Chapter 10

Hanuman sees Mother Sita - (நெறிந்த கருங்குழல்)

அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம்
Hanuman sees Mother Sita - (நெறிந்த கருங்குழல்)
As Rama's messenger, Hanuman went to Lanka and found Sita Devi in Ashoka Vatika. He conveyed his identity as Rama's messenger by recounting several tokens and then delighted her by giving her the ring sent by Rama. The āzhvār rejoices in narrating these noble deeds. Reciting this hymn is a mark of one's devotion to Rama.
இராம தூதனாக இலங்கைக்குச் சென்ற (அநுமன்) திருவடி அசோகவனத்தில் சீதா பிராட்டியைக் காண்கிறார். பல அடையாளங்களைச் சொல்லித் தான் இராமதூதன் என்பதை உணர வைக்கிறார். இராமன் கொடுத்தனுப்பிய மோதிரத்தைக் கொடுத்து மகிழ்விக்கிறார். இவ்வரிய செயல்களைக் கூறி மகிழ்கிறார் ஆழ்வார். ஒருவன் இராமபக்தன் என்பதற்கு இத்திருமொழியைக் கூறுவதும் ஓரடையாளம்.
Verses: 318 to 327
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and remain there always
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 3.10.1

318 நெறிந்தகருங்குழல்மடவாய். நின்னடியேன் விண்ணப்பம் *
செறிந்தமணிமுடிச்சனகன் சிலையிறுத்துநினைக்கொணர்ந்த
தறிந்து * அரசுகளைகட்ட அருந்தவத்தோன்இடைவிலங்க *
செறிந்தசிலைகொடுதவத்தைச் சிதைத்ததும்ஓரடையாளம். (2)
318 ## நெறிந்த கருங்குழல் மடவாய் * நின் அடியேன் விண்ணப்பம் *
செறிந்த மணி முடிச் சனகன் * சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது
அறிந்து ** அரசு களைகட்ட * அருந்தவத்தோன் இடை விலங்க *
செறிந்த சிலைகொடு தவத்தைச் * சிதைத்ததும் ஓர் அடையாளம் (1)
318 ## nĕṟinta karuṅkuzhal maṭavāy * niṉ aṭiyeṉ viṇṇappam *
cĕṟinta maṇi muṭic caṉakaṉ * cilai iṟuttu niṉaik kŏṇarntatu
aṟintu ** aracu kal̤aikaṭṭa * aruntavattoṉ iṭai vilaṅka *
cĕṟinta cilaikŏṭu tavattaic * citaittatum or aṭaiyāl̤am (1)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

318. Hanuman sees Sita in Asokavanam in Rāvana's Lankā and says, “O Beautiful goddess with dark thick hair! I am your slave. This is my request. Rāma broke the bow of king Janaka wearing a shining crown studded with diamonds and married you. When ParasuRāman, known for his great penance stopped him on the way to Ayodhya after your marriage, Rāma broke his bow and destroyed his powerful tapas. This tells you I am a messenger from Rāma.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெறிந்த அடர்ந்த; கருங்குழல் கருத்த தலைமுடியுள்ள; மடவாய்! மடப்ப குணமுடைய பிராட்டியே!; நின் அடியேன் உன் அடியவனின்; விண்ணப்பம் ஒரு விண்ணப்பம்; செறிந்த நெருக்கமாக; மணிமுடி ரத்னங்கள் பொருந்திய கிரீடத்தை அணிந்துள்ள; சனகன் ஜனக மஹாராஜாவின்; சிலை இறுத்து வில்லை முறித்து; நினை உம்மை திருமணம்; கொணர்ந்தது செய்து கொண்டு வருவதை; அறிந்து அறிந்து; அரசு பல தலைமுறை அரசர்களை; களைகட்ட அழித்த; அரும் சிறந்த; தவத்தோன் தவச்ரேஷ்டனான பரசுராமன்; இடை விலங்க நடு வழியில் வர; செறிந்த செறிவு மிக்க; சிலைகொடு அவன் வில்லை வாங்கி; தவத்தை அவன் தவத்தையும்; சிதைத்ததும் அழித்ததும்; ஓர் அடையாளம் ஒரு அடையாளமாகும்
niṉ aṭiyeṉ i am Your slave; maṭavāy! o Mother!; nĕṟinta with dark; karuṅkuḻal thick hair; viṇṇappam I have a request; cilai iṟuttu Rama broke the bow of; caṉakaṉ king Janaka; cĕṟinta who wore closely studded; maṇimuṭi diamonds fitted crown; niṉai and married You; aṟintu after knowing; kŏṇarntatu about the marriage; arum the great; tavattoṉ Parasurama; kal̤aikaṭṭa who destroyed; aracu many generations of kings; iṭai vilaṅka came in the front of Rama; cilaikŏṭu Rama lifted the bow; cĕṟinta of the great willed Parasurama; citaittatum and broke the bow; tavattai and his Tapas; or aṭaiyāl̤am this tells you I am a messenger from Rama

