Chapter 6

Thennarangam 3 - (கைம் மான)

திருவரங்கம் 3
Thennarangam 3 - (கைம் மான)
The āzhvār elaborates on all the glories of Thiruvarangan (Lord Ranganatha).
திருவரங்கனின் பெருமைகளையெல்லாம் ஈண்டு விளக்குகிறார் ஆழ்வார்.
Verses: 1398 to 1407
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Recital benefits: Will not get affected by the results of bad karma
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 5.6.1

1398 கைம்மானமழகளிற்றைக் கடல்கிடந்தகருமணியை *
மைம்மானமரதகத்தை மறையுரைத்ததிருமாலை *
எம்மானைஎனக்குஎன்றும்இனியானைப் பனிகாத்த
அம்மானை * யான்கண்டது அணிநீர்த்தென்னரங்கத்தே. (2)
1398 ## கைம் மான மழ களிற்றைக் * கடல் கிடந்த கருமணியை *
மைம் மான மரதகத்தை * மறை உரைத்த திருமாலை **
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் * பனி காத்த
அம்மானை * யான் கண்டது * அணி நீர்த் தென் அரங்கத்தே 1
1398 ## kaim māṉa mazha kal̤iṟṟaik * kaṭal kiṭanta karumaṇiyai *
maim māṉa maratakattai * maṟai uraitta tirumālai **
ĕmmāṉai ĕṉakku ĕṉṟum iṉiyāṉaip * paṉi kātta
ammāṉai * yāṉ kaṇṭatu * -aṇi nīrt tĕṉ araṅkatte-1

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1398. In Thennarangam surrounded by the beautiful ocean I saw the lord who is as strong as an elephant, a dark emerald that lies on Adisesha on the milky ocean. He, Thirumāl, my lord who is sweet to me always, taught the Vedās to the sages and protected the cows and the cowherds from the storm.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கைம் மான நீண்ட துதிக்கையுடைய; மழ இளம் பருவத்து; களிற்றை யானை போன்றவனும்; கடல் கிடந்த கடலிலே கண்வளரும்; கருமணியை நீலரத்னம் போன்றவனும்; மைம் மான கருத்த அதிசயிக்கத்தக்க; மரகதத்தை மரகதப் பச்சை போன்றவனும்; மறை வேதங்களாலே; உரைத்த சொல்லப்பட்ட; திருமாலை எம்மானை எம்பெருமானும்; எனக்கு என்றும் எனக்கு என்றும்; இனியானை இனியவனானவனும்; பனி மழையிலிருந்து; காத்த பசுக்களைக் காத்தவனுமான; அம்மானை பொருமானை; யான் கண்டது நான் பார்த்தது; அணி நீர் அழகிய தீர்த்தமுடைய; தென் அரங்கத்தே திருவரங்கத்திலே

PT 5.6.2

1399 பேரானைக் குறுங்குடியெம்பெருமானை * திருதண்கா
லூரானைக் கரம்பனூருத்தமனை * முத்திலங்கு
காரார்திண்கடலேழும் மலையேழிவ்வுலகேழுண்டும் *
ஆராதென்றிருந்தானைக் கண்டதுதென்னரங்கத்தே. (2)
1399 ## பேரானைக் * குறுங்குடி எம் பெருமானை * திருத்தண்கால்
ஊரானைக் * கரம்பனூர் உத்தமனை ** முத்து இலங்கு
கார் ஆர் திண் கடல் ஏழும் * மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டும் *
ஆராது என்று இருந்தானைக் * கண்டது தென் அரங்கத்தே 2
1399 ## perāṉaik * kuṟuṅkuṭi ĕm pĕrumāṉai * tiruttaṇkāl
ūrāṉaik * karampaṉūr uttamaṉai ** muttu ilaṅku
kār ār tiṇ kaṭal ezhum * malai ezh iv ulaku ezh uṇṭum *
ārātu ĕṉṟu iruntāṉaik * kaṇṭatu-tĕṉ araṅkatte-2

