Chapter 10

Lord Rama of Thillai Chitrakudam - (அங்கண் நெடு)

தில்லைச் சித்திரகூடம். இராம சரிதம்
Lord Rama of Thillai Chitrakudam - (அங்கண் நெடு)

Sage Valmiki elaborately narrated and experienced the story of Rama in the Ramayana. This āzhvār condenses and recounts the Ramayana, experiencing and relishing its essence in his verses.


pravēśam (Introduction)

In the seventh chapter of his divine composition, beginning with the pāśuram Ālai nīḷ karumbu, Kulasekhara Āzhvār gives

+ Read more

வால்மீகி முனிவர் இராமயணத்தில் இராம சரித்திரத்தைப் பரக்கக் கூறி அனுபவித்தார். இவ்வாழ்வார் இராமாயணத்தை ஈண்டுச் சுருக்கிக் கூறி அனுபவிக்கிறார்.

Verses: 741 to 751
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will approach the feet of Nāranan who shines with goodness
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PMT 10.1

741 அங்கணெடுமதிள்புடைசூழயோத்தியென்னும்
அணிநகரத்துலகனைத்தும்விளக்கும்சோதி *
வெங்கதிரோன்குலத்துக்கோர்விளக்காய்த்தோன்றி
விண்முழுதுமுயக்கொண்டவீரன் தன்னை *
செங்கணெடுங்கருமுகிலையிராமன் தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
எங்கள்தனிமுதல்வனையெம்பெருமான்தன்னை
என்றுகொலோ? கண்குளிரக்காணும்நாளே. (2)
741 ## அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி என்னும் *
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி *
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி *
விண் முழுதும் உயக் கொண்ட வீரன் தன்னை **
செங்கண் நெடுங்கரு முகிலை இராமன் தன்னைத் *
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை *
என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே (1)
741 ## aṅkaṇ nĕṭu matil̤ puṭai cūzh ayotti ĕṉṉum *
aṇi nakarattu ulaku aṉaittum vil̤akkum coti *
vĕṅkatiroṉ kulattukku or vil̤akkāyt toṉṟi *
viṇ muzhutum uyak kŏṇṭa vīraṉ taṉṉai **
cĕṅkaṇ nĕṭuṅkaru mukilai irāmaṉ taṉṉait *
tillai nakart tiruccitrakūṭan taṉṉul̤ *
ĕṅkal̤ taṉi mutalvaṉai ĕmpĕrumāṉ taṉṉai *
ĕṉṟu kŏlo kaṇ kul̤irak kāṇum nāl̤e (1)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

741. Rāma, tall, with beautiful eyes, colored like a dark cloud, our dear king, our lord, the light that illuminates the whole world, stays in beautiful Ayodhya surrounded by high walls. Born in the dynasty of the sun, he brightens that royal line, and he conquered the whole sky and is the god of Thiruchitrakudam in Thillai. When will the day come when I see him joyfully with my eyes?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
அங்கண் அழகிய இடத்தில்; நெடு மதிள் புடை சூழ் உயர்ந்த மதில்கள் சூழ்ந்த; அயோத்தி என்னும் அயோத்யா என்னும்; அணி நகரத்து அழகிய நகரத்திலே; உலகு அனைத்தும் எல்லா உலகங்களையும்; விளக்கும் விளங்கச் செய்யும்; சோதி பரஞ்சோதியான நாராயணன்; வெங் கதிரோன் குலத்துக்கு சூரிய வம்சத்துக்கு; ஓர் விளக்காய் ஒப்பற்றதொரு விளக்காக; தோன்றி அவதரித்தவனை; விண்முழுதும் விண்ணவரெல்லோரையும்; உயக்கொண்ட உய்ந்திடச்செய்த; வீரன் தன்னை வீரனை; செங்கண் சிவந்த கண்களையுடைய; நெடுங் கரு முகிலை பெரிய காளமேகம் போன்ற; இராமன் தன்னை இராமனை; தில்லை நகர் தில்லை நகரத்திலுள்ள; திருச்சித்ரகூடந் தன்னுள் திருச்சித்திர கூடத்தில்; எங்கள் தனி எமக்கு ஒப்பில்லாத; முதல்வனை தலைவனை; எம் பெருமான் தன்னை எங்கள் பரமனை; கண்குளிரக் கண் குளிரும்படி; காணும் நாளே தரிசிக்கும் நாள்; என்று கொலோ! என்று வருமோ!
aṅkaṇ In the beautiful place; ayotti ĕṉṉum called Ayodhya; nĕṭu matil̤ puṭai cūḻ with lofty walls surounds that; aṇi nakarattu the beautiful city; coti Śrīman Nārāyaṇa, the supreme light,; ulaku aṉaittum that make all the worlds; vil̤akkum shine; or vil̤akkāy as an incomparable lamp; toṉṟi incarnated; vĕṅ katiroṉ kulattukku in the Solar (Surya) dynasty; uyakkŏṇṭa to uplift; viṇmuḻutum the celestial beings; vīraṉ taṉṉai the valiant One; cĕṅkaṇ with beautiful eyes; nĕṭuṅ karu mukilai like a dark rain cloud; irāmaṉ taṉṉai as Rama; mutalvaṉai the Leader; ĕm pĕrumāṉ taṉṉai the God; ĕṅkal̤ taṉi for us, He is matchless; tillai nakar at Thilllai; tiruccitrakūṭan taṉṉul̤ in Thiru Chitrakootam; ĕṉṟu kŏlo! when will that day come!; kāṇum nāl̤e for me to see Him; kaṇkul̤irak which is a pleasure to my eyes

