PT 6.10.5

கோவர்த்தனன் திருநாமம் நமோநாராயணம்

1542 குடையாவரையால் நிரைமுன்காத்தபெருமான் * மருவாத
விடைதானேழும்வென்றான் கோவல்நின்றான் * தென்னிலங்கை
அடையாஅரக்கர்வீயப்பொருது மேவிவெங்கூற்றம் *
நடையாவுண்ணக்கண்டான்நாமம் நமோநாராயணமே.
1542 kuṭaiyā varaiyāl * nirai muṉ kātta pĕrumāṉ * maruvāta
viṭai-tāṉ ezhum vĕṉṟāṉ * koval niṉṟāṉ * tĕṉ ilaṅkai
aṭaiyā arakkar vīyap * pŏrutu mevi vĕm kūṟṟam *
naṭaiyā uṇṇak kaṇṭāṉ nāmam * namo nārāyaṇame-5

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1542. The god of Thirukkovalur and Naraiyur carried Govardhanā mountain as an umbrella and protected the cows and the cowherds from the storm, he conquered the seven bulls and fought and destroyed the Rākshasas in Lankā in the south, burning Lankā so that Yama swallowed everything there. Praise his name and say, “Namo Narāyanāya. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் முன்பொருசமயம்; வரையால் கோவர்த்தன மலையை; குடையா குடையாககொண்டு; நிரை பசுக்களை; காத்த பெருமான் காத்த பெருமானும்; மருவாத எதிரிட்ட; விடை தான் ஏழும் ஏழு எருதுகளையும்; வென்றான் அடக்கியவனும்; கோவல் திருக்கோவலூரில்; நின்றான் நின்ற பெருமானும்; தென்இலங்கை தென்இலங்கையில்; அடையா அடங்காத; அரக்கர் அரக்கர்களை; வீயப் அழியும்படி; பொருது மேவி போர் புரிந்தவனும்; வெம் கூற்றம் கொடிய மிருத்யுவானவன்; நடையா இதுவே காரியமாக இலங்கையை; உண்ணக் புஜிக்கும்படி செய்தவனுமான; கண்டான் பெருமானுடைய; நாமம் நாமங்களே; நமோ நமோ நாராயணா; நாராயணமே என்னும் மந்திரமாகும்