PT 6.10.1

திருமாலின் திருநாமம் நமோநாராயணம்

1538 கிடந்தநம்பிகுடந்தைமேவிக் கேழலாயுலகை
இடந்தநம்பி * எங்கள்நம்பி எறிஞரரணழிய *
கடந்தநம்பிகடியாரிலங்கை உலகைஈரடியால் *
நடந்தநம்பிநாமம்சொல்லில் நமோநாராயணமே. (2)
1538 ## kiṭanta nampi kuṭantai mevik * kezhal āy ulakai
iṭanta nampi * ĕṅkal̤ nampi * ĕṟiñar araṇ azhiya **
kaṭanta nampi kaṭi ār ilaṅkai * ulakai īr aṭiyāl *
naṭanta nampi nāmam cŏllil * namo nārāyaṇame-1

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1538. Our Nambi of Naraiyur who rests on Adisesha on the ocean in Kudandai took the form of a boar and split open the earth to bring the earth goddess from the underworld. He destroyed the forts of Lankā and conquered the Rākshasas and he measured the world and the sky with his two feet at Mahabali's sacrifice. Praise his name and say, “Namo Narāyanāya. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குடந்தை மேவி திருகுடந்தையில் பொருந்தி; கிடந்த பள்ளிகொண்டிருக்கும்; நம்பி அழகான குணபூர்ணனான பெருமானும்; கேழல் ஆய் வராகமாக; உலகை அண்டத்திலிருந்து பூமியை; இடந்த நம்பி விடுவித்தவனும்; எங்கள் நம்பி சாமர்த்யமான எங்கள் பெருமானும்; எறிஞர் சத்துருக்களின்; அரண் அழிய கோட்டை அழியும்படியாக; கடியார் கொடிய அரக்கர்களின்; இலங்கை இலங்கையை; கடந்த நம்பி வீரத்தால் அழித்தவனும்; உலகை ஈர் உலகை இரண்டு; அடியால் அடிகளால் அளந்த; நடந்த நம்பி ஆச்சர்யமான பெருமானின்; நாமம் நாமங்களை; சொல்லில் சொல்வதால் அதுவே; நமோ நமோ நாராயணா; நாராயணமே என்னும் மந்திரமாகும்