PMT 10.2

742 வந்தெதிர்ந்ததாடகைதன்உரத்தைக்கீறி
வருகுருதிபொழிதரவன்கணையொன்றேவி *
மந்திரங்கொள்மறைமுனிவன்வேள்விகாத்து
வல்லரக்கருயிருண்டமைந்தன்காண்மின் *
செந்தளிர்வாய்மலர்நகைசேர்செழுந்தண்சோலைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
அந்தணர்களொருமூவாயிரவரேத்த
அணிமணியாசனத்திருந்தவம்மான்றானே.
742 வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி *
வரு குருதி பொழி தர வன்கணை ஒன்று ஏவி *
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து *
வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின் **
செந்தளிர்வாய் மலர் நகை சேர் செழுந்தண் சோலைத் *
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த *
அணிமணி ஆசனத்து இருந்த அம்மான் தானே (2)
742 vantu ĕtirnta tāṭakai taṉ urattaik kīṟi *
varu kuruti pŏzhi tara vaṉkaṇai ŏṉṟu evi *
mantiram kŏl̤ maṟai muṉivaṉ vel̤vi kāttu *
vallarakkar uyir uṇṭa maintaṉ kāṇmiṉ **
cĕntal̤irvāy malar nakai cer cĕzhuntaṇ colait *
tillai nakart tiruccitrakūṭan taṉṉul̤ *
antaṇarkal̤ ŏru mūvāyiravar etta *
aṇimaṇi-ācaṉattu irunta ammāṉ tāṉe (2)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

742. He saved the sacrifice of the rishi Vishwamithra, learned in all the mantras and the Vedās shot a strong arrow and split open the chest of Thadagai when she came to fight him, making her blood flow out, and he killed all the strong Rakshasās. See, our dear god stays in the Thiruchitrakudam in Thillai, surrounded with cool flourishing groves blooming with flowers with green tender leaves, as he sits on a throne studded with diamonds, praised by three thousand Andanars.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
வந்து எதிர்ந்த எதிர்த்து வந்த; தாடகை தன் தாடகையின்; உரத்தைக் கீறி மார்பைப் பிளந்து; வரு குருதி பொழிதர ரத்தம் வெளிவந்து சொரியம்படி; வன்கணை ஒன்று ஏவி வலிய அம்பு ஒன்றை செலுத்தி; மந்திரம் கொள் மந்திரங்கள் தெரிந்த; மறை வேதங்களை அறிந்த; முனிவன் முனிவனின் விஸ்வாமித்ரன்; வேள்வி காத்து யாகத்தைப் பாதுகாத்து; வல்லரக்கர் வலிய அரக்கர்களுடைய; உயிர் உண்ட உயிரைக் கவர்ந்த; மைந்தன் மைந்தனை பெருமானை; செந்தளிர்வாய் சிவந்த தளிர்களின் நடுவே; மலர் நகை சேர் மலர்போன்ற அழகு சேர்ந்த; செழுந்தண் செழுமையான குளிர்ந்த; சோலை சோலைகளையுடைய; தில்லை நகர் தில்லை நகர்; திருச்சித்ரகூடந் தன்னுள திருச்சித்ர கூடத்தில்; அந்தணர்கள் அந்தணர்கள்; ஒரு மூவாயிரவர் ஏத்த மூவாயிரம் பேர் துதிக்க; அணிமணி அழகிய ரத்தினங்களாலான; ஆசனத்து இருந்த சிம்மாசனத்தில் வீற்றிருந்த; அம்மான் தானே பெருமானை; காண்மின் அறியுங்கள்
vel̤vi kāttu He protected the sacrifice of; muṉivaṉ the sage Vishwamitra; maṟai who is well versed in vedas; mantiram kŏl̤ and knew sacred chants; vaṉkaṇai ŏṉṟu evi who by shooting a powerful arrow; urattaik kīṟi opened the chest of; tāṭakai taṉ Tadaka; vantu ĕtirnta who came to oppose; varu kuruti pŏḻitara resulting in gushing out of blood; maintaṉ that valiant Lord; uyir uṇṭa destroys the lives; vallarakkar of fierce demons; kāṇmiṉ know that; antaṇarkal̤ three thousand brahmins; ŏru mūvāyiravar etta sing praises; ammāṉ tāṉe of the Lord; ācaṉattu irunta who is seated on the throne; aṇimaṇi adorned with beautiful gems; tillai nakar at Thilllai; tiruccitrakūṭan taṉṉul̤a in Thiru Chitrakootam; colai that has lust groves; cĕntal̤irvāy amidst red tender shoots; malar nakai cer blooming with flowers; cĕḻuntaṇ that are cool and rich

PMT 10.3

743 செவ்வரிநற்கருநெடுங்கண்சீதைக்காகிச்
சினவிடையோன்சிலையிறுத்து மழுவாளேந்தி *
வெவ்வரிநற்சிலைவாங்கிவென்றிகொண்டு
வேல்வேந்தர்பகைதடிந்தவீரன்தன்னை *
தெவ்வரஞ்சநெடும்புரிசையுயர்ந்தபாங்கர்த்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
எவ்வரிவெஞ்சிலைத் தடக்கையிராமன்தன்னை
இறைஞ்சுவாரிணையடியேயிறைஞ்சினேனே.
743 செவ்வரி நற்கரு நெடுங்கண் சீதைக்கு ஆகிச் *
சினவிடையோன் சிலை இறுத்து மழுவாள் ஏந்தி *
வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றி கொண்டு *
வேல்வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை **
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை உயர்ந்த பாங்கர்த் *
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை *
இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே. (3)
743 cĕvvari naṟkaru nĕṭuṅkaṇ cītaikku ākic *
ciṉaviṭaiyoṉ cilai iṟuttu mazhuvāl̤ enti *
vĕvvari naṟcilai vāṅki vĕṉṟi kŏṇṭu *
velventar pakai taṭinta vīraṉ taṉṉai **
tĕvvar añcu nĕṭum puricai uyarnta pāṅkart *
tillai nakart tiruccitrakūṭan taṉṉul̤ *
ĕvvari vĕñcilait taṭakkai irāmaṉ taṉṉai *
iṟaiñcuvār iṇaiyaṭiye iṟaiñciṉeṉe. (3)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

