PAT 3.10.6

ஆத்திரத்தினால் காகாசுரன் கண்ணை அறுத்தது

323 சித்திரகூடத்துஇருப்பச் சிறுகாக்கைமுலைதீண்ட *
அத்திரமேகொண்டெறிய அனைத்துலகும்திரிந்தோடி *
வித்தகனே. இராமாவோ. நின்னபயம்என்றுஅழைப்ப *
அத்திரமேயதன்கண்ணை அறுத்ததும்ஓரடையாளம்.
323 cittirakūṭattu iruppac * ciṟukākkai mulai tīṇṭa *
attirame kŏṇṭu ĕṟiya * aṉaittu ulakum tirintu oṭi **
vittakaṉe irāmāvo * niṉ apayam ĕṉṟu azhaippa *
attirame ataṉkaṇṇai * aṟuttatum or aṭaiyāl̤am (6)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

323. “When you were in Chitrakoodam, a small crow came and pricked your breast. Rāma shot an arrow at the crow in fury and the frightened crow flew all over the world. Unable to get help, he fell at your feet, saying ‘O Rāma, clever one, you are my refuge. ’ The Brahmāstra blinded its one eye. This is a proof that I am Rāma's messenger.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சித்திரகூடத்து சித்திரகூடத்தில்; இருப்ப சிறு இருந்த போது சிறிய; காக்கை காக்கையின் வடிவு எடுத்து வந்த ஜயந்தன்; முலை தீண்ட தங்களுடைய மார்பகத்தை தீண்ட; அத்திரமே கோபமுற்ற இராமன் பிரம்மாஸ்திரம்; கொண்டு எறிய எடுத்து எறிய; அனைத்து உலகும் எல்லா உலகங்களிலும்; திரிந்து திரிந்து அலைந்து போய்; ஓடி தப்பமுடியாமல் ஓடி; வித்தகனே! வியப்புக்குரிய பிரானே!; நின் அபயம் உன் காலடியிலேயே அபயம்; என்று அழைப்ப என்று கூறி விழ; அத்திரமே அந்த பிரம்மாஸ்திரமே; அதன் அந்தக் காக்கையின்; கண்ணை ஒரு கண்ணை மட்டும்; அறுத்ததும் அறுத்து விட்டதும்; ஓர் அடையாளம் ஓர் அடையாளம்
cittirakūṭattu at the chitrakoot; iruppa ciṟu disguised as a small; kākkai crown came jayantan; mulai tīṇṭa and when he was poking on Your chest; attirame it angered, Rama who took the brahmastra; kŏṇṭu ĕṟiya and attacked it; tirintu it wandered and swirled; aṉaittu ulakum across all worlds,; oṭi unable to escape; vittakaṉe! o wondrous being!; niṉ apayam in Your feet, there is refuge; ĕṉṟu aḻaippa saying so, it fell; attirame that very brahmastra; aṟuttatum only destroyed; kaṇṇai one of the eyes; ataṉ of that crow; or aṭaiyāl̤am this is a proof that i am Rama's messenger