PAT 3.10.5

சித்திரகூடத்தில் பரதன் இராமனை வணங்கியது

322 மானமருமெல்நோக்கி! வைதேவீ! விண்ணப்பம் *
கானமரும்கல்லதர்போய்க் காடுறைந்தகாலத்து *
தேனமரும்பொழிற்சாரல் சித்திரகூடத்துஇருப்ப *
பால்மொழியாய்! பரதநம்பி பணிந்ததும்ஓரடையாளம்.
322 māṉ amarum mĕṉnokki * vaitevī ! viṇṇappam *
kāṉ amarum kal-atar poyk * kāṭu uṟainta kālattu **
teṉ amarum pŏzhil cāral * cittirakūṭattu iruppa *
pālmŏzhiyāy paratanampi * paṇintatum or aṭaiyāl̤am (5)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

322. “O Vaidehi, as lovely as a doe, with words as sweet as milk, This is my request. You and Rāma went to the forest and stayed in Chitrakoodam, you walked along stony paths where the mountain slopes are covered with groves and flowers drip honey. There Bharatha came and worshiped you. This tells you I am a messenger from Rāma.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மான் அமரு பேடை மானைப் போன்ற; மெல் நோக்கி மென்மையான பார்வையுடைய; வைதேவீ! வைதேகிப் பிராட்டியே!; விண்ணப்பம் ஓர் விண்ணப்பம்; கான் அமரும் காட்டிலே; கல் அதர் கல் நிறைந்த; போய் வழியிலேயே சென்று; காடு உறைந்த காலத்து காட்டில் வசித்தபோது; தேன் அமரும் தேன் நிறைந்த; பொழில் மலர் வனத்தின்; சாரல் மலையடிவாரத்தில்; சித்திரகூடத்து சித்திரகூட பர்வதத்தில்; இருப்ப நீங்கள் இருந்தபோது; பால் பால் போன்ற; மொழியாய்! இனிய பேச்சையுடையவளே!; பரத நம்பி குணவானான தம்பி பரதன்; பணிந்ததும் வந்து வணங்கியதும்; ஓர் அடையாளம் ஓர் அடையாளமாகும்
vaitevī! oh mother Vaidehi; māṉ amaru who is like a deer with a beautiful body; mĕl nokki with a soft and gentle gaze; viṇṇappam one request; iruppa when you and Rama stayed; cāral at the foothills of; cittirakūṭattu Chitrakoot; kāṭu uṟainta kālattu when You lived; kāṉ amarum in the forest; poy going along the path; kal atar filled of stones; pŏḻil and flowery forest; teṉ amarum with flowers filled with honey; mŏḻiyāy! o sweet-voiced One!; pāl like milk; parata nampi the virtuous brother, bharatha; paṇintatum came and offered his respects; or aṭaiyāl̤am this is a proof that i am Rama's messenger