Chapter 10

Thirunaraiyur 7 - (கிடந்த நம்பி)

திருநறையூர் 7
Thirunaraiyur 7 - (கிடந்த நம்பி)
In Thirunaraiyur, the āzhvār advises all of us to chant the sacred name "Namo Narayanaya."
நமோ நாராயணம் என்னும் திருப்பெயரையே சொல்லுமாறு திருநறையூரில் ஆழ்வார் நமக்கெல்லாம் அறிவுரை கூறுகிறார்.
Verses: 1538 to 1547
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: இந்தளம்
Recital benefits: Will not get affected by the results of bad karma
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 6.10.1

1538 கிடந்தநம்பிகுடந்தைமேவிக் கேழலாயுலகை
இடந்தநம்பி * எங்கள்நம்பி எறிஞரரணழிய *
கடந்தநம்பிகடியாரிலங்கை உலகைஈரடியால் *
நடந்தநம்பிநாமம்சொல்லில் நமோநாராயணமே. (2)
1538 ## கிடந்த நம்பி குடந்தை மேவிக் * கேழல் ஆய் உலகை
இடந்த நம்பி * எங்கள் நம்பி * எறிஞர் அரண் அழிய **
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை * உலகை ஈர் அடியால் *
நடந்த நம்பி நாமம் சொல்லில் * நமோ நாராயணமே 1
1538 ## kiṭanta nampi kuṭantai mevik * kezhal āy ulakai
iṭanta nampi * ĕṅkal̤ nampi * ĕṟiñar araṇ azhiya **
kaṭanta nampi kaṭi ār ilaṅkai * ulakai īr aṭiyāl *
naṭanta nampi nāmam cŏllil * namo nārāyaṇame-1

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1538. Our Nambi of Naraiyur who rests on Adisesha on the ocean in Kudandai took the form of a boar and split open the earth to bring the earth goddess from the underworld. He destroyed the forts of Lankā and conquered the Rākshasas and he measured the world and the sky with his two feet at Mahabali's sacrifice. Praise his name and say, “Namo Narāyanāya. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குடந்தை மேவி திருகுடந்தையில் பொருந்தி; கிடந்த பள்ளிகொண்டிருக்கும்; நம்பி அழகான குணபூர்ணனான பெருமானும்; கேழல் ஆய் வராகமாக; உலகை அண்டத்திலிருந்து பூமியை; இடந்த நம்பி விடுவித்தவனும்; எங்கள் நம்பி சாமர்த்யமான எங்கள் பெருமானும்; எறிஞர் சத்துருக்களின்; அரண் அழிய கோட்டை அழியும்படியாக; கடியார் கொடிய அரக்கர்களின்; இலங்கை இலங்கையை; கடந்த நம்பி வீரத்தால் அழித்தவனும்; உலகை ஈர் உலகை இரண்டு; அடியால் அடிகளால் அளந்த; நடந்த நம்பி ஆச்சர்யமான பெருமானின்; நாமம் நாமங்களை; சொல்லில் சொல்வதால் அதுவே; நமோ நமோ நாராயணா; நாராயணமே என்னும் மந்திரமாகும்

PT 6.10.2

1539 விடந்தானுடையஅரவம்வெருவச் செருவில்முனநாள் * முன்
தடந்தாமரைநீர்ப்பொய்கைபுக்கு மிக்கதாடாளன் *
இடந்தான்வையம்கேழலாகி உலகைஈரடியால் *
நடந்தானுடையநாமம்சொல்லில் நமோநாராயணமே.
1539 விடம் தான் உடைய அரவம் வெருவச் * செருவில் முன நாள் * முன்
தடந் தாமரை நீர்ப் பொய்கை புக்கு * மிக்க தாள் ஆளன் **
இடந்தான் வையம் கேழல் ஆகி * உலகை ஈர் அடியால் *
நடந்தானுடைய நாமம் சொல்லில் * நமோ நாராயணமே 2
1539 viṭam-tāṉ uṭaiya aravam vĕruvac * cĕruvil muṉa nāl̤ * muṉ
taṭan tāmarai nīrp pŏykai pukku * mikka tāl̤ āl̤aṉ **
iṭantāṉ vaiyam kezhal āki * ulakai īr aṭiyāl *
naṭantāṉuṭaiya nāmam cŏllil * namo nārāyaṇame-2

