Chapter 9

Two girls talking to each other about the glories of Lord Rama and Lord Krishna - (என் நாதன்)

உந்தி பறத்தல்
Two girls talking to each other about the glories of Lord Rama and Lord Krishna - (என் நாதன்)
Periyāzhvār has so far delighted in describing Krishna's qualities. Now, he wishes to rejoice in the noble virtues of Rama as well. He transforms into two cowherd women. Through the voice of one woman, he narrates the virtues of Rama, and through the voice of the other, he recounts the qualities of Krishna, immersing himself in the ocean of their greatness. This hymn is structured such that one verse praises Rama's greatness, and the next verse extols Krishna's greatness!
பெரியாழ்வார் இதுவரை கண்ணனின் பண்புகளையே கூறி மகிழ்ந்தார். இனி இராமனின் சீரிய குணங்களையும் கலந்து கூறி மகிழ விரும்பினார். தாமே இரண்டு ஆயர் பெண்களாக ஆனார். ஒரு பெண் வாயினால் இராம குணத்தையும், மற்றொரு பெண் வாயினால் கிருஷ்ணனின் குணத்தையும் கூறி அவர்களின் பெருமைக் கடலில் மூழ்குகிறார். ஒரு பாசுரம் இராமனின் பெருமையையும் மற்றொரு பாசுரம் கிருஷ்ணனின் பெருமையையும் கூறுவதாக இத்திருமொழி அமைந்துள்ளது!
Verses: 307 to 317
Grammar: Kaliththāḻisai, Taravu Kocchakakkalippā / கலித்தாழிசை, தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Getting freed from all hurdles
  • PAT 3.9.1
    307 ## என் நாதன் தேவிக்கு * அன்று இன்பப்பூ ஈயாதாள் *
    தன் நாதன் காணவே * தண்பூ மரத்தினை **
    வன் நாதப் புள்ளால் * வலியப் பறித்திட்ட *
    என் நாதன் வன்மையைப் பாடிப் பற * எம்பிரான் வன்மையைப் பாடிப் பற (1)
  • PAT 3.9.2
    308 என் வில் வலி கண்டு * போ என்று எதிர்வந்தான்
    தன் * வில்லினோடும் * தவத்தை எதிர்வாங்கி **
    முன் வில் வலித்து * முதுபெண் உயிருண்டான்
    தன் * வில்லின் வன்மையைப் பாடிப் பற * தாசரதி தன்மையைப் பாடிப் பற (2)
  • PAT 3.9.3
    309 உருப்பிணி நங்கையைத் * தேர் ஏற்றிக் கொண்டு *
    விருப்புற்று அங்கு ஏக * விரைந்து எதிர் வந்து **
    செருக்கு உற்றான் * வீரம் சிதைய * தலையைச்
    சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற * தேவகி சிங்கத்தைப் பாடிப் பற (3)
  • PAT 3.9.4
    310 மாற்றுத்தாய் சென்று * வனம்போகே என்றிட *
    ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து * எம்பிரான் என்று அழ **
    கூற்றுத் தாய் சொல்லக் * கொடிய வனம் போன *
    சீற்றம் இலாதானைப் பாடிப் பற * சீதை மணாளனைப் பாடிப் பற (4)
  • PAT 3.9.5
    311 பஞ்சவர் தூதனாய்ப் * பாரதம் கைசெய்து *
    நஞ்சு உமிழ் நாகம் * கிடந்த நற்பொய்கை புக்கு **
    அஞ்சப் பணத்தின்மேல் * பாய்ந்திட்டு அருள்செய்த *
    அஞ்சன வண்ணனைப் பாடிப் பற * அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற (5)
  • PAT 3.9.6
    312 முடி ஒன்றி * மூவுலகங்களும் ஆண்டு * உன்
    அடியேற்கு அருள் என்று * அவன்பின் தொடர்ந்த **
    படியில் குணத்துப் * பரத நம்பிக்கு * அன்று
    அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற * அயோத்தியர் கோமானைப் பாடிப் பற (6)
  • PAT 3.9.7
    313 காளியன் பொய்கை * கலங்கப் பாய்ந்திட்டு * அவன்
    நீள்முடி ஐந்திலும் * நின்று நடம்செய்து **
    மீள அவனுக்கு * அருள்செய்த வித்தகன் *
    தோள் வலி வீரமே பாடிப் பற * தூ மணிவண்ணனைப் பாடிப் பற (7)
  • PAT 3.9.8
    314 தார்க்கு இளந்தம்பிக்கு * அரசு ஈந்து * தண்டகம்
    நூற்றவள் சொற்கொண்டு போகி * நுடங்கு இடைச்
    சூர்ப்பணகாவைச் * செவியொடு மூக்கு * அவள்
    ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற * அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற (8)
  • PAT 3.9.9
    315 மாயச் சகடம் உதைத்து * மருது இறுத்து *
    ஆயர்களோடு போய் * ஆநிரை காத்து ** அணி
    வேயின் குழல் ஊதி * வித்தகனாய் நின்ற *
    ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற * ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற (9)
  • PAT 3.9.10
    316 காரார் கடலை அடைத்திட்டு * இலங்கை புக்கு *
    ஓராதான் பொன்முடி * ஒன்பதோடு ஒன்றையும் **
    நேரா அவன்தம்பிக்கே * நீள் அரசு ஈந்த *
    ஆராவமுதனைப் பாடிப் பற * அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற (10)
  • PAT 3.9.11
    317 ## நந்தன் மதலையைக் * காகுத்தனை நவின்று *
    உந்தி பறந்த * ஒளியிழை யார்கள்சொல் **
    செந்தமிழ்த் தென்புதுவை * விட்டு சித்தன்சொல் *
    ஐந்தினோடு ஐந்தும்வல் லார்க்கு * அல்லல் இல்லையே (11)