Chapter 6

Thennarangam 3 - (கைம் மான)

திருவரங்கம் 3
Thennarangam 3 - (கைம் மான)

The āzhvār elaborates on all the glories of Thiruvarangan (Lord Ranganatha).


As so beautifully articulated in the periya thirumozhi (5.5.8), “maRavādhē eppozhudhum māyavanē! mādhavanē! enginrāLāl” (Without ever forgetting, she continuously exclaims, “Oh wondrous Lord! Oh beloved consort of Sri Mahālakṣmī!”), Thirumangai Āzhvār, steeped in

+ Read more

திருவரங்கனின் பெருமைகளையெல்லாம் ஈண்டு விளக்குகிறார் ஆழ்வார்.

Verses: 1398 to 1407
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Recital benefits: Will not get affected by the results of bad karma
  • PT 5.6.1
    1398 ## கைம் மான மழ களிற்றைக் * கடல் கிடந்த கருமணியை *
    மைம் மான மரதகத்தை * மறை உரைத்த திருமாலை **
    எம்மானை எனக்கு என்றும் இனியானைப் * பனி காத்த
    அம்மானை * யான் கண்டது * அணி நீர்த் தென் அரங்கத்தே 1
  • PT 5.6.2
    1399 ## பேரானைக் * குறுங்குடி எம் பெருமானை * திருத்தண்கால்
    ஊரானைக் * கரம்பனூர் உத்தமனை ** முத்து இலங்கு
    கார் ஆர் திண் கடல் ஏழும் * மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டும் *
    ஆராது என்று இருந்தானைக் * கண்டது தென் அரங்கத்தே 2
  • PT 5.6.3
    1400 ஏன் ஆகி உலகு இடந்து * அன்று இரு நிலனும் பெரு விசும்பும் *
    தான் ஆய பெருமானை * தன் அடியார் மனத்து என்றும் **
    தேன் ஆகி அமுது ஆகித் * திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால் *
    ஆன் ஆயன் ஆனானைக் * கண்டது தென் அரங்கத்தே 3
  • PT 5.6.4
    1401 வளர்ந்தவனைத் தடங் கடலுள் * வலி உருவில் திரி சகடம் *
    தளர்ந்து உதிர உதைத்தவனைத் * தரியாது அன்று இரணியனைப்
    பிளந்தவனை ** பெரு நிலம் ஈர் அடி நீட்டிப் * பண்டு ஒருநாள்
    அளந்தவனை * யான் கண்டது * அணி நீர்த் தென் அரங்கத்தே 4
  • PT 5.6.5
    1402 நீர் அழல் ஆய் * நெடு நிலன் ஆய் நின்றானை * அன்று அரக்கன்
    ஊர் அழலால் உண்டானைக் * கண்டார் பின் காணாமே **
    பேர் அழல் ஆய்ப் பெரு விசும்பு ஆய்ப் * பின் மறையோர் மந்திரத்தின் *
    ஆர் அழலால் உண்டானைக் * கண்டது தென் அரங்கத்தே 5
  • PT 5.6.6
    1403 தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார் * தவ நெறியை தரியாது *
    கஞ்சனைக் கொன்று * அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை **
    வெம் சினத்த கொடுந் தொழிலோன் * விசை உருவை அசைவித்த *
    அம் சிறைப் புள் பாகனை * யான் கண்டது தென் அரங்கத்தே 6
  • PT 5.6.7
    1404 ## சிந்தனையைத் தவநெறியைத் * திருமாலை * பிரியாது
    வந்து எனது மனத்து இருந்த * வடமலையை ** வரி வண்டு ஆர்
    கொந்து அணைந்த பொழில் கோவல் * உலகு அளப்பான் அடி நிமிர்த்த
    அந்தணனை * யான் கண்டது * அணி நீர்த் தென் அரங்கத்தே 7
  • PT 5.6.8
    1405 துவரித்த உடையவர்க்கும் * தூய்மை இல்லாச் சமணர்க்கும் *
    அவர்கட்கு அங்கு அருள் இல்லா * அருளானை ** தன் அடைந்த
    எமர்கட்கும் அடியேற்கும் * எம்மாற்கும் எம் அனைக்கும் *
    அமரர்க்கும் பிரானாரைக் * கண்டது தென் அரங்கத்தே 8
  • PT 5.6.9
    1406 பொய் வண்ணம் மனத்து அகற்றிப் * புலன் ஐந்தும் செல வைத்து *
    மெய் வண்ணம் நினைந்தவர்க்கு * மெய்ந் நின்ற வித்தகனை **
    மை வண்ணம் கரு முகில்போல் * திகழ் வண்ணம் மரதகத்தின் *
    அவ் வண்ண வண்ணனை * யான் கண்டது தென் அரங்கத்தே 9
  • PT 5.6.10
    1407 ## ஆ மருவி நிரை மேய்த்த * அணி அரங்கத்து அம்மானை *
    காமரு சீர்க் கலிகன்றி * ஒலிசெய்த மலி புகழ் சேர் **
    நா மருவு தமிழ் மாலை * நால் இரண்டோடு இரண்டினையும் *
    தாம் மருவி வல்லார்மேல் * சாரா தீவினை தானே 10