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1539. The lord of Naraiyur jumped into the lotus pond, fought with the snake Kālingan and danced on his head, took the form of a boar and split open the earth and measured the world and the sky with his two feet. Praise his name and say, “Namo Narāyanāya. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முனநாள் முன்பொரு சமயம்; விடம் தாள் உடைய விஷமுடைய; அரவம் காளியநாகம்; வெருவ அஞ்சும்படியாக; முன் தன் தோழர்கள் எதிரே; தடம் தாமரை பெரிய தாமரைகளையுடைய; நீர்ப் பொய்கை புக்கு பொய்கையில் புகுந்து; செருவில் அந்த நாகத்தோடு போர் செய்து; மிக்க மேன்மைபெற்ற; தாள் ஆளன் திருவடிகளையுடையவனும்; வையம் கேழல் ஆகி வராஹமூர்த்தியாகி பூமியை; இடந்தான் குத்தியெடுத்துக் கொண்டு வந்தவனும்; உலகை ஈர் உலகை இரண்டு; அடியால் அடிகளால் அளந்து; நடந்தான் உடைய நடந்த பெருமானின்; நாமம் சொல்லில் நாமங்களை சொல்வதால் அதுவே; நமோ நமோ நாராயணா; நாராயணமே என்னும் மந்திரமாகும்

PT 6.10.3

1540 பூணாதனலும்தறுகண்வேழம்மறுக * வளைமருப்பை
பேணான்வாங்கி அமுதம்கொண்டபெருமான்திருமார்வன் *
பாணாவண்டுமுரலும்கூந்தல் ஆய்ச்சிதயிர்வெண்ணெய் *
நாணாதுஉண்டான்நாமம்சொல்லில் நமோநாராயணமே.
1540 பூணாது அனலும் * தறுகண் வேழம் மறுக * வளை மருப்பை
பேணான் வாங்கி * அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன் **
பாணா வண்டு முரலும் கூந்தல் * ஆய்ச்சி தயிர் வெண்ணெய் *
நாணாது உண்டான் நாமம் சொல்லில் * நமோ நாராயணமே 3
1540 pūṇātu aṉalum * taṟukaṇ vezham maṟuka * val̤ai maruppai
peṇāṉ vāṅki * amutam kŏṇṭa pĕrumāṉ tiru mārvaṉ **
pāṇā vaṇṭu muralum kūntal * āycci tayir vĕṇṇĕy *
nāṇātu uṇṭāṉ nāmam cŏllil * namo nārāyaṇame-3

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1540. He, the Lord of Naraiyur fought the mighty-eyed elephant Kuvalayābeedam and broke its tusks. He churned the milky ocean, took the nectar and gave it to the gods and embraced Lakshmi who came out of the milky ocean. Shameless, he stole and ate the yogurt and butter kept by Yashodā the cowherdess with hair that swarmed with bees. Praise his name and say, “Namo Narāyanāya. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பூணாது கட்டுக்கடங்காத; அனலும் நெருப்பை உமிழும்; தறு கண் வட்டமான கண்களையுடைய; வேழம் யானை; மறுக துயரப்படும்படி; வளை மருப்பை வளைந்த கொம்புகளை; பேணான் வாங்கி பறித்தவனும்; அமுதம் கொண்ட அமுதம் கடைந்தெடுத்த; பெருமான் பெருமானும்; திருமார்வன் மஹாலக்ஷ்மியை மார்பிலுடையவனும்; பாணா வண்டு முரலும் வண்டொலிக்கும்; கூந்தல் கூந்தலையுடைய; ஆய்ச்சி ஆய்ச்சி கடைந்த; தயிர் தயிர்; வெண்ணெய் வெண்ணெயை; நாணாது வெட்கமின்றி; உண்டான் உண்டவனின்; நாமம் நாமங்களை; சொல்லில் சொல்வதால் அதுவே; நமோ நமோ நாராயணா; நாராயணமே என்னும் மந்திரமாகும்

