Chapter 10

Thirunaraiyur 7 - (கிடந்த நம்பி)

திருநறையூர் 7
Thirunaraiyur 7 - (கிடந்த நம்பி)

In Thirunaraiyur, the āzhvār advises all of us to chant the sacred name "Namo Narayanaya."


In the preceding chapter, our revered Āzhvār ardently instructed his own divine heart, his manas, to perform complete and unconditional surrender (śaraṇāgati) unto the sacred lotus feet of Sriman Nārāyaṇa. In response, the Āzhvār's heart, filled with

+ Read more

நமோ நாராயணம் என்னும் திருப்பெயரையே சொல்லுமாறு திருநறையூரில் ஆழ்வார் நமக்கெல்லாம் அறிவுரை கூறுகிறார்.

Verses: 1538 to 1547
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: இந்தளம்
Recital benefits: Will not get affected by the results of bad karma
  • PT 6.10.1
    1538 ## கிடந்த நம்பி குடந்தை மேவிக் * கேழல் ஆய் உலகை
    இடந்த நம்பி * எங்கள் நம்பி * எறிஞர் அரண் அழிய **
    கடந்த நம்பி கடி ஆர் இலங்கை * உலகை ஈர் அடியால் *
    நடந்த நம்பி நாமம் சொல்லில் * நமோ நாராயணமே 1
  • PT 6.10.2
    1539 விடம் தான் உடைய அரவம் வெருவச் * செருவில் முன நாள் * முன்
    தடந் தாமரை நீர்ப் பொய்கை புக்கு * மிக்க தாள் ஆளன் **
    இடந்தான் வையம் கேழல் ஆகி * உலகை ஈர் அடியால் *
    நடந்தானுடைய நாமம் சொல்லில் * நமோ நாராயணமே 2
  • PT 6.10.3
    1540 பூணாது அனலும் * தறுகண் வேழம் மறுக * வளை மருப்பை
    பேணான் வாங்கி * அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன் **
    பாணா வண்டு முரலும் கூந்தல் * ஆய்ச்சி தயிர் வெண்ணெய் *
    நாணாது உண்டான் நாமம் சொல்லில் * நமோ நாராயணமே 3
  • PT 6.10.4
    1541 ## கல் ஆர் மதிள் சூழ் * கச்சி நகருள் நச்சிப் * பாடகத்துள்
    எல்லா உலகும் வணங்க * இருந்த அம்மான் ** இலங்கைக்கோன்
    வல் ஆள் ஆகம் * வில்லால் முனிந்த எந்தை * விபீடணற்கு
    நல்லானுடைய நாமம் சொல்லில் * நமோ நாராயணமே 4
  • PT 6.10.5
    1542 குடையா வரையால் * நிரை முன் காத்த பெருமான் * மருவாத
    விடை தான் ஏழும் வென்றான் * கோவல் நின்றான் * தென் இலங்கை
    அடையா அரக்கர் வீயப் * பொருது மேவி வெம் கூற்றம் *
    நடையா உண்ணக் கண்டான் நாமம் * நமோ நாராயணமே 5
  • PT 6.10.6
    1543 கான எண்கும் குரங்கும் * முசுவும் படையா * அடல் அரக்கர்
    மானம் அழித்து நின்ற * வென்றி அம்மான் ** எனக்கு என்றும்
    தேனும் பாலும் அமுதும் ஆய * திருமால் திருநாமம் *
    நானும் சொன்னேன் நமரும் உரைமின் * நமோ நாராயணமே 6
  • PT 6.10.7
    1544 நின்ற வரையும் கிடந்த கடலும் * திசையும் இரு நிலனும் *
    ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி * நின்ற அம்மானார் **
    குன்று குடையா எடுத்த * அடிகளுடைய திருநாமம் *
    நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன் * நமோ நாராயணமே 7
  • PT 6.10.8
    1545 கடுங் கால் மாரி கல்லே பொழிய * அல்லே எமக்கு என்று
    படுங்கால் * நீயே சரண் என்று * ஆயர் அஞ்ச அஞ்சாமுன் **
    நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி * நிரையைச் சிரமத்தால் *
    நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் * நமோ நாராயணமே 8
  • PT 6.10.9
    1546 பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை * நில மா மகள் மலர் மா
    மங்கை * பிரமன் சிவன் இந்திரன் * வானவர் நாயகர் ஆய **
    எங்கள் அடிகள் இமையோர் * தலைவருடைய திருநாமம் *
    நங்கள் வினைகள் தவிர உரைமின் * நமோ நாராயணமே 9
  • PT 6.10.10
    1547 ## வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று * நறையூர் நெடுமாலை *
    நாவில் பரவி நெஞ்சில் கொண்டு * நம்பி நாமத்தை *
    காவித் தடங் கண் மடவார் கேள்வன் * கலியன் ஒலி மாலை *
    மேவிச் சொல்ல வல்லார் பாவம் * நில்லா வீயுமே 10