743. To marry Sita whose long dark lovely eyes were lined with red, the heroic Rāma who conquered kings with sharp spears, broke the bow of Shivā, the angry bull rider carrying a mazhu weapon. He stays in divine Thiruchitrakudam in Thillai surrounded by tall walls. I worship the feet of the worshipers of Rāma whose cruel bow conquers his mighty enemies.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
செவ்வரி நற் சிவந்த ரேகை படர்ந்த அழகிய; கருநெடும் கருமையான நீண்ட; கண் கண்களை உடைய; சீதைக்கு ஆகி சீதையை மணம் புரிந்திட; சின கோபத்தையுடைய; விடையோன் ரிஷபவாகனபிரானின்; சிலை இறுத்து வில்லை முறித்து; மழுவாள் ஏந்தி கோடரியை ஏந்திய பரசுராமனுடைய; வெவ்வரி நற் அச்சமூட்டும் சிறந்த; சிலை வாங்கி வில்லை வாங்கி; வென்றி கொண்டு வென்றுவிட்டு; வேல் வேந்தர் வேல் ஏந்திய வேந்தர்; பகை தடிந்த பகையைத் தீர்த்த; வீரன் தன்னை வீரனை; தெவ்வர் அஞ்சு எதிரிகள் அஞ்சும்படியான; நெடும் புரிசை உயர்ந்த மதில்களையும்; உயர்ந்த திடமான; பாங்கர் பண்ணைகளையுமுடைய; தில்லை நகர் தில்லை நகர்; திருச்சித்ரகூடந் தன்னுள் திருச்சித்ரகூடத்தில்; எவ்வரி வெஞ் சிலைத் அச்சப்படுத்தும் வில்லை; தடக்கை விசாலமான கையில் வைத்துள்ள; இராமன் தன்னை இராமபிரானை; இறைஞ்சுவார் வணங்குகிறவர்களுடைய; இணையடியே அடிகளை; இறைஞ்சினேனே வணங்கினேன்
cilai iṟuttu You broke the bow; viṭaiyoṉ of the Lord who rides the bull (Shiva); cītaikku āki to marry Sita; kaṇ who had eyes; karunĕṭum that were long and dark; cĕvvari naṟ with beautifully spread red lines; vĕṉṟi kŏṇṭu You came victorious; pakai taṭinta by destroying enemies; vel ventar like kings who weild the spear; ciṉa and who posses great anger; vĕvvari naṟ with the fearsome and great; cilai vāṅki bow received from; maḻuvāl̤ enti Parasurama, who wielded the axe; iṟaiñciṉeṉe I bow to; iṇaiyaṭiye their feet; iṟaiñcuvār those who worship; irāmaṉ taṉṉai Lord Rama; taṭakkai who holds in his long hands; ĕvvari vĕñ cilait the fearful bow; vīraṉ taṉṉai the brave One; tĕvvar añcu whom even enemies fear; tiruccitrakūṭan taṉṉul̤ staying in Thiru Chitrakootam; tillai nakar at Thilllai; nĕṭum puricai where exists tall walls; uyarnta and firm; pāṅkar estates

PMT 10.4

744 தொத்தலர்பூஞ்சுரிகுழல்கைகேசிசொல்லால் *
தொன்னகரந்துறந்து * துறைக்கங்கைதன்னை
பத்தியுடைக்குகன்கடத்தவனம்போய்ப்புக்குப்
பரதனுக்குபாதுகமுமரசுமீந்து *
சித்திரகூடத்திருந்தான்றன்னை இன்று *
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
எத்தனையும்கண்குளிரக்காணப்பெற்ற
இருநிலத்தார்க்கு இமையவர்நேரொவ்வார்தாமே.
744 தொத்து அலர் பூஞ் சுரிகுழல் கைகேசி சொல்லால் *
தொல் நகரம் துறந்து துறைக் கங்கை தன்னை *
பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்குப் *
பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து **
சித்திரகூடத்து இருந்தான் தன்னை *
இன்று தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற *
இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே (4)
744 tŏttu alar pūñ curikuzhal kaikeci cŏllāl *
tŏl nakaram tuṟantu tuṟaik kaṅkai taṉṉai *
patti uṭaik kukaṉ kaṭatta vaṉam poyp pukkup *
parataṉukkup pātukamum aracum īntu **
cittirakūṭattu iruntāṉ taṉṉai *
iṉṟu tillai nakart tiruccitrakūṭan taṉṉul̤ *
ĕttaṉaiyum kaṇkul̤irak kāṇap pĕṟṟa *
irunilattārkku imaiyavar ner ŏvvār tāme (4)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

744. As Rāma he left his kingdom, obeying the words of Kaikeyi whose curly hair was decorated with bunches of fresh flowers, went to the forest, crossed the Ganges with the help of Guhan, his dear devotee, and gave his sandals and his kingdom to Bharathan when his brother came to see him. He stays in beautiful Thiruchitrakudam in Thillai. If devotees see him happily with their two eyes, they will be equal to the gods in the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தொத்து அலர் கொத்தான மலர்களை; பூஞ் சுரிகுழல் சூடிய சுருண்ட கூந்தலையுடைய; கைகேசி சொல்லால் கைகேயி சொன்னதால்; தொல் பழமையான; நகரம் துறந்து நகரத்தை விட்டு; கங்கை கங்கையின்; துறைதன்னை துறையை; பத்தி உடை பக்தி மிக்க; குகன் கடத்த குகன் கடக்க உதவ; வனம் போய்ப் புக்கு காட்டிற்போய்ச் சேர்ந்து; பரதனுக்கு பாதுகமும் பரதனுக்குப் பாதுகையும்; அரசும் ஈந்து ராஜ்யத்தையும் கொடுத்து; சித்திரகூடத்து சித்ரகூடத்தில்; இருந்தான் தன்னை இருந்தவனை; இன்று இப்பொழுது; தில்லை நகர் தில்லை நகர்; திருச்சித்ரகூடம் சித்ரகூடம்; தன்னுள் என்னும் தலத்தில்; எத்தனையும் கண் முழுதுமாக கண்; குளிர குளிரும்படி; காணப் பெற்ற காணப் பெற்ற; இரு சிறந்த; நிலத்தார்க்கு பூலோகத்தினர்களுக்கு; இமையவர் தேவர்களும்; நேர் ஒவ்வார்தாமே சமம் ஆகார்
kaikeci cŏllāl because of the words of Kaikeyi; pūñ curikuḻal who adorned her curly hair with; tŏttu alar clusters of flowers; nakaram tuṟantu Lord Rama left the; tŏl ancient city; kukaṉ kaṭatta and with the help of Guhan; patti uṭai who is devoted; kaṅkai He crossed the Ganges; tuṟaitaṉṉai reached the shore; vaṉam poyp pukku and reached the forest; parataṉukku pātukamum He gave His sandals to Bharatha; aracum īntu and the governance as well; iruntāṉ taṉṉai the One who stayed; cittirakūṭattu in Chintrakoot; iṉṟu is now; tiruccitrakūṭam in Thiru Chitrakootam; tillai nakar at Thilllai; nilattārkku those worldly people; iru who are noble; kāṇap pĕṟṟa and who were able to get the darshan; ĕttaṉaiyum kaṇ entirely with their eyes; kul̤ira delightfully; taṉṉul̤ at this holy site; ner ŏvvārtāme are equal to; imaiyavar gods