PT 6.10.4

1541 கல்லார்மதிள்சூழ்கச்சிநகருள்நச்சிப், பாடகத்துள் *
எல்லாவுலகும்வணங்க இருந்தஅம்மான் * இலங்கைக்கோன்
வல்லாளாகம் வில்லால்முனிந்தஎந்தை * விபீடணற்கு
நல்லானுடையநாமம்சொல்லில் நமோநாராயணமே.
1541 ## கல் ஆர் மதிள் சூழ் * கச்சி நகருள் நச்சிப் * பாடகத்துள்
எல்லா உலகும் வணங்க * இருந்த அம்மான் ** இலங்கைக்கோன்
வல் ஆள் ஆகம் * வில்லால் முனிந்த எந்தை * விபீடணற்கு
நல்லானுடைய நாமம் சொல்லில் * நமோ நாராயணமே 4
1541 ## kal ār matil̤ cūzh * kacci nakarul̤ naccip * pāṭakattul̤
ĕllā ulakum vaṇaṅka * irunta ammāṉ ** ilaṅkaikkoṉ
val āl̤ ākam * villāl muṉinta ĕntai * vipīṭaṇaṟku
nallāṉuṭaiya nāmam cŏllil * namo nārāyaṇame-4

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1541. The lord of Naraiyur who wishes to stay in Thirukkachi surrounded by stone walls, and in the temple in Pādagam where all the people of the world come and worship him, who split open the strong chest of Rāvana the king of Lankā with his arrow and gave the kingdom to Vibhishanā, Rāvana's brother. Praise his name and say, “Namo Narāyanāya. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கல் ஆர் கல்லால் கட்டப்பட்ட; மதிள் சூழ் மதிள்களால் சூழந்த; கச்சி நகருள் காஞ்சீபுரத்தில்; நச்சி இருக்க விரும்பி; எல்லா உலகும் உலகத்தோர் அனைவரும்; வணங்க வணங்க; பாடகத்துள் திருபாடகம் என்னும் இடத்தில்; இருந்த அம்மான் இருந்த பெருமான்; இலங்கைக்கோன் இலங்கை அரசன் ராவணனின்; வல் ஆள் மிகவும் பலிஷ்டமான; ஆகம் சரீரத்தை; வில்லால் முனிந்த வில்லாலே சீறியழித்த; எந்தை பெருமானும்; விபீடணற்கு விபீஷணனுக்கு; நல்லான் ப்ரீதியுடன் அருள்; உடைய புரிந்தவனுமானவனின்; நாமம் நாமங்களை; சொல்லில் சொல்வதால் அதுவே; நமோ நமோ நாராயணா; நாராயணமே என்னும் மந்திரமாகும்

PT 6.10.5

1542 குடையாவரையால் நிரைமுன்காத்தபெருமான் * மருவாத
விடைதானேழும்வென்றான் கோவல்நின்றான் * தென்னிலங்கை
அடையாஅரக்கர்வீயப்பொருது மேவிவெங்கூற்றம் *
நடையாவுண்ணக்கண்டான்நாமம் நமோநாராயணமே.
1542 குடையா வரையால் * நிரை முன் காத்த பெருமான் * மருவாத
விடை தான் ஏழும் வென்றான் * கோவல் நின்றான் * தென் இலங்கை
அடையா அரக்கர் வீயப் * பொருது மேவி வெம் கூற்றம் *
நடையா உண்ணக் கண்டான் நாமம் * நமோ நாராயணமே 5
1542 kuṭaiyā varaiyāl * nirai muṉ kātta pĕrumāṉ * maruvāta
viṭai-tāṉ ezhum vĕṉṟāṉ * koval niṉṟāṉ * tĕṉ ilaṅkai
aṭaiyā arakkar vīyap * pŏrutu mevi vĕm kūṟṟam *
naṭaiyā uṇṇak kaṇṭāṉ nāmam * namo nārāyaṇame-5

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1542. The god of Thirukkovalur and Naraiyur carried Govardhanā mountain as an umbrella and protected the cows and the cowherds from the storm, he conquered the seven bulls and fought and destroyed the Rākshasas in Lankā in the south, burning Lankā so that Yama swallowed everything there. Praise his name and say, “Namo Narāyanāya. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் முன்பொருசமயம்; வரையால் கோவர்த்தன மலையை; குடையா குடையாககொண்டு; நிரை பசுக்களை; காத்த பெருமான் காத்த பெருமானும்; மருவாத எதிரிட்ட; விடை தான் ஏழும் ஏழு எருதுகளையும்; வென்றான் அடக்கியவனும்; கோவல் திருக்கோவலூரில்; நின்றான் நின்ற பெருமானும்; தென்இலங்கை தென்இலங்கையில்; அடையா அடங்காத; அரக்கர் அரக்கர்களை; வீயப் அழியும்படி; பொருது மேவி போர் புரிந்தவனும்; வெம் கூற்றம் கொடிய மிருத்யுவானவன்; நடையா இதுவே காரியமாக இலங்கையை; உண்ணக் புஜிக்கும்படி செய்தவனுமான; கண்டான் பெருமானுடைய; நாமம் நாமங்களே; நமோ நமோ நாராயணா; நாராயணமே என்னும் மந்திரமாகும்

