கீழ்ச் சொன்ன ஆஸ்ரித சுலபன் விரோதி நிரசனம் வேறே முகத்தால் இங்கு
கல்லார் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள் எல்லா வுலகும் வணங்க விருந்த வம்மான் இலங்கைக் கோன் வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை விபீடணற்கு நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே —6-10-4-
கல்லார் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள் எல்லா வுலகும் வணங்க விருந்த வம்மான்- அரணாகப் போரும்படியான