PMT 10.5

745 வலிவணக்குவரைநெடுந்தோள்விராதைக்கொன்று
வண்டமிழ்மாமுனிகொடுத்தவரிவில்வாங்கி *
கலைவணக்குநோக்கரக்கிமூக்கைநீக்கிக்
கரனோடுதூடணன்றன்னுயிரைவாங்கி *
சிலைவணக்கிமான்மரியவெய்தான்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
தலைவணக்கிக்கைகூப்பியேத்தவல்லார்
திரிதலால் தவமுடைத்துத்தரணிதானே.
745 வலி வணக்கு வரை நெடுந்தோள் விராதைக் கொன்று *
வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி *
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி *
கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி **
சிலை வணக்கி மான் மறிய எய்தான் தன்னைத் *
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
தலை வணக்கிக் கைகூப்பி ஏத்த வல்லார் *
திரிதலால் தவமுடைத்துத் தரணி தானே (5)
745 vali vaṇakku varai nĕṭuntol̤ virātaik kŏṉṟu *
vaṇ tamizh mā muṉi kŏṭutta vari vil vāṅki *
kalai vaṇakku nokku arakki mūkkai nīkki *
karaṉoṭu tūṭaṇaṉ taṉ uyirai vāṅki **
cilai vaṇakki māṉ maṟiya ĕytāṉ taṉṉait *
tillai nakart tiruccitrakūṭan taṉṉul̤ *
talai vaṇakkik kaikūppi etta vallār *
tiritalāl tavamuṭaittut taraṇi tāṉe (5)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

745. As Rāma he killed the Rakshasā Virādan with strong mountain-like arms, received a bow from the sage Agasthya, creator of rich Tamil, cut off the nose of the beautiful Rakshasi Surpanakha, took the lives of Karan and Dushanan, and bent his bow and shot arrows to kill the Raksasa Mārisan when he came as a golden deer. He stays in Thiruchitrakudam in Thillai and this earth is fortunate that his devotees wander there bowing their heads and worshiping him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
வலி வணக்கு எதிரியின் வலிமையை அடக்குகிற; வரை மலை போன்ற; நெடுந்தோள் பெரிய தோளையுடைய; விராதைக் கொன்று விராத ராட்சசனை அழித்து; வண் தமிழ் மா சிறந்த தமிழ்; முனி கொடுத்த முனிவர் கொடுத்த; வரி வில் வாங்கி சிறப்பான வில்லை வாங்கி; கலை வணக்கு மான் விழியை; நோக்கு மிஞ்சிவிடும் விழியாள்; அரக்கி சூர்ப்பனகை என்ற அரக்கியின்; மூக்கை மூக்கை; நீக்கி துண்டித்தும்; கரனோடு தூடணன்தன் கரன் தூஷணர்களின்; உயிரை வாங்கி உயிரைப் பறித்தும்; சிலை வணக்கி மான் மறிய மாயமான் இறக்கும்படி; எய்தான் தன்னை வில்லை எய்தவனை; தில்லை நகர்த் தில்லை நகர்; திருச்சித்ரகூடந் தன்னுள் திருச்சித்ரகூடத்தில்; தலை வணக்கி தலை வணங்கி; கைகூப்பி கைகூப்பி; ஏத்த வல்லார் துதிக்க வல்லவர்கள்; திரிதலால் சஞ்சரிப்பதால்; தரணிதானே பூமியானது; தவமுடைத்து பாக்கியம் பெற்றது
vali vaṇakku He who subdues the strength of enemies; virātaik kŏṉṟu killed the demon Viradhan; varai who had mountain-like; nĕṭuntol̤ broad shoulders; vari vil vāṅki He received the bow; muṉi kŏṭutta from Agasthiyar; vaṇ tamiḻ mā the great tamil sage; nīkki sliced off; mūkkai the nose of; arakki demoness Surphanakha; nokku who had eyes surpassing the beauty of; kalai vaṇakku eyes of a deer; uyirai vāṅki He took the lives of; karaṉoṭu tūṭaṇaṉtaṉ Karan and Dushana; cilai vaṇakki māṉ maṟiya and struck down the illusory golden deer; ĕytāṉ taṉṉai with His bow; tiritalāl because of lives of; etta vallār devotees who praise Him; talai vaṇakki with bowed heads; kaikūppi and folded hands; tiruccitrakūṭan taṉṉul̤ in Thiru Chitrakootam; tillai nakart at Thilllai; taraṇitāṉe this earth; tavamuṭaittu has attained great fortune

PMT 10.6

746 தனமருவுவைதேகிபிரியலுற்றுத்
தளர்வெய்திச்சடாயுவைவைகுந்தத்தேற்றி *
வனமருவுகவியரசன்காதல்கொண்டு
வாலியைகொன்றிலங்கைநகரரக்கர்கோமான் *
சினமடங்கமாருதியால்சுடுவித்தானைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
இனிதமர்ந்தஅம்மானைஇராமன்றன்னை
ஏத்துவாரிணையடியேயேத்தினேனே.
746 தனம் மருவு வைதேகி பிரியல் உற்று *
தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி *
வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு *
வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர் கோமான் **
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானைத் *
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
இனிது அமர்ந்த அம்மானை இராமன் தன்னை *
ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே. (6)
746 taṉam maruvu vaiteki piriyal uṟṟu *
tal̤arvu ĕytic caṭāyuvai vaikuntattu eṟṟi *
vaṉam maruvu kaviyaracaṉ kātal kŏṇṭu *
vāliyaik kŏṉṟu ilaṅkainakar arakkar komāṉ **
ciṉam aṭaṅka mārutiyāl cuṭuvittāṉait *
tillai nakart tiruccitrakūṭan taṉṉul̤ *
iṉitu amarnta ammāṉai irāmaṉ taṉṉai *
ettuvār iṇaiyaṭiye ettiṉeṉe. (6)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