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1399. In Thennarangam I saw Thirumāl, the lord of Thirupper (Koiladi), Thirukkurungudi, Thiruthangā, and the good lord of Thirukkarampanur (Uttamar Koil) who was still hungry even after he swallowed the dark seven oceans, seven mountains and seven worlds.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேரானை திருப்பேர் நகரில் இருப்பவனை; குறுங்குடி திருக்குறுங்குடி; எம்பெருமானை எம்பெருமானை; திருதண்கால் திருதண்காவில்; ஊரானை இருப்பவனை; கரம்பனூர் திருக்கரம்பனூர்; உத்தமனை உத்தமனை; முத்து முத்துக்களின்; இலங்கு ஒளியோடு கூடின; கார் ஆர் திண் திடமான கறுத்த; கடல் ஏழும் ஏழு கடல்களையும்; மலை ஏழ் இவ் ஏழு மலைகளையும்; உலகு ஏழ் ஏழு உலகங்களயும்; உண்டும் உண்டும்; ஆராது திருப்திபெறாதவனாய்; என்று இருந்தானை இருந்த பெருமானை; கண்டது நான் கண்டது; தென் அரங்கத்தே திருவரங்கத்திலே

PT 5.6.3

1400 ஏனாகிஉலகிடந்து அன்றிருநிலனும்பெருவிசும்பும் *
தானாயபெருமானைத் தன்னடியார்மனத்துஎன்றும் *
தேனாகியமுதாகித்திகழ்ந்தானை * மகிழ்ந்துஒருகால்
ஆனாயனானைக் கண்டதுதென்னரங்கத்தே.
1400 ஏன் ஆகி உலகு இடந்து * அன்று இரு நிலனும் பெரு விசும்பும் *
தான் ஆய பெருமானை * தன் அடியார் மனத்து என்றும் **
தேன் ஆகி அமுது ஆகித் * திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால் *
ஆன் ஆயன் ஆனானைக் * கண்டது தென் அரங்கத்தே 3
1400 eṉ āki ulaku iṭantu * aṉṟu iru nilaṉum pĕru vicumpum *
tāṉ āya pĕrumāṉai * taṉ aṭiyār maṉattu ĕṉṟum **
teṉ āki amutu ākit * tikazhntāṉai makizhntu ŏrukāl *
āṉ-āyaṉ āṉāṉaik * kaṇṭatu-tĕṉ araṅkatte-3

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1400. In Thennarangam I saw the lord, a cowherd who took the form of a boar and split open the earth to bring the earth goddess from the underworld, who measured the earth and sky with his two feet and stays always like sweet honey and nectar in the hearts of his devotees.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முன்பொருசமயம்; ஏன் ஆகி வராஹமாக அவதரித்து; உலகு பூமியை அண்டபித்திலிருந்து; இடந்து குத்தி எடுத்து காத்தவனும்; இரு நிலனும் மண்ணுலகமும்; பெரு விசும்பும் பரந்த விண்ணுலகமும்; தான் ஆய தானாக உள்ள; பெருமானை பெருமானும்; தன் அடியார் தன் பக்தர்கள்; மனத்து என்றும் மனதில் என்றும்; தேன் ஆகி தேன் போலவும்; அமுது ஆகி அமிருதம் போலவும் இருக்கும்; திகழ்ந்தானை இனியவனுமான; ஒரு கால் எப்போதும்; மகிழ்ந்து மகிழ்ந்து; ஆன் ஆயன் பசுக்களை மேய்க்கும்; ஆனானைக் பெருமானை; கண்டது நான் கண்டது; தென் அரங்கத்தே திருவரங்கத்திலே

PT 5.6.4

1401 வளர்ந்தவனைத்தடங்கடலுள் வலியுருவில்திரிசகடம் *
தளர்ந்துதிரஉதைத்தவனைத் தரியாதுஅன்றுஇரணியனைப்
பிளந்தவனை * பெருநிலம்ஈரடிநீட்டிப் பண்டொருநாள்
அளந்தவனை * யான்கண்டது அணிநீர்த் தென்னரங்கத்தே.
1401 வளர்ந்தவனைத் தடங் கடலுள் * வலி உருவில் திரி சகடம் *
தளர்ந்து உதிர உதைத்தவனைத் * தரியாது அன்று இரணியனைப்
பிளந்தவனை ** பெரு நிலம் ஈர் அடி நீட்டிப் * பண்டு ஒருநாள்
அளந்தவனை * யான் கண்டது * அணி நீர்த் தென் அரங்கத்தே 4
1401 val̤arntavaṉait taṭaṅ kaṭalul̤ * vali uruvil tiri cakaṭam *
tal̤arntu utira utaittavaṉait * tariyātu aṉṟu iraṇiyaṉaip
pil̤antavaṉai ** pĕru nilam īr aṭi nīṭṭip * paṇṭu ŏrunāl̤
al̤antavaṉai * yāṉ kaṇṭatu * -aṇi nīrt tĕṉ araṅkatte-4