PAT 3.10.2

319 அல்லியம்பூமலர்க்கோதாய். அடிபணிந்தேன்விண்ணப்பம் *
சொல்லுகேன்கேட்டருளாய் துணைமலர்க்கண்மடமானே! *
எல்லியம்போதினிதிருத்தல் இருந்ததோரிடவகையில் *
மல்லிகைமாமாலைகொண்டு அங்குஆர்த்ததும்ஓரடையாளம்.
319 அல்லியம்பூ மலர்க்கோதாய் * அடிபணிந்தேன் விண்ணப்பம் *
சொல்லுகேன் கேட்டருளாய் * துணைமலர்க் கண் மடமானே ! **
எல்லியம் போது இனிதிருத்தல் * இருந்தது ஓர் இட வகையில் *
மல்லிகை மா மாலைகொண்டு * அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் (2)
319 alliyampū malarkkotāy * aṭipaṇinteṉ viṇṇappam *
cŏllukeṉ keṭṭarul̤āy * tuṇaimalark kaṇ maṭamāṉe ! **
ĕlliyam potu iṉitiruttal * iruntatu or iṭa vakaiyil *
mallikai mā mālaikŏṇṭu * aṅku ārttatum or aṭaiyāl̤am (2)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

319. “O you! with hair adorned with lovely alli blossoms, I bow to your feet. This is my request. Show me your grace and listen, You are beautiful as a doe and have two eyes like blooming flowers. One night when you were with your beloved husband, you tied Rāma with the jasmine garland playfully This is a proof that i am Rāma's messenger.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அல்லியம் பூ மலர் அல்லி மலர் பூமாலை போல்; கோதாய்! இருப்பவளே; அடிபணிந்தேன் தங்களை வணங்கி; விண்ணப்பம் சொல்லுகேன் விண்ணப்பிக்கிறேன்; கேட்டு அருளாய் கேட்டருள வேண்டும்; துணை மலர் தாமரை மலர் போன்ற இரு; கண் கண்களையுடைய; மடமானே! மடப்ப குண மான் போன்றவளே!; எல்லியம்போது இரவு நேரத்தில்; இனிதிருத்தல் ஸ்ரீராமனும் தாங்களும் மகிழ்வாக; இருந்தது இருந்தது; ஓர் இடவகையில் ஓர் ஸ்தலத்தில் இருந்த போது; மல்லிகை மா பெரிய மல்லிகை; மாலை கொண்டு மாலையால்; அங்குஆர்த்ததும் ஸ்ரீராமனைக் கட்டியதும்; ஓர் அடையாளம் ஓர் அடையாளமாகும்
aṭipaṇinteṉ i bow to you, mother Sita; kotāy! the One like; alliyam pū malar alli blossoms; viṇṇappam cŏllukeṉ i request you; keṭṭu arul̤āy please listen; tuṇai malar the One with lotus like; kaṇ eyes; maṭamāṉe! You are like gentle deer; ĕlliyampotu at night time; iṉitiruttal when You both; iruntatu stayed; or iṭavakaiyil and spent time together; aṅkuārttatum you tied Rama; mālai kŏṇṭu with a garland made of; mallikai mā jasmine; or aṭaiyāl̤am this is a proof that i am Rama's messenger