746. As Rāma he was separated from Vaidehi, his lovely wife. He was sad when Jatāyu was killed by Rāvanan and sent to Vaikuntam, he became friends with the king of monkeys' Sugrivan and he killed Vali in the Kishkinda forest, relieving the suffering of Sugrivan. He made Hanuman burn Lankā ruled by Rāvanan, the king of the Rakshasās, so that Hanuman’s anger would abate. I worship the feet of the devotees of Rāma, the dear god who stays happily in Thiruchitrakudam in Thillai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தனம் மருவு செல்வம் போன்ற; வைதேகி பிரியல் உற்று சீதையைப் பிரிந்து; தளர்வு எய்தி மனம் தளர்ந்து; சடாயுவை ஜடாயுவை; வைகுந்தத்து ஏற்றி பரமபதத்திற்கு அனுப்பி; வன மருவு வனத்தில் வசிக்கிற; கவியரசன் குரங்கு அரசனின்; காதல் கொண்டு நட்பு கொண்டு; வாலியைக் கொன்று வாலியை அழித்து; இலங்கை நகர் இலங்கை நகரின்; அரக்கர்கோமான் அரசனுடைய; சினம் அடங்க சீற்றத்தை அடக்கி; மாருதியால் அனுமானால்; சுடுவித்தானை எரித்திட்டவனும்; தில்லை நகர் தில்லைநகர்; திருச்சித்ரகூடந் தன்னுள் திருச்சித்ரகூடத்தில்; இனிது அமர்ந்த இனிதே இருக்கும்; அம்மானை ஈசனான; இராமன் தன்னை இராமனை; ஏத்துவார் துதிக்கும்; இணையடியே அடியார்களின் பாதத்தை; ஏத்தினேனே துதித்தேனே!
ammāṉai Lord; irāmaṉ taṉṉai Rama; iṉitu amarnta who happily resides in; tiruccitrakūṭan taṉṉul̤ in Thiru Chitrakootam; tillai nakar at Thilllai; tal̤arvu ĕyti whose heart was filled with sorrow; vaiteki piriyal uṟṟu from the separation from Sita; taṉam maruvu the greatest wealth; caṭāyuvai who sent Jatayu; vaikuntattu eṟṟi to Paramapadam; kātal kŏṇṭu became friends with; kaviyaracaṉ Sugrivar, the King of Monkeys; vaṉa maruvu who resided in the forest; vāliyaik kŏṉṟu and killed Vaali; ciṉam aṭaṅka tamed the fierceness of; arakkarkomāṉ the King; ilaṅkai nakar of Lanka; cuṭuvittāṉai by destroying it; mārutiyāl through Hanuman; ettiṉeṉe I praise; iṇaiyaṭiye the devotees; ettuvār who praise Him

PMT 10.7

747 குரைகடலையடலம்பால்மறுகவெய்து
குலைகட்டிமறுகரையையதனாலேறி *
எரிநெடுவேலரக்கரொடுமிலங்கைவேந்தன்
இன்னுயிர்கொண்டவன்தம்பிக்கரசுமீந்து *
திருமகளோடினிதமர்ந்தசெல்வன்றன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
அரசமர்ந்தானடிசூடுமரசையல்லால்
அரசாகவெண்ணேன்மற்றரசுதானே.
747 குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து *
குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி *
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன் *
இன்னுயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து **
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னைத் *
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் *
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே (7)
747 kurai kaṭalai aṭal ampāl maṟuka ĕytu *
kulai kaṭṭi maṟukaraiyai ataṉāl eṟi *
ĕri nĕṭu vel arakkarŏṭum ilaṅkai ventaṉ *
iṉṉuyir kŏṇṭu avaṉ tampikku aracum īntu **
tirumakal̤oṭu iṉitu amarnta cĕlvaṉ taṉṉait *
tillai nakart tiruccitrakūṭan taṉṉul̤ *
aracu amarntāṉ aṭi cūṭum aracai allāl *
aracu āka ĕṇṇeṉ maṟṟu aracu tāṉe (7)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

747. As Rāma he shot his arrows to calm the stormy ocean, made a bridge with the help of the monkeys and reached Lankā on the other side of the sea. He killed the Rakshasās who carried strong long spears, took the life of Rāvana the king of Lankā and gave the kingdom to Rāvana’s brother Vibhishanā, and returning to Ayodhya with his wife as lovely as Lakshmi, he was seated on his throne. I will not consider anyone my king except Rāma the god of Thiruchitrakudam in Thillai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
குரை கடலை ஒலிக்கின்ற கடலை; அடல் அம்பால் அழிக்கும் அம்பினால்; மறுக எய்து கலங்கும்படி எய்து; குலை கட்டி அதனால் அணைகட்டி அந்த வழியாக; மறு கரையை ஏறி அக்கரையை அடைந்து; எரி நெடு பகைவனை எரிக்கும் நீண்ட; வேல் வேல் தாங்கிய; அரக்கரொடும் அரக்கர்களோடு; இலங்கை வேந்தன் இராவணனது; இன்னுயிர் கொண்டு இன்னுயிரைக் கவர்ந்து; அவன் தம்பிக்கு அவனுடைய தம்பிக்கு; அரசும் ஈந்து அரசாட்சியும் கொடுத்து; திருமகளோடு சீதையுடன்; இனிது அமர்ந்த இனிதாகச் சேர்ந்த; செல்வன் தன்னை செல்வம் போன்றவனை; தில்லை நகர்த் தில்லைநகர்; திருச்சித்ரகூடந் தன்னுள் திருச்சித்ரகூடத்தில்; அரசு அமர்ந்தான் அரசாளுபவனுடைய; அடி சூடும் திருவடியைத் தலையில்; அரசை அல்லால் சூடுவதல்லாமல்; மற்று அரசு தானே வேறு ஒரு அரசாட்சியை; அரசு ஆக அரசாட்சி என; எண்ணேன் மதித்திடேன்
maṟuka ĕytu He shot; aṭal ampāl an arrow to calm; kurai kaṭalai the roaring ocean; kulai kaṭṭi ataṉāl He built the dam; maṟu karaiyai eṟi and reached the other shore; vel wielded a spear; ĕri nĕṭu that can burn the enemies; iṉṉuyir kŏṇṭu He killed; ilaṅkai ventaṉ Ravana; arakkarŏṭum along with demons; aracum īntu and gave the kingdom; avaṉ tampikku to his brother (Vibeeshana); cĕlvaṉ taṉṉai He is a great wealth; iṉitu amarnta who joyfully reunited with; tirumakal̤oṭu Sita; aracu amarntāṉ He is the ruler; tiruccitrakūṭan taṉṉul̤ in Thiru Chitrakootam; tillai nakart at Thilllai; aracai allāl instead merging; aṭi cūṭum with His divine feet on my head; ĕṇṇeṉ I will not regard; maṟṟu aracu tāṉe any other kingship; aracu āka as a true rule

