கண்டீர் இவ்வுலகினில்மிக்கதே.
945 மிக்கவேதியர் வேதத்தினுட்பொருள்
நிற்கப்பாடி என்நெஞ்சுள்நிறுத்தினான் *
தக்கசீர்ச் சடகோபனென்நம்பிக்கு * ஆள்
புக்ககாதல் அடிமைப்பயனன்றே.
946 பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும்
செயல்நன்றாகத்திருத்திப் பணிகொள்வான் *
குயில்நின்றார்பொழில்சூழ் குருகூர்நம்பி *
முயல்கின்றேன் உன்தன்மொய்கழற்கன்பையே. (2)
947 அன்பன்தன்னை அடைந்தவர்கட்கெல்லாம்
அன்பன் * தென்குருகூர் நகர்நம்பிக்கு *
அன்பனாய் மதுரகவிசொன்னசொல்
நம்புவார்பதி * வைகுந்தம் காண்மினே. (2)