PAT 3.10.3

320 கலக்கியமாமனத்தனளாய்க் கைகேசிவரம்வேண்ட *
மலக்கியமாமனத்தனனாய் மன்னவனும்மறாதொழிய *
குலக்குமரா! காடுறையப்போ என்றுவிடைகொடுப்ப *
இலக்குமணன்தன்னொடும் அங்குஏகியதுஓரடையாளம்.
320 கலக்கிய மா மனத்தனளாய்க் * கைகேசி வரம் வேண்ட *
மலக்கிய மா மனத்தனனாய் * மன்னவனும் மறாது ஒழிய **
குலக்குமரா காடு உறையப் போ என்று * விடை கொடுப்ப *
இலக்குமணன் தன்னொடும் * அங்கு ஏகியது ஓர் அடையாளம் (3)
320 kalakkiya mā maṉattaṉal̤āyk * kaikeci varam veṇṭa *
malakkiya mā maṉattaṉaṉāy * maṉṉavaṉum maṟātu ŏzhiya **
kulakkumarā kāṭu uṟaiyap po ĕṉṟu * viṭai kŏṭuppa *
ilakkumaṇaṉ taṉṉŏṭum * aṅku ekiyatu or aṭaiyāl̤am (3)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

321. Prompted by the wicked Mantara, the large hearted Kaikeyi got misled and asked for two boons from Dasharatha. With a sorrowful heart the noble king granted them, unable to refuse. He sent his dear son to go to the forest in exile. Rāma went with his brother Lakshmana. This tells you I am a messenger from Rāma.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கலக்கிய கூனியால் கலக்கப்பட்ட; மா பெரிய; மனத்தனளாய் மனத்தையுடையவளான; கைகேசி கைகேயி; வரம் வேண்ட தசரதனிடம் வரம் கேட்க; மலக்கிய கலக்கமடைந்த; மா சிறந்த; மனத்தனனாய் மனத்தையுடையவனாய்; மன்னவனும் அரசனும்; மறாது ஒழிய மறுத்துப் பேச இயலாது போக; குலக்குமரா! நற் குலத்திற் பிறந்த குமாரனே!; காடுறையப் போ காட்டிலே வசிக்க போய் வா; என்று என்று சொல்லி; விடைகொடுப்ப விடை கொடுத்தனுப்ப; இலக்குமணன் தன்னொடும் லக்ஷ்மணனோடு கூட; அங்கு ஏகியது இராமபிரான் காடு சென்றடைந்ததும்
kalakkiya prompted by mantara; kaikeci Kaikeyi; who had a noble; maṉattaṉal̤āy heart; varam veṇṭa asked King Dasaratha for a boon; maṉṉavaṉum the king; who was a person with; maṉattaṉaṉāy a noble heart; malakkiya got disturbed; maṟātu ŏḻiya and could not refuse and speak otherwise; kulakkumarā! o Son born in a noble family!; kāṭuṟaiyap po go live in the forest; ĕṉṟu saying this; viṭaikŏṭuppa he sent Him away; aṅku ekiyatu then Lord Rama reached the forest; ilakkumaṇaṉ taṉṉŏṭum along with Lakshmana,

PAT 3.10.4

321 வாரணிந்தமுலைமடவாய்! வைதேவீ! விண்ணப்பம் *
தேரணிந்தஅயோத்தியர்கோன் பெருந்தேவீ! கேட்டருளாய் *
கூரணிந்தவேல்வலவன் குகனோடும்கங்கைதன்னில் *
சீரணிந்ததோழமை கொண்டதும்ஓரடையாளம்.
321 வார் அணிந்த முலை மடவாய் * வைதேவீ விண்ணப்பம் *
தேர் அணிந்த அயோத்தியர்கோன் * பெருந்தேவீ ! கேட்டருளாய் **
கூர் அணிந்த வேல் வலவன் * குகனோடும் கங்கைதன்னில் *
சீர் அணிந்த தோழமை * கொண்டதும் ஓர் அடையாளம் (4)
321 vār aṇinta mulai maṭavāy * vaitevī viṇṇappam *
ter aṇinta ayottiyarkoṉ * pĕruntevī ! keṭṭarul̤āy **
kūr aṇinta vel valavaṉ * kukaṉoṭum kaṅkaitaṉṉil *
cīr aṇinta tozhamai * kŏṇṭatum or aṭaiyāl̤am (4)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