PMT 10.8

748 அம்பொனெடுமணிமாடஅயோத்தியெய்தி
அரசெய்திஅகத்தியன்வாய்த்தான்முன்கொன்றான்
தன் * பெருந்தொல்கதைக்கேட்டுமிதிலைச்செல்வி
உலகுய்யத்திருவயிறுவாய்த்தமக்கள் *
செம்பவளத்திரள்வாய்த்தன்சரிதைகேட்டான்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
எம்பெருமான்தன்சரிதைசெவியால்கண்ணால்
பருகுவோம் * இன்னமுதைம்மதியோமின்றே.
748 அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி *
அரசு எய்தி அகத்தியன் வாய்த் தான் முன் கொன்றான் *
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி *
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் **
செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான் *
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் *
இன்னமுதம் மதியோமின்றே (8)
748 am pŏṉ nĕṭu maṇimāṭa ayotti ĕyti * aracu ĕyti akattiyaṉ vāyt tāṉ muṉ kŏṉṟāṉ *
taṉ pĕruntŏl katai keṭṭu mitilaic cĕlvi * ulaku uyyat tiru vayiṟu vāytta makkal̤ **
cĕm paval̤at tiral̤vāyt taṉ caritai keṭṭāṉ * tillai nakart tiruccitrakūṭan taṉṉul̤ *
ĕmpĕrumāṉ taṉ caritai cĕviyāl kaṇṇāl parukuvom * iṉṉamutam matiyomiṉṟe (8)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

748. Rāma who reached Ayodhya filled with gold and beautiful diamond-studded palaces, heard his own story from the mouths, red as coral, of his two sons born to Sita, the princess of Mithila, to save the world. If we hear and drink in the story of Rāma of Thiruchitrakudam in Thillai we have no need of sweet nectar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
அம் பொன் நெடு அழகிய பொன்னால் ஆன; மணிமாட மணி மாடங்களுடைய; அயோத்தி அயோத்தியா நகருக்கு; எய்தி மீண்டும் வந்து; அரசு எய்தி அரசாட்சியை ஏற்று; தான் முன் தன்னால் முன்பு; கொன்றான்தன் அழிக்கப்பட்டவனின்; பெருந்தொல் கதை நீண்ட பூர்வ கதைகளை; அகத்தியன் அகஸ்திய முனிவன்; வாய்த் கேட்டு மூலம் கேட்டு; மிதிலைச் செல்வி மிதிலையின் செல்வி; உலகுய்ய உலகம் உய்ந்திட; திருவயிறு வாய்த்த பெற்ற பிள்ளைகளின்; செம் பவளத் சிவந்த பவழம்; திரள்வாய் போன்ற வாயினால்; தன் சரிதை தனது வரலாற்றை; கேட்டான் கேட்டவன்; தில்லைநகர்த் தில்லைநகர்; திருச்சித்ரகூடந் தன்னுள் திருச்சித்ரகூடத்தில்; எம்பெருமான் சரிதை எம்பெருமானின் கதையை; செவியால் கண்ணால் காதினாற்கேட்டு கண்ணால்; பருகுவோம் அனுபவிப்போம்; இன்னமுதம் வேறு எந்த இனிய தேவாமிர்தம்; மதியோமின்றே ஒன்றையும் மதிக்க மாட்டோம்
ĕyti He returned to; ayotti the City of Ayodhya with; maṇimāṭa mansions studed with gems; am pŏṉ nĕṭu and adorned with gold; aracu ĕyti and took the Kinghship; keṭṭāṉ He heard; taṉ caritai His story from; tiral̤vāy the mouths that were; cĕm paval̤at like red coral; tiruvayiṟu vāytta of the children born to; mitilaic cĕlvi the Princess of Mithila; ulakuyya for the salvation of the world; pĕruntŏl katai the long stories; kŏṉṟāṉtaṉ about the destruction of evil; tāṉ muṉ by Him; vāyt keṭṭu heard through; akattiyaṉ the sage Agasthyar; parukuvom lets enjoy; cĕviyāl kaṇṇāl by listening to; ĕmpĕrumāṉ caritai the story of the Lord; tiruccitrakūṭan taṉṉul̤ in Thiru Chitrakootam; tillainakart at Thilllai; iṉṉamutam any other sweet divine nectar; matiyomiṉṟe we will not value at all

PMT 10.9

749 செறிதவச்சம்புகன்றன்னைச்சென்றுகொன்று
செழுமறையோனுயிர்மீட்டுத் * தவத்தோனீந்த
நிறைமணிப்பூணணியுங்கொண்டுஇலவணன்தன்னைத்
தம்பியால்வானேற்றிமுனிவன்வேண்ட *
திறல்விளங்குமிலக்குமனைப்பிரிந்தான்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
உறைவானை * மறவாதவுள்ளந்தன்னை
உடையோம் * மற்றுறுதுயர மடையோமின்றே.
749 செறி தவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று *
செழு மறையோன் உயிர் மீட்டுத் தவத்தோன் ஈந்த *
நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத் *
தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட **
திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் தன்னைத் *
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
உறைவானை மறவாத உள்ளம் தன்னை உடையோம் *
மற்று உறு துயரம் அடையோம் இன்றே (9)
749 cĕṟi tavac campukaṉ taṉṉaic cĕṉṟu kŏṉṟu *
cĕzhu maṟaiyoṉ uyir mīṭṭuth tavattoṉ īnta *
niṟai maṇip pūṇ aṇiyum kŏṇṭu ilavaṇaṉ taṉṉait *
tampiyāl vāṉ eṟṟi muṉivaṉ veṇṭa **
tiṟal vil̤aṅkum ilakkumaṉaip pirintāṉ taṉṉait *
tillai nakart tiruccitrakūṭan taṉṉul̤ *
uṟaivāṉai maṟavāta ul̤l̤am taṉṉai uṭaiyom *
maṟṟu uṟu tuyaram aṭaiyom iṉṟe (9)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