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1401. In Thennarangam surrounded by the beautiful ocean I saw the lord who rests on Adisesha on the large ocean, kicked the Asuran when he came as a cart and killed him, split open the chest of the Rākshasa Hiranyan, and measured the world with his two feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வளர்ந்தவனைத் விசாலமான; தடங் கடலுள் கடலில் வளர்ந்தவனை; வலி உருவில் திடமான சரீரத்தையுடைய; திரி சகடம் சகடாசுரனை; தளர்ந்து உதிர சிதிலமாகும்படி; உதைத்தவனை உதைத்தவனை; அன்று ஒருசமயம் பிரகலாதன் படும் துயரம்; தரியாது பொறுக்காமல்; இரணியனை இரணியனை; பிளந்தவனை பிளந்தவனை; பண்டு ஒரு நாள் முன்பொருசமயம்; பெரு நிலம் விசாலமான பூமியை; ஈர் அடி நீட்டி இரண்டு அடியில் நீட்டி; அளந்தவனை அளந்த திருவிக்கிரமனை; யான் கண்டது நான் கண்டது; அணி நீர் அழகிய தீர்த்தமுடைய; தென் அரங்கத்தே திருவரங்கத்திலே

PT 5.6.5

1402 நீரழலாய் நெடுநிலனாய்நின்றானை * அன்று அரக்க
னூர் அழலாலுண்டானைக் கண்டார்பின்காணாமே *
பேரழலாய்ப்பெருவிசும்பாய்ப் பின்மறையோர் மந்திரத்தின் *
ஆரழலால்உண்டானைக் கண்டதுதென்னரங்கத்தே.
1402 நீர் அழல் ஆய் * நெடு நிலன் ஆய் நின்றானை * அன்று அரக்கன்
ஊர் அழலால் உண்டானைக் * கண்டார் பின் காணாமே **
பேர் அழல் ஆய்ப் பெரு விசும்பு ஆய்ப் * பின் மறையோர் மந்திரத்தின் *
ஆர் அழலால் உண்டானைக் * கண்டது தென் அரங்கத்தே 5
1402 nīr azhal āy * nĕṭu nilaṉ āy niṉṟāṉai * aṉṟu arakkaṉ-
ūr azhalāl uṇṭāṉaik * kaṇṭār piṉ kāṇāme **
per azhal āyp pĕru vicumpu āyp * piṉ maṟaiyor mantirattiṉ *
ār azhalāl uṇṭāṉaik * kaṇṭatu-tĕṉ araṅkatte-5

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-24

Divya Desam

Simple Translation

1402. The lord who is the ocean, fire and the big earth, burned Lankā, the kingdom of the Rākshasas, and swallowed the sacrificial food that the Vediyars made for Indra, the king of the gods. I have not seen him in other places where his devotees saw him, I saw him only in Thennarangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீர் அழல் ஆய் நீர் ஆய் அக்னியாய்; நெடு நிலன் ஆய் விசாலமான பூமியாய்; நின்றானை நின்றவனை; அன்று அன்று ராமனாய் அவதரித்து; அரக்கன் ஊர் அரக்கன் ராவணனின் ஊரான; அழலால் இலங்கையை; உண்டானை தீக்கிரையாக்கினவனை; கண்டார் பின் முன்பு கண்டவர்கள் பின்பு; காணாமே காணமுடியாதபடி; பேர் அழலாய் பெரிய வடவாக்னியாய்; பெருவிசும்பாய் பரமபதத்தலைவனாய்; பின் மறையோர் வைதிகர்களுடைய; மந்திரத்தின் மந்திரபூர்வமான; ஆர் அழலால் ஹவிஸ்ஸை; உண்டானைக் ஏற்றுகொண்டவனை; கண்டது நான் கண்டது; தென் அரங்கத்தே திருவரங்கத்திலே