321. “O Vaidehi, beautiful one with covered breasts O! royal queen of the Ayodhya king, who has a beautiful chariot. This is my request. Give me your grace and hear me. He became a good friend of Guhan, who, skilled in using a sharp spear, lived on the bank of Ganges. This tells you I am Rāma's messenger.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வார் அணிந்த கச்சை அணிந்த; முலை மடவாய்! மார்புடைய பெண்பிள்ளாய்!; வைதேவீ! வைதேகிப் பிராட்டியே!; விண்ணப்பம் ஓர் விண்ணப்பம்; தேர் அணிந்த தேர்களால் அலங்கரிக்கப்பட்ட; அயோத்தியர்கோன் அயோத்தி மன்னனின்; பெருந்தேவீ! பெருமைக்குத் தகுந்த தேவியே!; கேட்டருளாய் விண்ணப்பம் கேட்டருளவேணும்; கூர் அணிந்த கூர்மை பொருந்திய; வேல் வலவன் வேலாயுதத்தில் வல்லவனாகிய; குகனோடும் குகப்பெருமானோடும்; கங்கை தன்னில் கங்கை கரையிலே; சீர் அணிந்த சிறப்புப்பொருந்திய; தோழமை கொண்டதும் நட்பு கொண்டதும்; ஓர் அடையாளம் ஓர் அடையாளம்
vaitevī! o Vaidehi; mulai maṭavāy! the girl with the chest; vār aṇinta adorned with a sash; viṇṇappam a request; pĕruntevī! o Goddess worthy of the glory of; ayottiyarkoṉ the king of Ayodhya!; ter aṇinta decorated with chariots; keṭṭarul̤āy may my request be granted with favor; cīr aṇinta a special; toḻamai kŏṇṭatum bond of friendship was established; kukaṉoṭum with guhan; kūr aṇinta who was skilled; vel valavaṉ with the use of sharp spear; kaṅkai taṉṉil on the banks of the ganges; or aṭaiyāl̤am this is a proof that i am Rama's messenger

PAT 3.10.5

322 மானமருமெல்நோக்கி! வைதேவீ! விண்ணப்பம் *
கானமரும்கல்லதர்போய்க் காடுறைந்தகாலத்து *
தேனமரும்பொழிற்சாரல் சித்திரகூடத்துஇருப்ப *
பால்மொழியாய்! பரதநம்பி பணிந்ததும்ஓரடையாளம்.
322 மான் அமரும் மென்நோக்கி * வைதேவீ ! விண்ணப்பம் *
கான் அமரும் கல் அதர் போய்க் * காடு உறைந்த காலத்து **
தேன் அமரும் பொழில் சாரல் * சித்திரகூடத்து இருப்ப *
பால்மொழியாய் பரதநம்பி * பணிந்ததும் ஓர் அடையாளம் (5)
322 māṉ amarum mĕṉnokki * vaitevī ! viṇṇappam *
kāṉ amarum kal-atar poyk * kāṭu uṟainta kālattu **
teṉ amarum pŏzhil cāral * cittirakūṭattu iruppa *
pālmŏzhiyāy paratanampi * paṇintatum or aṭaiyāl̤am (5)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

322. “O Vaidehi, as lovely as a doe, with words as sweet as milk, This is my request. You and Rāma went to the forest and stayed in Chitrakoodam, you walked along stony paths where the mountain slopes are covered with groves and flowers drip honey. There Bharatha came and worshiped you. This tells you I am a messenger from Rāma.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மான் அமரு பேடை மானைப் போன்ற; மெல் நோக்கி மென்மையான பார்வையுடைய; வைதேவீ! வைதேகிப் பிராட்டியே!; விண்ணப்பம் ஓர் விண்ணப்பம்; கான் அமரும் காட்டிலே; கல் அதர் கல் நிறைந்த; போய் வழியிலேயே சென்று; காடு உறைந்த காலத்து காட்டில் வசித்தபோது; தேன் அமரும் தேன் நிறைந்த; பொழில் மலர் வனத்தின்; சாரல் மலையடிவாரத்தில்; சித்திரகூடத்து சித்திரகூட பர்வதத்தில்; இருப்ப நீங்கள் இருந்தபோது; பால் பால் போன்ற; மொழியாய்! இனிய பேச்சையுடையவளே!; பரத நம்பி குணவானான தம்பி பரதன்; பணிந்ததும் வந்து வணங்கியதும்; ஓர் அடையாளம் ஓர் அடையாளமாகும்
vaitevī! oh mother Vaidehi; māṉ amaru who is like a deer with a beautiful body; mĕl nokki with a soft and gentle gaze; viṇṇappam one request; iruppa when you and Rama stayed; cāral at the foothills of; cittirakūṭattu Chitrakoot; kāṭu uṟainta kālattu when You lived; kāṉ amarum in the forest; poy going along the path; kal atar filled of stones; pŏḻil and flowery forest; teṉ amarum with flowers filled with honey; mŏḻiyāy! o sweet-voiced One!; pāl like milk; parata nampi the virtuous brother, bharatha; paṇintatum came and offered his respects; or aṭaiyāl̤am this is a proof that i am Rama's messenger

