PT 6.10.7

நமோநாராயணம் என்ற நாமம் மிக நல்லது

1544 நின்றவரையும்கிடந்தகடலும் திசையும்இருநிலனும் *
ஒன்றும்ஒழியாவண்ணம் எண்ணிநின்றஅம்மானார் *
குன்றுகுடையாஎடுத்த அடிகளுடையதிருநாமம் *
நன்றுகாண்மின்தொண்டீர்! சொன்னேன் நமோநாராயணமே.
1544 niṉṟa varaiyum kiṭanta kaṭalum * ticaiyum iru nilaṉum *
ŏṉṟum ŏzhiyā vaṇṇam ĕṇṇi * niṉṟa ammāṉār **
kuṉṟu kuṭaiyā ĕṭutta * aṭikal̤uṭaiya tirunāmam *
naṉṟu kāṇmiṉ tŏṇṭīr cŏṉṉeṉ * namo nārāyaṇame-7

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1544. Our father of Naraiyur is the hills, the ocean, the directions and the large earth and he guards them and makes them indestructible. He carried Govardhanā mountain and protected the cows and cowherds from the storm. O devotees, understand that his divine name is an excellent thing. Praise his name and say, “Namo Narāyanāya. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நின்ற வரையும் நிற்கின்ற மலைகளும்; கிடந்த கடலும் கிடக்கின்ற கடலும்; திசையும் திசைகளும்; இரு நிலனும் பரந்த பூமியும் ஆகியவை; ஒன்றும் சிறிதும்; ஒழியா வண்ணம் பாழாகாதபடி; எண்ணி மேலும் ஸ்ருஷ்டித்து; நின்ற கொண்டிருக்கும்; அம்மானார் பெருமான்; குன்று குடையா மலையை குடையாக; எடுத்த எடுத்தவனுடைய; அடிகளுடைய திருநாமம் திருநாமம்; நன்று சொன்னேன் நல்லதென்று சொன்னேன்; தொண்டீர்! காண்மின் பக்தர்களே நீங்களும்; நாமம் இந்த நாமங்களைச் சொல்லுங்கள்; நமோ நமோ நாராயணா; நாராயணமே என்னும் மந்திரமாகும்