PT 6.10.6

1543 கானஎண்கும்குரங்கும் முசுவும்படையா * அடலரக்கர்
மானமழித்துநின்ற வென்றியம்மான் * எனக்குஎன்றும்
தேனும்பாலும்அமுதுமாய திருமால்திருநாமம் *
நானும்சொன்னேன்நமரும்உரைமின் நமோநாராயணமே.
1543 கான எண்கும் குரங்கும் * முசுவும் படையா * அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற * வென்றி அம்மான் ** எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதும் ஆய * திருமால் திருநாமம் *
நானும் சொன்னேன் நமரும் உரைமின் * நமோ நாராயணமே 6
1543 kāṉa ĕṇkum kuraṅkum * mucuvum paṭaiyā * aṭal arakkar
māṉam azhittu niṉṟa * vĕṉṟi ammāṉ ** ĕṉakku ĕṉṟum
teṉum pālum amutum āya * tirumāl tirunāmam *
nāṉum cŏṉṉeṉ namarum uraimiṉ * namo nārāyaṇame-6

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1543. Our father of Naraiyur, always victorious, collected an army of bears, monkeys, and langurs in the forest, went to Lankā, fought with the strong Rākshasas, destroyed their might and achieved victory. The divine name of Thirumāl is as sweet as honey, milk and nectar. I praise his name, and you, O friends, should also praise his name and say, “Namo Narāyanāya. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கான எண்கும் காட்டுக்கரடிகளையும்; குரங்கும் குரங்குகளையும்; முசுவும் முசு என்னும் குரங்குகளையும்; படையா படையாகக் கொண்டு; அடல் அரக்கர் கொடிய அரக்கர்களுடைய; மானம் கர்வத்தை; அழித்து நின்ற அழியச்செய்து; வென்றி வெற்றி கொண்ட; அம்மான் பெருமானின்; எனக்கு என்றும் எனக்கு எப்போதும்; தேனும் பாலும் தேனும் பாலும்; அமுதும் ஆய அமுதுமாக இருக்கும்; திருமால் திருநாமம் திருமாலின் திருநாமம்; நானும் சொன்னேன் நானும் சொன்னேன்; நமரும் உரைமின் நீங்களும் சொல்லுங்கள்; நாமம் இந்த நாமங்களே; நமோ நமோ நாராயணா; நாராயணமே என்னும் மந்திரமாகும்

PT 6.10.7

1544 நின்றவரையும்கிடந்தகடலும் திசையும்இருநிலனும் *
ஒன்றும்ஒழியாவண்ணம் எண்ணிநின்றஅம்மானார் *
குன்றுகுடையாஎடுத்த அடிகளுடையதிருநாமம் *
நன்றுகாண்மின்தொண்டீர்! சொன்னேன் நமோநாராயணமே.
1544 நின்ற வரையும் கிடந்த கடலும் * திசையும் இரு நிலனும் *
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி * நின்ற அம்மானார் **
குன்று குடையா எடுத்த * அடிகளுடைய திருநாமம் *
நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன் * நமோ நாராயணமே 7
1544 niṉṟa varaiyum kiṭanta kaṭalum * ticaiyum iru nilaṉum *
ŏṉṟum ŏzhiyā vaṇṇam ĕṇṇi * niṉṟa ammāṉār **
kuṉṟu kuṭaiyā ĕṭutta * aṭikal̤uṭaiya tirunāmam *
naṉṟu kāṇmiṉ tŏṇṭīr cŏṉṉeṉ * namo nārāyaṇame-7