PT 5.6.6

1403 தஞ்சினத்தைத்தவிர்த்தடைந்தார் தவநெறியை * தரியாது
கஞ்சனைக்கொன்று அன்றுஉலகமுண்டுஉமிழ்ந்த கற்பகத்தை *
வெஞ்சினத்தகொடுந்தொழிலோன் விசையுருவை அசைவித்த *
அஞ்சிறைப்புட்பாகனை யான்கண்டதுதென்னரங்கத்தே.
1403 தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார் * தவ நெறியை தரியாது *
கஞ்சனைக் கொன்று * அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை **
வெம் சினத்த கொடுந் தொழிலோன் * விசை உருவை அசைவித்த *
அம் சிறைப் புள் பாகனை * யான் கண்டது தென் அரங்கத்தே 6
1403 tam ciṉattait tavirttu aṭaintār * tava nĕṟiyai tariyātu *
kañcaṉaik kŏṉṟu * aṉṟu ulakam uṇṭu umizhnta kaṟpakattai **
vĕm ciṉatta kŏṭun tŏzhiloṉ * vicai uruvai acaivitta *
am ciṟaip pul̤ pākaṉai * yāṉ kaṇṭatu-tĕṉ araṅkatte-6

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-1

Divya Desam

Simple Translation

1403. He killed Kamsan and he swallowed the earth and spit it out. When angry Shivā came with his son Karthikeya and his escort to help Vānāsuran in the battle the lord riding on his lovely-winged eagle fought with them and made them all retreat from the battlefield. He is the Karpaga tree that gives whatever anyone wants, and the path of tapas for those who have controlled their anger. I saw him in Thennarangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தம் சினத்தைத் தங்களுடைய; தவிர்த்து கோபத்தை விட்டு; அடைந்தார் தன்னை பற்றினவர்களுக்கு; தவ உபாய; நெறியை மார்க்கமாயிருப்பவனும்; தரியாது கம்சனின் கொடுமைகளை பொறுக்காமல்; கஞ்சனைக்கொன்று அவனை கொன்றவனும்; அன்று அன்று; உலகம் உண்டு உலகம் உண்டு பின்பு; உமிழ்ந்த ஸ்ருஷ்டித்த; கற்பகத்தை பெருமானை; வெம் சினத்த கடும் கோபத்தினால்; கொடும் செய்யும் கொடிய; தொழிலோன் ஸம்ஹாரத்தையுடைய ருத்ரனின்; விசை மிக்க வேகத்தோடு கூடின; உருவை நரகாசுரனின் சரீரத்தை; அசைவித்த சலிக்கச் செய்தவனும்; அம் சிறைப் அழகிய சிறகுகளயுடைய; புள் கருடனின்; பாகனை பாகனை; யான் கண்டது நான் கண்டது; தென் அரங்கத்தே திருவரங்கத்திலே

PT 5.6.7

1404 சிந்தனையைத்தவநெறியைத் திருமாலை * பிரியாது
வந்துஎனதுமனத்துஇருந்த வடமலையை * வரிவண்டார்
கொந்தணைந்தபொழில்கோவல் உலகளப்பான் அடிநிமிர்த்த
அந்தணனை * யான்கண்டது அணிநீர்த்தென்னரங்கத்தே. (2)
1404 ## சிந்தனையைத் தவநெறியைத் * திருமாலை * பிரியாது
வந்து எனது மனத்து இருந்த * வடமலையை ** வரி வண்டு ஆர்
கொந்து அணைந்த பொழில் கோவல் * உலகு அளப்பான் அடி நிமிர்த்த
அந்தணனை * யான் கண்டது * அணி நீர்த் தென் அரங்கத்தே 7
1404 ## cintaṉaiyait tavanĕṟiyait * tirumālai * piriyātu
vantu ĕṉatu maṉattu irunta * vaṭamalaiyai ** vari vaṇṭu ār
kŏntu aṇainta pŏzhil koval * ulaku al̤appāṉ aṭi nimirtta
antaṇaṉai * yāṉ kaṇṭatu * -aṇi nīrt tĕṉ araṅkatte-7