PAT 3.10.6

323 சித்திரகூடத்துஇருப்பச் சிறுகாக்கைமுலைதீண்ட *
அத்திரமேகொண்டெறிய அனைத்துலகும்திரிந்தோடி *
வித்தகனே. இராமாவோ. நின்னபயம்என்றுஅழைப்ப *
அத்திரமேயதன்கண்ணை அறுத்ததும்ஓரடையாளம்.
323 சித்திரகூடத்து இருப்பச் * சிறுகாக்கை முலை தீண்ட *
அத்திரமே கொண்டு எறிய * அனைத்து உலகும் திரிந்து ஓடி **
வித்தகனே இராமாவோ * நின் அபயம் என்று அழைப்ப *
அத்திரமே அதன்கண்ணை * அறுத்ததும் ஓர் அடையாளம் (6)
323 cittirakūṭattu iruppac * ciṟukākkai mulai tīṇṭa *
attirame kŏṇṭu ĕṟiya * aṉaittu ulakum tirintu oṭi **
vittakaṉe irāmāvo * niṉ apayam ĕṉṟu azhaippa *
attirame ataṉkaṇṇai * aṟuttatum or aṭaiyāl̤am (6)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

323. “When you were in Chitrakoodam, a small crow came and pricked your breast. Rāma shot an arrow at the crow in fury and the frightened crow flew all over the world. Unable to get help, he fell at your feet, saying ‘O Rāma, clever one, you are my refuge. ’ The Brahmāstra blinded its one eye. This is a proof that I am Rāma's messenger.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சித்திரகூடத்து சித்திரகூடத்தில்; இருப்ப சிறு இருந்த போது சிறிய; காக்கை காக்கையின் வடிவு எடுத்து வந்த ஜயந்தன்; முலை தீண்ட தங்களுடைய மார்பகத்தை தீண்ட; அத்திரமே கோபமுற்ற இராமன் பிரம்மாஸ்திரம்; கொண்டு எறிய எடுத்து எறிய; அனைத்து உலகும் எல்லா உலகங்களிலும்; திரிந்து திரிந்து அலைந்து போய்; ஓடி தப்பமுடியாமல் ஓடி; வித்தகனே! வியப்புக்குரிய பிரானே!; நின் அபயம் உன் காலடியிலேயே அபயம்; என்று அழைப்ப என்று கூறி விழ; அத்திரமே அந்த பிரம்மாஸ்திரமே; அதன் அந்தக் காக்கையின்; கண்ணை ஒரு கண்ணை மட்டும்; அறுத்ததும் அறுத்து விட்டதும்; ஓர் அடையாளம் ஓர் அடையாளம்
cittirakūṭattu at the chitrakoot; iruppa ciṟu disguised as a small; kākkai crown came jayantan; mulai tīṇṭa and when he was poking on Your chest; attirame it angered, Rama who took the brahmastra; kŏṇṭu ĕṟiya and attacked it; tirintu it wandered and swirled; aṉaittu ulakum across all worlds,; oṭi unable to escape; vittakaṉe! o wondrous being!; niṉ apayam in Your feet, there is refuge; ĕṉṟu aḻaippa saying so, it fell; attirame that very brahmastra; aṟuttatum only destroyed; kaṇṇai one of the eyes; ataṉ of that crow; or aṭaiyāl̤am this is a proof that i am Rama's messenger