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1544. Our father of Naraiyur is the hills, the ocean, the directions and the large earth and he guards them and makes them indestructible. He carried Govardhanā mountain and protected the cows and cowherds from the storm. O devotees, understand that his divine name is an excellent thing. Praise his name and say, “Namo Narāyanāya. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நின்ற வரையும் நிற்கின்ற மலைகளும்; கிடந்த கடலும் கிடக்கின்ற கடலும்; திசையும் திசைகளும்; இரு நிலனும் பரந்த பூமியும் ஆகியவை; ஒன்றும் சிறிதும்; ஒழியா வண்ணம் பாழாகாதபடி; எண்ணி மேலும் ஸ்ருஷ்டித்து; நின்ற கொண்டிருக்கும்; அம்மானார் பெருமான்; குன்று குடையா மலையை குடையாக; எடுத்த எடுத்தவனுடைய; அடிகளுடைய திருநாமம் திருநாமம்; நன்று சொன்னேன் நல்லதென்று சொன்னேன்; தொண்டீர்! காண்மின் பக்தர்களே நீங்களும்; நாமம் இந்த நாமங்களைச் சொல்லுங்கள்; நமோ நமோ நாராயணா; நாராயணமே என்னும் மந்திரமாகும்

PT 6.10.8

1545 கடுங்கால்மாரிகல்லேபொழிய அல்லேஎமக்கென்று
படுங்கால் * நீயேசரணென்று ஆயரஞ்ச, அஞ்சாமுன் *
நெடுங்காற்குன்றம்குடையொன்றேந்தி நிரையைச் சிரமத்தால் *
நடுங்காவண்ணம்காத்தான்நாமம் நமோநாராயணமே.
1545 கடுங் கால் மாரி கல்லே பொழிய * அல்லே எமக்கு என்று
படுங்கால் * நீயே சரண் என்று * ஆயர் அஞ்ச அஞ்சாமுன் **
நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி * நிரையைச் சிரமத்தால் *
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் * நமோ நாராயணமே 8
1545 kaṭuṅ kāl māri kalle pŏzhiya * alle ĕmakku ĕṉṟu
paṭuṅkāl * nīye caraṇ ĕṉṟu * āyar añca añcāmuṉ **
nĕṭuṅkāl kuṉṟam kuṭai ŏṉṟu enti * niraiyaic ciramattāl *
naṭuṅkā vaṇṇam kāttāṉ nāmam * namo nārāyaṇame-8

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1545. When the cows and the cowherds were shivering in a storm that poured a rain of stones, terrified, the cowherds worshiped the god of Naraiyur and said, “We cannot bear this—you are our refuge!” and he carried the large Govardhanā mountain as an umbrella and protected them all from the storm. Praise his name and say, “Namo Narāyanāya. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடுங் கால் கடும் காற்றோடு கூடின; மாரி மேகம்; கல்லே பொழிய கற்களையே பொழிய; எமக்கு எங்களுக்கு; அல்லே ராத்ரியாகவே; என்று இருக்கிறது என்று; படுங்கால் எண்ணி; நீயே சரண் என்று நீயே சரண் என்று; ஆயர் அஞ்ச ஆயர்கள் அஞ்ச; அஞ்சாமுன் அந்த பயம் நீங்க; நெடுங்கால் சுற்றுமுள்ள; குன்றம் குன்றுகளோடு கூடின கோவர்த்தன; குடை மலையை குடையாக; ஒன்று ஏந்தி தூக்கி; நிரையைச் பசுக்கூட்டங்களின்; சிரமத்தால் சிரமத்தைப் போக்கி; நடுங்கா வண்ணம் நடுங்கா வண்ணம்; காத்தான் காத்தவனின்; நாமம் நாமங்களே; நமோ நமோ நாராயணா; நாராயணமே என்னும் மந்திரமாகும்

PT 6.10.9

1546 பொங்குபுணரிக்கடல்சூழாடை நிலமாமகள்மலர்மா
மங்கை * பிரமன்சிவன்இந்திரன் வானவர்நாயகராய *
எங்களடிகள் இமையோர்தலைவருடையதிருநாமம் *
நங்கள்வினைகள்தவிரவுரைமின் நமோநாராயணமே.
1546 பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை * நில மா மகள் மலர் மா
மங்கை * பிரமன் சிவன் இந்திரன் * வானவர் நாயகர் ஆய **
எங்கள் அடிகள் இமையோர் * தலைவருடைய திருநாமம் *
நங்கள் வினைகள் தவிர உரைமின் * நமோ நாராயணமே 9
1546 pŏṅku puṇarik kaṭal cūzh āṭai * nila mā makal̤ malar mā
maṅkai * piramaṉ civaṉ intiraṉ * vāṉavar nāyakar āya **
ĕṅkal̤ aṭikal̤ imaiyor * talaivaruṭaiya tirunāmam *
naṅkal̤ viṉaikal̤ tavira uraimiṉ * namo nārāyaṇame-9

