PAT 3.10.8

மோதிரத்தை அடையாளமாகக் காட்டியது

325 மைத்தகுமாமலர்க்குழலாய்! வைதேவீ! விண்ணப்பம் *
ஒத்தபுகழ்வானரக்கோன் உடனிருந்துநினைத்தேட *
அத்தகுசீரயோத்தியர்கோன் அடையாளமிவைமொழிந்தான் *
இத்தகையால்அடையாளம் ஈதுஅவன்கைமோதிரமே.
325 mait taku mā malarkkuzhalāy * vaitevī viṇṇappam *
ŏtta pukazh vāṉarakkoṉ * uṭaṉ iruntu niṉait teṭa **
attaku cīr ayottiyarkoṉ * aṭaiyāl̤am ivai mŏzhintāṉ *
it takaiyāl aṭaiyāl̤am * ītu avaṉ kai motirame (8)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

325. “O Vaidehi, with hair dark as kohl decorated with beautiful flowers, this is my request. In our search for you, the king of Ayodhya told all these to me and the monkey chief. so that I could search for you. Here is a ring from his hand— the best of all signs that I am his messenger. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மைத்தகு மை போன்று கறுமை; மா மலர் நிறைந்த மலரணிந்த; குழலாய்! கூந்தலையுடைய; வைதேவீ வைதேகிப் பிராட்டியே!; விண்ணப்பம் ஓர் விண்ணப்பம் இராமனோடு; ஒத்த சுக துக்கங்களில் ஒத்தவர்கள் என்ற; புகழ் புகழுடைய; வானரக் கோன் வானரத் தலைவன்; உடன் சுக்ரீவனோடு கூட; இருந்து நினைத் தேட இருந்து தங்களைத்தேடியதை; அத்தகு சீர் அவ்வகை சீர்மை மிக்க குணமுடைய; அயோத்தியர்கோன் அயோத்தி மன்னன்; அடையாளம் இவை இந்த அடையாளங்களை; மொழிந்தான் கூறினான்; இத்தகையால் இவ்விதமாக வந்த; அடையாளம் ஈது அடையாளம் இது; அவன் கை மோதிரமே இராமபிரானின் கை மோதிரமே
vaitevī o mother Sita!; kuḻalāy! with hair; mā malar adorned with flowers that are; maittaku dark like kohl; viṇṇappam one request; ayottiyarkoṉ the king of Ayodhya!; attaku cīr of such noble character; iruntu niṉait teṭa searched for you along; uṭaṉ with sugriva; vāṉarak koṉ the leader of the monkeys; pukaḻ who has great fame; ŏtta and known to see joy and sorrow in similar way; mŏḻintāṉ he spoke of; aṭaiyāl̤am ivai these signs; aṭaiyāl̤am ītu another proof; ittakaiyāl that I came with; avaṉ kai motirame is Rama's ring