PAT 3.10.7

324 மின்னொத்தநுண்ணிடையாய்! மெய்யடியேன்விண்ணப்பம் *
பொன்னொத்தமானொன்று புகுந்துஇனிதுவிளையாட *
நின்னன்பின்வழிநின்று சிலைபிடித்துஎம்பிரான்ஏக *
பின்னேஅங்குஇலக்குமணன் பிரிந்ததும்ஓரடையாளம்.
324 மின் ஒத்த நுண் இடையாய் * மெய் அடியேன் விண்ணப்பம் *
பொன் ஒத்த மான் ஒன்று * புகுந்து இனிது விளையாட **
நின் அன்பின் வழிநின்று * சிலை பிடித்து எம்பிரான் ஏக *
பின்னே அங்கு இலக்குமணன் * பிரிந்ததும் ஓர் அடையாளம் (7)
324 miṉ ŏtta nuṇ iṭaiyāy * mĕy aṭiyeṉ viṇṇappam *
pŏṉ ŏtta māṉ ŏṉṟu * pukuntu iṉitu vil̤aiyāṭa **
niṉ aṉpiṉ vazhiniṉṟu * cilai piṭittu ĕmpirāṉ eka *
piṉṉe aṅku ilakkumaṇaṉ * pirintatum or aṭaiyāl̤am (7)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

324. O! One with a waist as thin as lightning! This is your true slave's request! Seeing a golden deer playing sweetly in the forest , you asked your beloved husband to bring it to you, He took his bow and went to catch it, leaving Lakshmana to guard you. Hearing Rāma's call, Lakshmana left you alone and went to help Rāma This is again a proof that I am Rāma's messenger.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின் ஒத்த மின்னலை போன்ற; நுண்ணிடையாய்! நுண்ணிய இடை உடையவளே!; மெய் அடியேன் உண்மையான பக்தனாகிய எனது; விண்ணப்பம் விண்ணப்பத்தைக் கேளுங்கள்; பொன் ஒத்த மான் ஒன்று பொன் போன்ற மான் ஒன்று; புகுந்து பஞ்சவடி ஆசிரமத்தில் வந்து; இனிது விளையாட அழகாக விளையாட; நின் அன்பின் தாங்கள் ஆசைப்பட்டதற்கு; வழி நின்று இணங்க; சிலை பிடித்து வில்லை எடுத்துக்கொண்டு; எம்பிரான் ஏக இராமபிரான் அதனைத் தொடர்ந்து போக; பின்னே அங்கு இலக்குமணன் பிறகு லக்ஷ்மணனும்; பிரிந்ததும் தங்களை விட்டுப் பிரிந்து போனதும்; ஓர் அடையாளம் ஓர் அடையாளமாகும்
nuṇṇiṭaiyāy! one with a delicate waist!; miṉ ŏtta like a lightning bolt; mĕy aṭiyeṉ as a true devotee; viṇṇappam please hear my request; pŏṉ ŏtta māṉ ŏṉṟu a golden deer; pukuntu came to the panchavati ashram; iṉitu vil̤aiyāṭa and played beautifully; vaḻi niṉṟu agreeing; niṉ aṉpiṉ to fulfill Your desire; ĕmpirāṉ eka Rama followed it; cilai piṭittu with His bow and arrow; piṉṉe aṅku ilakkumaṇaṉ then Lakshman too; pirintatum parted from You; or aṭaiyāl̤am this is a proof that i am Rama's messenger

PAT 3.10.8

325 மைத்தகுமாமலர்க்குழலாய்! வைதேவீ! விண்ணப்பம் *
ஒத்தபுகழ்வானரக்கோன் உடனிருந்துநினைத்தேட *
அத்தகுசீரயோத்தியர்கோன் அடையாளமிவைமொழிந்தான் *
இத்தகையால்அடையாளம் ஈதுஅவன்கைமோதிரமே.
325 மைத் தகு மா மலர்க்குழலாய் * வைதேவீ விண்ணப்பம் *
ஒத்த புகழ் வானரக்கோன் * உடன் இருந்து நினைத் தேட **
அத்தகு சீர் அயோத்தியர்கோன் * அடையாளம் இவை மொழிந்தான் *
இத் தகையால் அடையாளம் * ஈது அவன் கை மோதிரமே (8)
325 mait taku mā malarkkuzhalāy * vaitevī viṇṇappam *
ŏtta pukazh vāṉarakkoṉ * uṭaṉ iruntu niṉait teṭa **
attaku cīr ayottiyarkoṉ * aṭaiyāl̤am ivai mŏzhintāṉ *
it takaiyāl aṭaiyāl̤am * ītu avaṉ kai motirame (8)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