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1546. He, the lord of Naraiyur, the beloved of the earth goddess surrounded by oceans that roll with waves and of lovely Lakshmi seated on the lotus is the lord of Nānmuhan, Shivā, Indra and the gods in the sky. Praise his divine name, say, “Namo Narāyanāya!” and your karmā will be destroyed.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொங்கு புணரிக் பொங்கும் அலைகளையுடைய; கடல் சூழ் ஆடை கடலையே ஆடையாக உடைய; நிலமா மகள் பூமாதேவிக்கும்; மலர் தாமரையில் தோன்றிய; மா மங்கை திருமகளுக்கும்; பிரமன் சிவன் பிரமன் சிவன்; இந்திரன் இந்திரன் ஆகிய; வானவர் தேவர்களின்; நாயகர் ஆய தலைவனும்; எங்கள் அடிகள் எங்களுக்கு ஸ்வாமியும்; இமையோர் நித்யசூரிகளின்; தலைவருடைய தலைவனுமானவனின்; திருநாமம் நாமங்களே; நங்கள் வினைகள் நம்முடைய பாபங்கள்; தவிர உரைமின் தீர உரைத்திடுங்கள்; நமோ நமோ நாராயணா; நாராயணமே என்னும் மந்திரமாகும்

PT 6.10.10

1547 வாவித்தடம்சூழ்மணிமுத்தாற்று நறையூர்நெடுமாலை *
நாவில்பரவிநெஞ்சில்கொண்டு நம்பிநாமத்தை *
காவித்தடங்கண்மடவார்கேள்வன் கலியனொலிமாலை *
மேவிச்சொல்லவல்லார்பாவம் நில்லாவீயுமே. (2)
1547 ## வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று * நறையூர் நெடுமாலை *
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு * நம்பி நாமத்தை *
காவித் தடங் கண் மடவார் கேள்வன் * கலியன் ஒலி மாலை *
மேவிச் சொல்ல வல்லார் பாவம் * நில்லா வீயுமே 10
1547 ## vāvit taṭam cūzh maṇi muttāṟṟu * naṟaiyūr nĕṭumālai *
nāvil paravi nĕñcil kŏṇṭu * nampi nāmattai *
kāvit taṭaṅ kaṇ maṭavār kel̤vaṉ * kaliyaṉ ŏli mālai *
mevic cŏlla vallār pāvam * nillā vīyume-10

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1547. Kaliyan the poet, the beloved of his queen with large eyes like kāvi flowers, composed a garland of ten musical pāsurams on Nedumal of Thirunaraiyur on the bank of beautiful Muthāru surrounded by large ponds. If devotees keep his name in their hearts and praise it with their tongues, all their bad karmā will be removed.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாவித் குளங்களாலும்; தடம் சூழ் தடாகங்களாலும் சூழ்ந்த; மணி ரத்தினங்களையும்; முத்தாற்று முத்துக்களையுமுடைய; நறையூர் திருநறையூரிலிருக்கும்; நெடுமாலை பெருமானை; நாவில் பரவி நாவினால் துதித்தும்; நெஞ்சில் கொண்டு நெஞ்சில் சிந்தித்தும்; நம்பி திருநறையூர் நம்பியின்; நாமத்தை திருநாமம் குறித்து; காவி கருநெய்தல்; தடங் கண் பூப்போன்று கண்ளையுடைய; மடவார் கேள்வன் பெண்கள் விரும்பும்; கலியன் திருமங்கையாழ்வார்; ஒலிமாலை அருளிச்செய்த பாமலையை; மேவிச் சொல்ல வல்லார் விரும்பி ஓதுபவர்களின்; பாவம் நில்லா பாவங்கள் நிற்காமல்; வீயுமே உருமாய்ந்துவிடும்