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1404. Devotees think only of Thirumāl who is the path of tapas always and he has come to me and abides in my mind. The lord who measured the world and the sky with his two feet stays in the Thiruvenkatam hills and in Thirukkovalur surrounded by groves blooming with bunches of flowers. He is faultless and I saw him in Thennarangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிந்தனையை சிந்தனைக்கு; தவனெறியை உபாயமாய்; திருமாலை ப்ராபகமான எம்பெருமானை; வடமலையை திருவேங்கட மலையிலிருந்து; வந்து எனது வந்து என்; மனத்து மனதில் ஒரு நொடியும்; பிரியாது பிரியாது; இருந்த இருந்தவனை; வரி அழகிய வரிகளையுடைய; வண்டு ஆர் வண்டுகள் நிறைந்த; கொந்து பூங்கொத்துக்கள்; அணைந்த நெருங்கியிருக்கும்; பொழில் சோலைகளையுடைய; கோவல் திருக்கோவலூரில்; உலகுஅளப்பான் உலகங்களை; அடி நிமிர்த்த அளக்க காலை நீட்டின; அந்தணனை பெருமானை; யான் கண்டது நான் கண்டது; அணி நீர் அழகிய தீர்த்தமுடைய; தென் அரங்கத்தே திருவரங்கத்திலே

PT 5.6.8

1405 துவரித்தஉடையார்க்கும் தூய்மையில்லாச்சமணர்க்கும் *
அவர்கட்குஅங்குஅருளில்லா அருளானை * தன்னடைந்த
எமர்கட்கும்அடியேற்கும் எம்மாற்கும்எம்மனைக்கும் *
அமரர்க்கும்பிரானாரைக் கண்டதுதென்னரங்கத்தே.
1405 துவரித்த உடையவர்க்கும் * தூய்மை இல்லாச் சமணர்க்கும் *
அவர்கட்கு அங்கு அருள் இல்லா * அருளானை ** தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும் * எம்மாற்கும் எம் அனைக்கும் *
அமரர்க்கும் பிரானாரைக் * கண்டது தென் அரங்கத்தே 8
1405 tuvaritta uṭaiyavarkkum * tūymai illāc camaṇarkkum *
avarkaṭku aṅku arul̤ illā * arul̤āṉai ** taṉ aṭainta
ĕmarkaṭkum aṭiyeṟkum * ĕmmāṟkum ĕm aṉaikkum *
amararkkum pirāṉāraik * kaṇṭatu-tĕṉ araṅkatte-8

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1405. I saw the highest lord in Thennarangam who does not give his grace to Buddhists with their orange clothes or to dirty Jains and only gives his grace to the devotees who approach him, my relatives, me, my father, my mother and the gods in the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துவரித்த காவித்துணி; உடையார்க்கும் அணிந்த புத்தர்க்கும்; தூய்மை இல்லாச் தூய்மை இல்லாச்; சமணர்க்கும் சமணர்க்கும்; அவர்கட்கு அவர்களுக்கு; அங்கு அருள் இல்லா அருள் செய்யாத; அருளானை கிருபாவானும்; தன் அடைந்த தன்னையடைந்த; எமர்கட்கும் என்னைச் சேர்ந்தவர்க்கும்; அடியேற்கும் எனக்கும்; எம்மாற்கும் என் தந்தைக்கும்; எம் அனைக்கும் என் தாய்க்கும்; அமரர்க்கும் நித்யசூரிகளுக்கும்; பிரானாரை பெருமானாய் இருப்பவனை; கண்டது நான் கண்டது; தென் அரங்கத்தே திருவரங்கத்திலே

