இதில் ஸ்ரீ யபதித்தவம் ஸ்பஷ்டம் –
பொங்கு புணரிக் கடல் சூழாடை நில மா மகள் மலர் மா மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகராய எங்கள் அடிகள் இமையோர் தலைவர் உடைய திரு நாமம் நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோ நாராயணமே –6-10-9-
பொங்கு புணரிக் கடல் சூழாடை நில மா மகள் மலர் மாமங்கை- பல காலும் இத்தை ஆதரியா நின்றீர் – இதுக்கு அர்த்தம் என் என்ன – இன்னது என்கிறார் – கிளர்ந்த திரையை