325. “O Vaidehi, with hair dark as kohl decorated with beautiful flowers, this is my request. In our search for you, the king of Ayodhya told all these to me and the monkey chief. so that I could search for you. Here is a ring from his hand— the best of all signs that I am his messenger. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மைத்தகு மை போன்று கறுமை; மா மலர் நிறைந்த மலரணிந்த; குழலாய்! கூந்தலையுடைய; வைதேவீ வைதேகிப் பிராட்டியே!; விண்ணப்பம் ஓர் விண்ணப்பம் இராமனோடு; ஒத்த சுக துக்கங்களில் ஒத்தவர்கள் என்ற; புகழ் புகழுடைய; வானரக் கோன் வானரத் தலைவன்; உடன் சுக்ரீவனோடு கூட; இருந்து நினைத் தேட இருந்து தங்களைத்தேடியதை; அத்தகு சீர் அவ்வகை சீர்மை மிக்க குணமுடைய; அயோத்தியர்கோன் அயோத்தி மன்னன்; அடையாளம் இவை இந்த அடையாளங்களை; மொழிந்தான் கூறினான்; இத்தகையால் இவ்விதமாக வந்த; அடையாளம் ஈது அடையாளம் இது; அவன் கை மோதிரமே இராமபிரானின் கை மோதிரமே
vaitevī o mother Sita!; kuḻalāy! with hair; mā malar adorned with flowers that are; maittaku dark like kohl; viṇṇappam one request; ayottiyarkoṉ the king of Ayodhya!; attaku cīr of such noble character; iruntu niṉait teṭa searched for you along; uṭaṉ with sugriva; vāṉarak koṉ the leader of the monkeys; pukaḻ who has great fame; ŏtta and known to see joy and sorrow in similar way; mŏḻintāṉ he spoke of; aṭaiyāl̤am ivai these signs; aṭaiyāl̤am ītu another proof; ittakaiyāl that I came with; avaṉ kai motirame is Rama's ring

PAT 3.10.9

326 ## திக்குநிறைபுகழாளன் தீவேள்விச்சென்றநாள் *
மிக்கபெருஞ்சபைநடுவே வில்லிறுத்தான்மோதிரம்கண்டு *
ஒக்குமால்அடையாளம் அனுமான்! என்றுஉச்சிமேல்
வைத்துக்கொண்டு * உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே. (2)
326 ## திக்கு நிறை புகழாளன் * தீ வேள்விச் சென்ற நாள் *
மிக்க பெரும் சபை நடுவே * வில் இறுத்தான் மோதிரம் கண்டு **
ஒக்குமால் அடையாளம் * அனுமான் என்று * உச்சிமேல்
வைத்துக்கொண்டு உகந்தனளால் * மலர்க்குழலாள் சீதையுமே (9)
326 ## tikku niṟai pukazhāl̤aṉ * tī vel̤vic cĕṉṟa nāl̤ *
mikka pĕrum capai naṭuve * vil iṟuttāṉ motiram kaṇṭu **
ŏkkumāl aṭaiyāl̤am * aṉumāṉ ĕṉṟu * uccimel
vaittukkŏṇṭu ukantaṉal̤āl * malarkkuzhalāl̤ cītaiyume (9)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