749. Rāma is adorned with a jewel-studded ornament given by an Andanan who knew the Vedās because he saved his son. His brother Laksmana killed the Rakshasā Ilavanan and Rāma granted him Mokshā. He was separated from his brother Laksmana by the curse of the sage Durvasa. If our hearts never forget the lord of Thiruchitrakudam in Thillai, we will not have any trouble in our lives.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
செறி தவ மிக்க தவ வலிவையுடைய; சம்புகன் தன்னை சம்புகனை; சென்று தேடிச் சென்று; கொன்று அவனைக் கொன்று; செழு மறையோன் சிறந்த அந்தண குமாரனின்; உயிர் மீட்டு உயிரை மீட்டுக் கொடுத்து; தவத்தோன் ஈந்த தவ முனிவன் கொடுத்த; நிறை மணிப்பூண் ரத்ன ஹாரத்தையும்; அணியும் கொண்டு அணிந்து கொண்டு; இலவணன்தன்னை லவணாசுரனை; தம்பியால் தம்பியின் மூலம்; வான் ஏற்றி மேலுலகத்திற்கு அனுப்பி; முனிவன் வேண்ட துர்வாச முனியின் சாபத்தால்; திறல் விளங்கும் பராக்கிரமம் பெற்ற; இலக்குமனை லக்ஷ்மணனை; பிரிந்தான் தன்னை துறந்தவனை; தில்லை நகர்த் தில்லைநகர்; திருச்சித்ரகூடந் தன்னுள் திருச்சித்ரகூடத்தில்; உறைவானை உறையும் பிரானை; மறவாத உள்ளம் தன்னை மறவாத மனத்தை; உடையோம் உடைய நாம்; மற்று உறுதுயரம் இனி துயரமே; அடையோம் அன்றே அடையமாட்டோம்
cĕṉṟu You sought out; kŏṉṟu and killed; campukaṉ taṉṉai Shambukam; cĕṟi tava who had great ascetic strength; uyir mīṭṭu and saved the life of; cĕḻu maṟaiyoṉ a noble brahmin boy; aṇiyum kŏṇṭu then wore; niṟai maṇippūṇ the gem studded necklace; tavattoṉ īnta given by the sage; tampiyāl and through His brother; vāṉ eṟṟi killed; ilavaṇaṉtaṉṉai Lavanasura; pirintāṉ taṉṉai got separated from; tiṟal vil̤aṅkum immensely powerful; ilakkumaṉai Lakshmana; muṉivaṉ veṇṭa due to the curse of Sage Durvasa; uṭaiyom we who posses; maṟavāta ul̤l̤am taṉṉai the mind that never forgets; uṟaivāṉai the Lord who resides; tiruccitrakūṭan taṉṉul̤ in Thiru Chitrakootam; tillai nakart at Thilllai; aṭaiyom aṉṟe will not be touched; maṟṟu uṟutuyaram by sorrow

PMT 10.10

750 அன்றுசராசரங்களைவைகுந்தத்தேற்றி
அடலரவப்பகையேறியசுரர் தம்மை
வென்று * இலங்குமணிநெடுந்தோள்நான்கும்தோன்ற
விண்முழுதுமெதிர்வரத்தன்தாமம்மேவி *
சென்றினிதுவீற்றிருந்தவம்மான்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
என்றும்நின்றானவனிவனென்றேத்தி நாளும்
இன்றைஞ்சுமினோஎப்பொழுதும்தொண்டீர்! நீரே. (2)
750 ## அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி *
அடல் அரவப் பகையேறி அசுரர் தம்மை
வென்று * இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற *
விண் முழுதும் எதிர் வரத் தன் தாமம் மேவி **
சென்று இனிது வீற்றிருந்த அம்மான் தன்னைத் *
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி *
நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே (10)
750 ## aṉṟu carācaraṅkal̤ai vaikuntattu eṟṟi *
aṭal aravap pakaiyeṟi acurar tammai
vĕṉṟu * ilaṅku maṇi nĕṭuntol̤ nāṉkum toṉṟa *
viṇ muzhutum ĕtir varat taṉ tāmam mevi **
cĕṉṟu iṉitu vīṟṟirunta ammāṉ taṉṉait *
tillai nakart tiruccitrakūṭan taṉṉul̤ *
ĕṉṟum niṉṟāṉ avaṉ ivaṉĕṉṟu etti *
nāl̤um iṟaiñcumiṉo ĕppŏzhutum tŏṇṭīr nīre (10)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