PT 5.6.9

1406 பொய்வண்ணம்மனத்தகற்றிப் புலனைந்தும்செலவைத்து *
மெய்வண்ணம்நினைந்தவர்க்கு மெய்ந்நின்றவித்தகனை *
மைவண்ணம்கருமுகில்போல் திகழ்வண்ணமரதகத்தின் *
அவ்வண்ணவண்ணனை யான்கண்டதுதென்னரங்கத்தே.
1406 பொய் வண்ணம் மனத்து அகற்றிப் * புலன் ஐந்தும் செல வைத்து *
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு * மெய்ந் நின்ற வித்தகனை **
மை வண்ணம் கரு முகில்போல் * திகழ் வண்ணம் மரதகத்தின் *
அவ் வண்ண வண்ணனை * யான் கண்டது தென் அரங்கத்தே 9
1406 pŏy vaṇṇam maṉattu akaṟṟip * pulaṉ aintum cĕla vaittu *
mĕy vaṇṇam niṉaintavarkku * mĕyn niṉṟa vittakaṉai **
mai vaṇṇam karu mukilpol * tikazh vaṇṇam maratakattiṉ *
av vaṇṇa vaṇṇaṉai * yāṉ kaṇṭatu-tĕṉ araṅkatte-9

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1406. I saw the dark cloud-colored lord of Thennarangam, a shining emerald, who has removed my false thoughts and makes me control my mind. If people think of his true form, the clever lord is truth for them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொய் வண்ணம் அநித்ய பொருள்களிலிருந்து; மனத்து அகற்றி மனதை விலக்கி; புலன் ஐந்தும் ஐம்புலன்களையும்; செல வைத்து அடக்கி; மெய் வண்ணம் உண்மையாக; நினைந்தவர்க்கு நினைந்தவர்க்கு; மெய்ந் நின்ற தன்னைக் காட்டும்; வித்தகனை வித்தகனை; மை வண்ணம் மையைப் போலவும்; கரு முகில் போல் கறுத்த மேகம் போலவும்; திகழ் இருக்கும்; வண்ணம் நிறத்தையுடையவனும்; மரகதத்தின் மரதகப் பச்சை; அவ் வண்ண வண்ணம் போன்ற; வண்ணனை வண்ணம் உடையவனை; யான் கண்டது நான் கண்டது; தென் அரங்கத்தே திருவரங்கத்திலே

PT 5.6.10

1407 ஆமருவிநிரைமேய்த்த அணியரங்கத்தம்மானை *
காமருசீர்க்கலிகன்றி ஒலிசெய்தமலிபுகழ்சேர் *
நாமருவுதமிழ்மாலை நாலிரண்டோடிரண்டினையும் *
தாமருவிவல்லார்மேல் சாரா தீவினைதானே. (2)
1407 ## ஆ மருவி நிரை மேய்த்த * அணி அரங்கத்து அம்மானை *
காமரு சீர்க் கலிகன்றி * ஒலிசெய்த மலி புகழ் சேர் **
நா மருவு தமிழ் மாலை * நால் இரண்டோடு இரண்டினையும் *
தாம் மருவி வல்லார்மேல் * சாரா தீவினை தானே 10
1407 ## ā maruvi nirai meytta * aṇi araṅkattu ammāṉai *
kāmaru cīrk kalikaṉṟi * ŏlicĕyta mali pukazh cer **
nā maruvu tamizh-mālai * nāl iraṇṭoṭu iraṇṭiṉaiyum *
tām maruvi vallārmel * cārā tīviṉai tāṉe -10

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1407. Kaliyan the famous poet composed ten musical Tamil pāsurams praising the god of beautiful Thennarangam who lovingly grazed cows. If devotees learn and recite these ten famous pāsurams well the results of their bad karmā will not come to them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆ நிரை பசுக்கூட்டங்களை; மருவி மேய்த்த விரும்பி மேய்த்த; அணியரங்கத்து திருவரங்கத்தில்; அம்மானை இருக்கும் பெருமானைக் குறித்து; காமரு சீர் சீர்மையையுடைய; கலிகன்றி திருமங்கையாழ்வார்; ஒலி செய்த அருளிச் செய்த; மலி புகழ் சேர் மிகுந்த புகழை உடைய; நா மருவு நாவுக்கினிய; தமிழ் மாலை தமிழ் மாலையான; நால் இரண்டோடு இப்பத்து; இரண்டினையும் பாசுரங்களையும்; தாம் மருவி தாமே விரும்பி; வல்லார்மேல் கற்குமவர்களிடத்து; தீவினை தானே பாவங்கள் தானே; சாரா அணுகாவே