326. Sita was overwhelmed to see the ring of Rāma, praised in all directions. She thought of the day when Rāma came to Janaka’s palace, during the yagna, broke the bow in the middle of a large assembly of kings and married her. Sita, decorated with flowers on her hair, exclaimed, “O Hanuman, is a marvelous sign!” and joyfully placed the ring on her head with respect.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திக்கு நிறை எல்லா திக்குகளிலும் நிறைந்த; புகழாளன் புகழையுடைய ஜனகன்; தீ வேள்வி தீ வளர்த்து செய்த யாகத்தில்; சென்ற விசுவாமித்திரருடன்; நாள் ராமபிரான் சென்ற சமயம்; மிக்க பெருஞ்சபை மிக பெரிய சபை; நடுவே நடுவில்; வில் இறுத்தான் வில்லை முறித்த ராமபிரானின்; மோதிரம் கண்டு மோதிரத்தைப் பார்த்ததும்; அனுமான்! அனுமனே!; அடையாளம் இந்த மோதிரமும் நீ சொன்ன அடையாளங்களும்; ஒக்குமால் ஒத்திருக்கின்றன என்று சொல்லி; என்று உச்சி மேல் மோதிரத்தை தன் தலை மீது; வைத்துக் கொண்டு வைத்துக் கொண்டு; உகந்தனளால் மகிழ்ந்தாள்
pukaḻāl̤aṉ king janaka whose greatness was; tikku niṟai known in all directions; tī vel̤vi conducted a yagna; nāl̤ Rama attended it; cĕṉṟa along with sage vishwamitra; naṭuve in the middle of; mikka pĕruñcapai that grand assembly; vil iṟuttāṉ Rama broke the bow; motiram kaṇṭu after seeing the ring, Sita exclaimed; aṉumāṉ! o hanuman!; aṭaiyāl̤am this ring and all the proofs; ŏkkumāl matches well; vaittuk kŏṇṭu She then placed; ĕṉṟu ucci mel the ring on Her head; ukantaṉal̤āl and rejoiced

PAT 3.10.10

327 வாராரும்முலைமடவாள் வைதேவிதனைக்கண்டு *
சீராரும்திறலனுமன் தெரிந்துரைத்தஅடையாளம் *
பாராரும்புகழ்ப்புதுவைப் பட்டர்பிரான்பாடல்வல்லார் *
ஏராரும்வைகுந்தத்து இமையவரோடுஇருப்பாரே. (2)
327 ## வார் ஆரும் முலை மடவாள் * வைதேவி தனைக் கண்டு *
சீர் ஆரும் திறல் அனுமன் * தெரிந்து உரைத்த அடையாளம் **
பார் ஆரும் புகழ்ப் புதுவைப் * பட்டர்பிரான் பாடல் வல்லார் *
ஏர் ஆரும் வைகுந்தத்து * இமையவரோடு இருப்பாரே (10)
327 ## vār ārum mulai maṭavāl̤ * vaitevi taṉaik kaṇṭu *
cīr ārum tiṟal aṉumaṉ * tĕrintu uraitta aṭaiyāl̤am **
pār ārum pukazhp putuvaip * paṭṭarpirāṉ pāṭal vallār *
er ārum vaikuntattu * imaiyavaroṭu iruppāre (10)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

327. The Pattarpiran of Puduvai, praised by all the world, described in pāsurams the signs by which the famous Hanuman convinced Vaidehi the beautiful one with tender covered breasts. If devotees recite these pāsurams they will stay with him in His divine abode (Vaikuntam).

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வார் ஆரும் கச்சணிந்த; முலை மடவாள் மடப்ப குணமுடையவளான; வைதேவிதனை சீதாப் பிராட்டியை; கண்டு பார்த்து; சீர் ஆரும் சீர்மை பொருந்திய; திறல் அனுமன் திறமையுடைய அனுமன்; தெரிந்து உரைத்த ஆராய்ந்து சொன்ன; அடையாளம் அடையாளங்களை; பார் ஆரும் புகழ் உலகப்புகழ் பெற்ற; புதுவைப் பட்டர் பிரான் பெரியாழ்வார் அருளிச்செய்த; பாடல் வல்லார் பாசுரங்களை அனுசந்திப்பவகள்; ஏர் ஆரும் எல்லா நன்மைகளும் நிறைந்த; வைகுந்தத்து ஸ்ரீவைகுண்டத்தில்; இமையவரோடு நித்யத்ஸூரிகளோடு; இருப்பாரே இருப்பார்கள்
pāṭal vallār those who recite these hymns; putuvaip paṭṭar pirāṉ composed by Periyalvar; pār ārum pukaḻ who is world-renowned; aṭaiyāl̤am that describes the proofs; tĕrintu uraitta laid out by; tiṟal aṉumaṉ the skillful Hanuman; cīr ārum who was endowed with virtue; kaṇṭu to; vaitevitaṉai mother Sita who; vār ārum is wearing a dress; mulai maṭavāl̤ and has modest character; iruppāre will remain in; vaikuntattu Srivaikuntha that is; er ārum filled with all goodness; imaiyavaroṭu among nithyasuris