750. When the dear lord adorned with garlands returned from the forest, the gods in the sky welcomed him. By the grace of him who fought with the strong Asuras and conquered them all people and creatures in the world go to Vaikuntam. He stays always in Thiruchitrakudam in Thillai. O devotees of Rāma, praise him saying, “avan ivan!” and worship him always.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
அன்று அன்று சராசரங்களான; சராசரங்களை எல்லா உயிர்களையும்; வைகுந்தத்து ஏற்றி பரமபதத்துக்குப் அனுப்பி; அடல் அரவப் வலிமையுடைய பாம்புகளின்; பகையேறி பகையான கருடன் மேல் ஏறி; அசுரர் தம்மை வென்று அசுரர்களை ஜயித்து; இலங்கு மணி வீரம் மிக்க; நெடுந்தோள் அழகிய நீண்ட தன் கைகள்; நான்கும் தோன்ற நான்கும் விளங்க; விண் முழுதும் மேல் உலகத்தினர் யாவரும்; எதிர்வர எதிரில் வர; தன் தாமம் மேவி தமது இடமான வைகுந்தம்; சென்று இனிது போய் இனிதாக; வீற்றிருந்த வீற்றிருந்த; அம்மான் தன்னை இராமபிரானை; தில்லை நகர் தில்லைநகர்; திருச்சித்ரகூடந் தன்னுள் திருச்சித்ரகூடத்தில்; என்றும் நின்றான் அவன் என்றும் இருக்கும் அவன்; இவனென்று ஏத்தி இப்பிரானே என துதித்து; தொண்டீர்! நீரே அடியவர்களே நீங்கள்; எப்பொழுதும் நாளும் தினந்தோறும் எப்போதும்; இறைஞ்சுமினோ வணங்கிடுவீரே
ammāṉ taṉṉai Lord Rama; carācaraṅkal̤ai sent all living beings; aṉṟu that day, both moving and unmoving; vaikuntattu eṟṟi to the supreme Abode; acurar tammai vĕṉṟu He won against the demons; pakaiyeṟi from the top of Garuda, the enemy of; aṭal aravap powerful snakes; nāṉkum toṉṟa with His four shining; nĕṭuntol̤ long hands; ilaṅku maṇi that are full of valor; viṇ muḻutum as the celestial beings; ĕtirvara came before Him; cĕṉṟu iṉitu He left happily to; taṉ tāmam mevi His abode of Vaikuntam; vīṟṟirunta and resided there; ĕṉṟum niṉṟāṉ avaṉ the One who always resides; tiruccitrakūṭan taṉṉul̤ in Thiru Chitrakootam; tillai nakar at Thilllai; ivaṉĕṉṟu etti is Lord Rama himself; tŏṇṭīr! nīre the devotees who praise that way; iṟaiñcumiṉo shall worship Him; ĕppŏḻutum nāl̤um every day, at all times

PMT 10.11

751 தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
திறல்விளங்குமாருதியோடமர்ந்தான்தன்னை *
எல்லையில்சீர்த்தயரதன்றன்மகனாய்த்தோன்றிற்று
அதுமுதலாத் தன்னுலகம்புக்கதீறா *
கொல்லியலும்படைத்தானைக்கொற்றவொள்வாள்
கோழியர்கோன்குடைக்குலசேகரஞ்சொற்செய்த *
நல்லியலின்தமிழ்மாலைபத்தும்வல்லார்
நலந்திகழ்நாரணனடிக்கீழ்நண்ணுவாரே (2)
751 ## தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை *
எல்லை இல் சீர்த் தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று அது முதலாத் *
தன் உலகம் புக்கது ஈறா **
கொல் இயலும் படைத்தானைக் கொற்ற ஒள்வாள் *
கோழியர் கோன் குடைக் குலசேகரன் சொற்செய்த *
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் *
நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே (11)
751 ## tillai nakart tiruccitrakūṭan taṉṉul̤ *
tiṟal vil̤aṅku mārutiyoṭu amarntāṉ taṉṉai *
ĕllai il cīrt tayarataṉ taṉ makaṉāyt toṉṟiṟṟu atu mutalāt *
taṉ ulakam pukkatu īṟā **
kŏl iyalum paṭaittāṉaik kŏṟṟa ŏl̤vāl̤ *
kozhiyar koṉ kuṭaik kulacekaraṉ cŏṟcĕyta *
nal iyal iṉ tamizh mālai pattum vallār *
nalam tikazh nāraṇaṉ aṭikkīzh naṇṇuvāre (11)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

751. Kulasekharan, the king of Uraiyur, who rules under a royal umbrella and carries a victorious shining sword composed a garland of ten Tamil pāsurams describing the endless fame of Rāma, sitting in Thillai Thiruchitrakudam the son of Dasharatha and the friend of Hanumān. If devotees know and recite these ten sweet Tamil pāsurams they will approach the feet of Nāranan who shines with goodness.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தில்லை நகர் தில்லைநகர்; திருச்சித்ரகூடந் தன்னுள் திருச்சித்ரகூடத்தில்; திறல் விளங்கு பலம் பெற்ற; மாருதியோடு அனுமானுடனே; அமர்ந்தான் தன்னை இருப்பவனைக் குறித்து; எல்லையில் எல்லையற்ற; சீர்த் தயரதன் தன் சீர்மை பெற்ற தசரதனின்; மகனாய்த் தோன்றிற்று மகனாய்ப் பிறந்த; அது முதலாக அந்தச் செயல் முதலாக; தன் உலகம் தனது உலகத்திற்கு; புக்கது ஈறா சென்றது வரை; கொல் இயலும் கொல்லும் திறனை; படைத்தானை படைத்தவனை; ஒள்வாள் வெற்றி வாளை உடைய; கோழியர் கோன் உறையூர் கோமான்; குடைக் வெண் கொற்றக்குடை உடைய; குலசேகரன் குலசேகராழ்வார்; சொல் செய்த அருளிச்செய்த; நல் இயல் சிறந்த; இன் தமிழ் மாலை இனியதமிழ்ப் பாசுரங்கள்; பத்தும் பத்தையும் கற்று; வல்லார் அனுசந்திப்பவர்கள்; நலன் திகழ் நலம் தரும்; நாரணன் நாராயணனின்; அடிக்கீழ் பாதங்களை; நண்ணுவாரே அடைவார்களே!
kulacekaraṉ Kulasekara Azhwar; koḻiyar koṉ the leader of Uraiyur; kuṭaik who bears the white umbrella; ŏl̤vāl̤ the one with victorious spear; paṭaittāṉai possesing; kŏl iyalum the power to destroy; cŏl cĕyta composed through divine grace; nal iyal these excellent; pattum ten; iṉ tamiḻ mālai tamil verses; amarntāṉ taṉṉai about Lord Rama who resides; tiruccitrakūṭan taṉṉul̤ in Thiru Chitrakootam; tillai nakar at Thilllai; mārutiyoṭu along with Hanuman; tiṟal vil̤aṅku who is mighty; makaṉāyt toṉṟiṟṟu who was born as a son to; ĕllaiyil the boundless; cīrt tayarataṉ taṉ Dasaratha, the one with unmatched glory; atu mutalāka from that point to; pukkatu īṟā to the point of His departure; taṉ ulakam to His supreme abode; vallār those who recite them; naṇṇuvāre will reach; nalaṉ tikaḻ the beneficial; aṭikkīḻ divine feet of; nāraṇaṉ Narayanana