Chapter 7

Thiruvarangam 4 - (பண்டை நான்மறையும்)

திருவரங்கம் 4
Thiruvarangam 4 - (பண்டை நான்மறையும்)
These verses also speak of the glories of Lord Ranganatha.
ஈண்டுள்ள பாசுரங்களும் திருவரங்கனின் பெருமைகளைக் கூறுகின்றன.
Verses: 1408 to 1417
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will not get affected by the results of bad karma
  • PT 5.7.1
    1408 ## பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் *
    பதங்களும் பதங்களின் பொருளும் *
    பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் *
    பெருகிய புனலொடு நிலனும் **
    கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் *
    ஏழு மா மலைகளும் விசும்பும் *
    அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான் *
    அரங்க மா நகர் அமர்ந்தானே 1
  • PT 5.7.2
    1409 இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் *
    எண் இல் பல் குணங்களே இயற்ற *
    தந்தையும் தாயும் மக்களும் மிக்க
    சுற்றமும் * சுற்றி நின்று அகலாப்
    பந்தமும் ** பந்தம் அறுப்பது ஓர் மருந்தும்
    பான்மையும் * பல் உயிர்க்கு எல்லாம் *
    அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான் *
    அரங்க மா நகர் அமர்ந்தானே 2
  • PT 5.7.3
    1410 மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் *
    வானமும் தானவர் உலகும் *
    துன்னு மா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கித் *
    தொல்லை நான்மறைகளும் மறைய **
    பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் *
    பிறங்கு இருள் நிறம் கெட * ஒருநாள்
    அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான் *
    அரங்க மா நகர் அமர்ந்தானே 3
  • PT 5.7.4
    1411 மா இருங் குன்றம் ஒன்று மத்து ஆக *
    மாசுணம் அதனொடும் அளவி *
    பா இரும் பௌவம் பகடு விண்டு அலறப் *
    படு திரை விசும்பிடைப் படர **
    சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும் *
    தேவரும் தாம் உடன் திசைப்ப *
    ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் *
    அரங்க மா நகர் அமர்ந்தானே 4
  • PT 5.7.5
    1412 எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்? *
    இரணியன் இலங்கு பூண் அகலம் *
    பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து *
    பொழிதரும் அருவி ஒத்து இழிய **
    வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் *
    விண் உறக் கனல் விழித்து எழுந்தது *
    அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான் *
    அரங்க மா நகர் அமர்ந்தானே 5
  • PT 5.7.6
    1413 ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய *
    அடல் புரை எழில் திகழ் திரள் தோள் *
    ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி *
    மற்று அவன் அகல் விசும்பு அணைய **
    ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச *
    அறிதுயில் அலை கடல் நடுவே *
    ஆயிரம் சுடர் வாய் அரவு அணைத் துயின்றான் *
    அரங்க மா நகர் அமர்ந்தானே 6
  • PT 5.7.7
    1414 சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த *
    கொடுமையின் கடு விசை அரக்கன் *
    எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து *
    இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி *
    வரி சிலை வளைய அடு சரம் துரந்து *
    மறி கடல் நெறிபட * மலையால்
    அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான் *
    அரங்க மா நகர் அமர்ந்தானே 7
  • PT 5.7.8
    1415 ஊழி ஆய் ஓமத்து உச்சி ஆய் * ஒருகால்
    உடைய தேர் ஒருவன் ஆய் * உலகில்
    சூழி மால் யானைத் துயர் கெடுத்து * இலங்கை
    மலங்க அன்று அடு சரம் துரந்து **
    பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் *
    பகலவன் ஒளி கெட * பகலே
    ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் *
    அரங்க மா நகர் அமர்ந்தானே 8
  • PT 5.7.9
    1416 பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய் * ஒருகால்
    பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த
    வாயன் ஆய் * மால் ஆய் ஆல் இலை வளர்ந்து
    மணி முடி வானவர் தமக்குச்
    சேயன் ஆய் ** அடியேர்க்கு அணியன் ஆய் வந்து * என்
    சிந்தையுள் வெம் துயர் அறுக்கும் *
    ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான் *
    அரங்க மா நகர் அமர்ந்தானே 9
  • PT 5.7.10
    1417 ## பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து *
    பொரு திரை மா நதி புடை சூழ்ந்து *
    அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த *
    அரங்க மா நகர் அமர்ந்தானை *
    மன்னு மா மாட மங்கையர் தலைவன் *
    மான வேல் கலியன் வாய் ஒலிகள் *
    பன்னிய பனுவல் பாடுவார் * நாளும்
    பழவினை பற்று அறுப்பாரே 10